தீர்வு
ஒலிப்பு
|
---|
பொருள்
தீர்வு(பெ)
- பிரச்சனை, சிக்கல் முதலியவற்றைத் தீர்க்கும் வழிமுறை; முடிவு, விடை
- பரிகாரம்
- பிராயச் சித்தம்
- நீங்குகை
- இசையில் தாளமுடிகொடுக்கை - தீர்மானம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- solution to a problem etc., conclusion, result, end
- antidote, remedy
- expiation
- removal, separation
- (Mus.) flourish of drum at the close of a taalam
பயன்பாடு
- காவிரிப் பிரச்சனைக்கு தீர்வு எப்போது கிடைக்கும்?
- நோயும் வலியும் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. நோய் தீர்க்க வரும் மருந்துகளும் மனிதனுக்கு மனிதன் பல்வேறு வகைகளில் தீர்வுகளைத் தருகின்றன(ஹோமியோபதி - ஒரு மாற்று அரசியல், நிஜந்தன்)
(இலக்கியப் பயன்பாடு)
- நோய் தந்தவனே நுவறீர்வுமெனா (கம்பரா. இரணி.113)
- சிவநிந்தை செய்வார்க்கிலை தீர்வு (பிரபுலிகைலாச. 40)
- தீர்விலா நண்வேண்டி (சீவக. 1755)
- ஒருதாளத்துக்கு இரண்டுபற்றாபத்தும் தீர்வு ஒன்றுமாக (சிலப். 3, 145, உரை)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +