உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள்அகரமுதலி குகரவரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

திருக்குறள் அகரமுதலி குகர வரிசை

[தொகு]

கு

[தொகு]

கு

அக இணைப்பான்கள்
[தொகு]

குட

கு
= (4-ஆம் வேற்றுமை உருபு) கொடைப்பொருளில்:- 12, 15, 101, 218, 221, 231, 232, 361, 412, 905, 1006, 1007, 1029, 1035, 1066, 1077, 1089, 1142, 1161, 1192, 1195, 1225;
= பகைப்பொருளில்:- 203, 238, 311, 313, 608, 623, 851, 858, 861, 894, 924, 1050, 1102, 1225, 1231, 1291, 1293;
= நேர்ச்சிப் பொருளில்:- 7, 8, 20, 41, 42, 59, 65, 72, 73, 79, 94, 120, 122, 125, 149, 156, 190, 261, 267, 345, 354, 377, 387, 390, 400, 412, 414, 429, 432, 436, 449, 452, 453, 456, 472, 481, 505, 518, 527, 533, 534, 543, 557, 570, 572, 573, 575, 578, 582, 618, 647, 658, 664, 693, 701, 733, 741, 745, 775, 789, 802, 808, 823, 843, 864, 865, 869, 918, 932, 942, 945, 960, 971, 972, 987, 988, 989, 999, 1005, 1012, 1014, 1026, 1052, 1066, 1070, 1099, 1108, 1115, 1124, 1154, 1180, 1199, 1260, 1269, 1272, 1288, 1305, 1319, 1321;
= தகவுப் பொருளில்:- 4, 18, 24, 30, 40, 70, 76, 86, 95, 110, 112, 115, 118, 125, 139, 148, 235, 245, 247, 252, 262, 269, 290, 299, 318, 328, 344, 347, 368, 382, 383, 391, 396, 462, 492, 515, 533, 556, 604, 667, 682, 726, 760, 762, 766, 781, 868, 910, 953, 981, 998, 1015, 1024, 1032, 1120, 1123, 1124, 1131, 1193, 1211, 1281, 1299, 1330;
= அதுவாதல் பொருளில்:- 138, 261, 802, 1084, 1106, 1113;
= பொருட்டு என்னும் பொருளில்:- 67, 212, 263, 317, 319, 679, 684, 1023, 1088, 1136, 1181, 1212, 1228, 1291;
= முறைப்பொருளில்:- 149, 388, 790;
= ‘ஆதி’ப் பொருளில்:- 7, 26, 31, 68, 71, 80, 178, 243, 340, 346, 352, 353, 392, 421, 454, 457, 458, 476, 538, 600, 627, 636, 689, 690, 791, 863, 877, 986, 1003, 1028, 1076, 1117, 1129, 1151, 1162, 1176, 1181, 1200, 1237;
= கு- செய்யுள் விகாரத்தால் தொக்கவை, 1268, 1326;
தொகை:- பகைப்பொருளில்:- 204, 855, 1091;
நேர்ச்சிப் பொருளில்:- 399, 802, 1006, 1021, 1082;
தகவுப் பொருளில்:- 60, 225, 716, 720, 847, 904, 1036, 1295, 1326;
பொருட்டுப் பொருளில்:- 157, 506, 1149;
முறைப் பொருளில்:- 25, 70, 141, 147, 148, 875;
ஆதிப் பொருளில்:- 25, 508, 585, 671, 714, 737, 738, 771, 834, 966, 967, 1031.
குடங்கருள்
[தொகு]
குடங்கருள்
= குடிலுள், 890.
குடம்பை
= கூடு (உவம ஆகுபெயர்) = முட்டை, 338.
குடி
= மரபு, குடும்பம், 171, 601, 602, 603, 604, 609, 887, 888, 1022, 1023, 1025, 1028, 1030;
= உயர் குடி, உயர்ந்த மரபு, 502, 681, 794, 952, 954, 957, 992;
= (சினையாகுபெயர்) = நாடு, 381;
= (பண்பாகு பெயர்) = குடியின்கண் பிறந்தவர், 955;
= குடிமக்கள் = ஆட்சிக்கு உட்பட்டவர், 390, 542, 544, 549, 554, 632;
= [குடிசெயல்வகை]=ஒருவன் தான் பிறந்த குடியை உயரச்செய்தலின் திறம். அதி.103.
குடிக்கு
= உயர்ந்த மரபிற் பிறந்தவருக்கு, 953.
குடிமை
= உயர்குடிப் பிறப்புடைமை, 133, 793;
=[குடிமை]=உயர்ந்த குடியின்கட் பிறந்தாரது தன்மை, அதி.96.
குடிமைக்கண்
= உயர்குடிப் பிறப்புடையான்கண், 608.
குடியை
= குடும்பத்தை, 602;
= குடிக்காகும் வினையை, 1024.
குடியொடு
= குடும்பத்தோடு, 898.
குடும்பத்தை
= குடியை, 1029.
குடை
= கவிகை, 1034.
குண
[தொகு]
குண
= [குண நலம்]நற்குணங்களாலாகிய, 982.
குணத்தான்
= குணங்களையுடையவன், 9.
குணம்
= நற்பண்பு, 9, 29, 504, 1125.
குணன்
= நற்பண்பு, 793, 868.
குதித்தல்
[தொகு]
குதித்தல்
= கடத்தல், 269.
குத்து
= (அலகாற்)கொத்துதல், 490.
குரை
= (இசைநிறை - அசைச்சொல்), 1045.
குலத்தில்
[தொகு]
குலத்தில்
= உயர்குடியில், 959.
குலத்தின்கண்
= குடிப்பிறப்பினிடத்தில், 958.
குலம்
= குடிமரபு, 956, 960, 1019.
குலன்
= குடிப்பிறப்பு, 223.
குவளை
[தொகு]
குவளை
= கருந்தாமரைப்பூ, 1114.
குழல்
= புல்லாங்குழலிசை, 66, 1228.
குழவி
= குழந்தை, 757.
குழாத்து
= [குழாத்தற்று](காண்போர்)கூட்டம், 332.
குழாஅத்து
= அவையின்கண், 840.
குழு
= கூட்டம், 735.
குழை
= காதணி, 1081.
குழையும்
= வாடும், 90.
குள
= [குளவளா] குளத்தினது(பரப்பு), 523.
குளித்தானை
= முழுகியவனை, 929.
குறி
= (குறித்த அளவு) [குறியெதிர்ப்பை] = ஓர் அளவு குறித்து வாங்கி அவ்வாங்கிய அளவே எதிர் கொடுப்பது, 221;
= நேர் இலக்கு, 1095.
குறித்த
= நிலைக்களனாகக் கொண்டுவிடா, 1013.
குறித்தது
= கருதியது, 704;
= நிலைக்களனாகக் கொண்டுவிடாது, 1013.
குறித்தமையான்
= கருதியமையால், 827.
குறிப்பின்
= மெய்ப்பாட்டினால், அடையாளத்தால், 703;
= காட்சியால் = அறிவால், 705.
குறிப்பு
= இங்கிதம் = மெய்ப்பாட்டால் விளங்கும் கருத்து, 696, 703, 705, 1253;
= (கருதிய)கருமம், 701;
= செயல்கள், 1097;
=[குறிப்பறிதல்] = அரசர் கருதியவதனை அவர் கூறாமல் அறிதல், அதி.71.
=[குறிப்பறிதல்] = தலைமகன் தலைமகள் குறிப்பினை அறிதலும், தோழி குறிப்பினையறிதலும், அத்தோழி அவ்விருவர் குறிப்பினை அறிதலுமாம், அதி.110;
=[குறிப்பறிவுறுத்தல்] = தலைமகன், தலைமகள், தோழி என்றிவர் ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்தல், அதி.128.
குறுகுதல்
= நெருங்குதல், 820.
குறுகும்
= நெருங்கும்(போது), 1104.
குறும்
= சிறிய(வளையினையுடையாள்), 1135.
குறும்பு
= குறும்பர் = சதிசெய்யும் கூட்டத்தார், 735.
குறை
= இன்றியமையாப் பொருள், 612;
= சந்து = சந்தி, 680;
= உற்ற குறை, 908.
குறையின்
= குறைந்தால், 941.
குற்ற
=[குற்றப்படின்]குற்றங்களில்(தாழுமானால்) (குற்றம் பார்), 272.
குற்றத்தார்க்கு
= பிழைபுரிந்தவர்க்கு, 924.
குற்றத்தின்
= பிழைகளினின்றும் (குற்றம்பார்), 502.
குற்றம்
= பிழை, 171, 188, 190, 433, 434, 436, 504, 549, 604, 609, 793, 846, 868, 957, 980, 1025;
= மூவகைத்துன்பம், 1029;
=[குற்றங்கடிதல்] (காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் எனப்பட்ட/காம க்ரோத லோப மோக மத மாற்சரியம் எனும்) குற்றங்கள் (ஆறனையும் அரசன் தன்கண்) நிகழாமற் கடிதல், அதி.44.
குன்ற
= தவற, 134;
= கெட, 898;
= தாழ, 961.
குன்றல்
= குறைதல், 778;
= தேய்தல், 811.
குன்றா
= குறையாத, 601, 736, 793.
குன்றி
= குன்றி மணி, 277, 965.
குன்றிக்கால்
= குறைந்தால், 14.
குன்றின்
= குறைந்தால், 990;
= மலைபோல, 965.
குன்று
= மலை (சிறுமலை), 29, 758, 898.
குன்றும்
= குறையும், 17, 239, 560.
குன்றுவ
= கீழான செயல்கள், 954, 965.
குன்றுவர்
= தாழ்வர், 965.


குகர வரிசை முற்றும்

திருக்குறள்அகரமுதலி கூகாரவரிசை

[தொகு]

கூகாரம்

கூ

[தொகு]
கூகையை
= கோட்டானை, 481.
கூடலில்
= புணர்ச்சியின்கண், 1327, 1328.
கூடற்கண்
= புணர்ச்சியின்கண், 1284.
கூடா
= பொருந்தாத[கூடாவொழுக்கம்] = (தவத்தோடு பொருந்தாததாய) தீய (காம) ஒழுக்கம், அதி.28;
=[கூடாநட்பு] = (தமக்கு வாய்க்குமிடம் பெறுந்துணையும்)புறத்தாற் கூடியொழுகுவார் நட்பு, அதி.83.
கூடாது
= சேராது, 887.
கூடி
= நெஞ்சு ஒத்து, 765, 1330.
கூடிய
= மேற்பொருந்திய, 1264.
கூடியார்
= இடைவிடாது எய்தியவர், 1109.
கூடின்
= சேர்ந்தால், 887.
கூடும்
=[கைகூடும்] உண்டாவதாம், 269;
= (கை)அகத்ததாம், 484.
கூடுவேம்
= சேரக்கடவோம், 1310.
கூத்து
= நாடகம், 332.
கூப்பி
= கும்பிட்டு, 260.
கூம்பல்
= குவிதல், 425.
கூம்பும்
=[கூம்பும் பருவத்து](வினைமேற்)செல்லாதிருக்கும்(காலத்தில்), 490.
கூர்
=[கூர்ங்கோட்டது] கூர்மையாகிய(மருப்புடையது/கொம்புடையது), 599.
கூரியது
= கூர்மையானது, 759.
கூர்ந்து
= மிகுந்து (= மிகுந்தால்), 1010
கூர்மையரேனும்
= நுட்பமதியுடையவராயினும், 997.
கூலி
= கூலியளவு, 619.
கூழ்
= சோறு, 64;
= உணவிற்கேதுவாகிய பொருள், 381, 554;
=[பைங்கூழ்] பயிர், 550.
கூழ்த்து
= உணவினையுடையது, 745.
கூறப்படும்
= சொல்லப்படும், 186.
கூறல்
= சொல்லுதல், 100, 638, 1236;
=[இனியவை கூறல்] அதி.10.
கூறாமை
= சொல்லவேண்டாமல், 701, 704;
=[புறங்கூறாமை] அதி. 19.
கூறான்
= கூறமாட்டான், 181.
கூறி
= சொல்லி, 183.
கூறிவிடும்
= திண்ணமாகச் சொல்லிவிடும், 960.
கூறின்
= சொன்னால், 22, 933.
கூறும்
=[கூறும் ஆக்கம்] சொல்லும் (ஆக்கத்தை), 183;
=[மீக்கூறும்] (உயர்த்திச்) சொல்லும், 386.
கூறுவான்
= சொல்லுவான், 186.
கூற்றத்தை
= இயமனை/எமனை, 894.
கூற்றம்
= இயமன்/எமன், 269, 1085.
கூற்று
= இயமன்/எமன், 326, 765, 1050, 1083;
=[கூற்றது] = திறத்தது = கூறுபாடு உடையது, 950.
கூன்
=[கூன்கையர்] வளைவாகிய/வளைந்த, முறுக்கியதான, 1077.


கூகார வரிசை முற்றும்


அக இணைப்பான்கள்
[தொகு]

ஐந் ஐம் ஐய்

பார்க்க:

அகர, ஆகார வரிசைகள்
இகரம்
ஈகாரம்
உகரம்
ஊகாரம்
எகரம்
ஏகாரம்
ஒகரம்
ஓகாரம்

ககரம்- காகாரம், கிகரம், கீகாரம் -கி, கீ. குகரம், கூகாரம்- திருக்குறள்அகரமுதலி கெகரவரிசை திருக்குறள்அகரமுதலி கைகாரவரிசை திருக்குறள்அகரமுதலி கொகரவரிசை திருக்குறள்அகரமுதலி கோகாரவரிசை திருக்குறள்அகரமுதலி கௌகாரவரிசை [[]] [[]]