தீர்வை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தீர்வை(பெ)
- வரி, சுங்கம்
- கலியாணஞ் செய்து கொண்டவனை விலக்கி விடுதற்குரிய செலவுத் தொகை.
- முடிவு
- நிச்சயம்
- பிராயச்சித்தம்
- தப்பும் வழி
- விதி
- நியாயத் தீர்ப்பு
- கணக்கு
- கீரிப்பிள்ளை
- மாந்தரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- duty, tax, toll (Colloq.)
- divorce fee
- conclusion, result, end
- certainty
- expiation
- escape
- divine judgment, fate
- judgment, decree
- (Arith.) sums
- mongoose
- funeral rites, obsequies
விளக்கம்
பயன்பாடு
- ஆயத் தீர்வை - excise duty
- தீர்வைச்சாவடி - custom-house
- தீர்வை செலுத்து - pay duty
- இந்த நிதியாண்டில் கலால் தீர்வை வசூல் குறிக்கோளைவிட குறைவாக இருப்பது பற்றி நிதியமைச்சர் ப சிதம்பரம் கவலை தெரிவித்தார். ([1])
- நன்செய், புன்செய் நிலங்களுக்கு தீர்வை குறைப்பு. (தினமணி, 06 மே 2010 )
- உபாத்தியார் இன்று தீர்வை போட்டார்
(இலக்கியப் பயன்பாடு)
- தீர்வையிற் சாக்காடுமின்றி சிறந்தார் கொல்லோ (பிரபோத. 13, 9).
- ஒன்றையே யடைகுவ ரிதுதீர் (கைவல். சந். 45).
- சிந்தையாகுல மிதற்குத் தீர்வையன்று (திருவாலவா48, 8).
- அரவுக்குறும் பெறிந்த சிறுகட் டீர் (மலைபடு. 504).
ஆதாரங்கள் ---தீர்வை--- DDSA பதிப்பு + வின்சுலோ +