உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள்அகரமுதலி கெகரவரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

திருக்குறள் அகரமுதலி கெகர வரிசை

[தொகு]

கெகரம்

[தொகு]

கெ

கெட
= அழிய, 359, 360, 1266.
கெடல்
= தவிர்ந்திருத்தல், 612;
= முற்றக்கெடுதல், 856, 893.
கெடாஅ
= (உரிமை)அறாமல், 809.


கெடின்
= கெட்டால், 309;
= இல்லையாயின், 854.
கெடு
= கெடுதல் = வறுமை, 117.
கெடுக
= அழிவானாக, 1062.
கெடுக்கும்
=[கெடுக்கும் தகைமையவர்]அழிக்கும்(பெருமையுடையவர்), 447;
= போக்கும், 937, 1043.
கெடுதல்
= அழிதல், 208.
கெடுத்து
= அழித்து, 938.
கெடுப்பது
= அழிவுசெய்வது, 15.
கெடுப்பார்
= (பகையாய்)அழிப்பவர், 418.
கெடும்
= அழியும் = இல்லையாகும், 109, 134, 166, 176, 283, 435, 437, 448, 466, 474, 479, 480, 548, 563, 566, 569, 601, 609, 614, 622, 763, 899, 1028, 1056, 1069;
= கெடாநின்றது 1203;
= [கெடுங்காலை] கெடுகின்ற(காலத்தில்), 799;
= [கெடும் நீரார்] இறக்கும்(இயல்பினையுடையார்), 605;
= உளவாகா, 360;
= இழக்கும், 553, 564.
கெடுவல்
= அழியக்கடவேன், 116.
கெட்டவிடத்து
= கெட்டதாயின், 736.
கெட்டாரை
= அழிந்தவரை, 539,
கெட்டார்க்கு
= அழிந்தவர்க்கு, 15;
= மானமழிந்தவருக்கு, 1293.
கெட்டான்
= இறந்தான், 967.
கெழீஇ
=[கெழீஇயிலர்] நல்வினை(யிலார்), 1194.
கெழு
= [கொழுதகை]உரிமை, 804;
= [கெழுதகைமை]உரிமை, 700, 802, 803, 808.


கெகர வரிசை முற்றும்

கேகார வரிசை

[தொகு]

கேகாரம்

[தொகு]

கே


கேடன்
=[அருங்கேடன் = கேடு அரியன்]= கேட்டினையுடையவன், 210.
கேடு
= அழிவு, 32, 115, 165, 169, 220, 235, 400, 478, 642, 700, 736, 858, 859, 889;
= ஆற்றல் இழத்தல், 307;
= அழிவுதரும் வினை, 204, 791.
கேட்க
= கேட்கவேண்டும், 414, 416, 695;
= வினவ, 587.
கேட்கும்
= ஏற்றுக்கொள்ளும், 648.
கேட்ட
= செவியேற்ற, 69, 1076.
கேட்டல்
= செவியேற்றல், 65.
கேட்டார்
= (நட்பாய்) ஏற்றுக்கொண்டவர், 643.
கேட்டால்
= [அருங்கேட்டால்] கெடுதியோடு =[அருங்கேட்டால்] கேடின்மையோடு, 732.
கேட்டின்
= கெடுதியின்கண், 796.
கேட்டு
= செவியேற்று, 1101.
கேட்பர்
= செவியேற்பர், 607.
கேட்பின்
= கேட்டால், 418, 423, 697.
கேணி
= கிணறு = கிணற்று நீர், 396.
கேண்மை
= நட்பு = சுற்றமாய் நடந்துகொள்ளும் தன்மை, 106, 441, 519, 709, 782, 792, 797, 799, 800, 809, 811, 812, 815, 818, 822, 839.
கேண்மையவர்
= நட்புடையவர், 807.
கேண்மையார்
= நண்பரது, 809.
கேள்
= நெருங்கிய நண்பன், 808, 882;
= காதலன், 1222.
கேளா
= கேட்காத, 418, 808.
கேளாதவர்
= கேட்காதவர், 66.
கேளாது
= கேட்காமல், 804;
= நீதி நூலைக் கடந்து, 893.
கேளார்
= (பகையாய்) ஏற்றுக்கொள்ளாதவர், 643.
கேளிர்
= நண்பர், சுற்றத்தார், 187, 615;
= காதலர், 1267.
கேள்வி
= கேட்டல், 413;
= [கேள்வி] கேட்கப்படு நூற்பொருள்களைக் கற்றறிந்தார் கூறக்கேட்டல், அதி.42.
கேள்வியர்
= கேள்வியுடையவர், 419.
கேள்வியவர்
= கேள்வியுடையவர், 417.
கேள்வியால்
= கேட்டலால், 418.


கேகார வரிசை முற்றும்

கைகார வரிசை

[தொகு]

கைகாரம்

கை


கை
= கை எனும் உறுப்பு, 64, 178, 260, 307, 371, 614, 727, 774, 788, 838, 879, 1035, 1036, 1077, 1157;
= அளவு, 567, 1271;
= உரிய ஒழுக்கம், 832;
= செய்யும் முறைமை, 836;
= கைத்தொழில், 935.
கைகளை
= கரங்களை, 1238.
கைகூடும்
= உண்டாவதாம், 269;
= (கை)அகத்ததாம், 484.
கைதூவேன்
= கையொழியேன் = முயற்சி ஒழியேன், 1021.
கைத்து
= கைப்பொருள் = செல்வம், 593, 758.
கைப்ப
= கசக்கும்படியாக = பொறாதாக, 389.
கைம்மாறு
= எதிர் உதவி, 211;
= தலைமாறு = விரோதம், 1183.
கையர்
= கைகளையுடையவர், 1077.
கையறியா
= (செய்வகை)அறியமாட்டாத (கை=செய்வகை), 836.
கையறியாமை
= (செய்வகை)அறியமாட்டாமை (கை=செய்வகை), 925.
கையால்
= கரத்தால் = கையைக் காட்டி, 894.
கையாறு
= [கையாறா] துன்பம் = (தொழிலறுதல்), 627.
கையிகந்த
= அளவுமீறிய = குற்றத்தின் மிக்க, 567.
கையிகந்து
= கைகடந்து, மீறி, 1271.
கையுள்
= கையகத்து, 828.
கைவிடல்
= ஏற்காது ஒழிதல், 450, 1245.
கைவிடுக
= ஒழிக, 928.
கைவிடுவார்
= விட்டு நீங்குகின்றவர், 79.


கைகார வரிசை முற்றும்


அக இணைப்பான்கள்
[தொகு]

குட

அகர, ஆகார வரிசைகள் இகரம் ஈகாரம் உகரம் ஊகாரம் எகரம் ஏகாரம் ஒகரம் ஓகாரம் ககரம்- குகரம், கூகாரம்- கொகரம், கோகாரம், கௌகாரம்- சகரம்,சாகாரம், சிகரம்,சீகாரம்,சுகரம்,சூகாரம்- செகரம்-சேகாரம், சொகரம்,சோகாரம்- ஞாகாரம் திருக்குறள்அகரமுதலி தகரவரிசை திருக்குறள்அகரமுதலி தாகாரவரிசை