பஞ்சகவ்வியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பசு மாடு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பஞ்சகவ்வியம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • பஞ்சகவ்யம் என்றால் பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவது. அவை 1)சாணம் 2) கோமியம் 3) பால் 4) நெய் 5) தயிர்
  • இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கபடுவதே பஞ்சகவ்யம் இது ஆயுர் வேத வைத்தியம் , பயிர் வளர்ப்பு இரண்டிலும் பயன்படுகிறது.
  • மேலும் சில மூலப்பொருட்களை சேர்த்து இதன் திறனை அதிகரித்து இயற்கை விவசாயத்தில் தற்போது பயன்படுத்துகிறார்கள்.
  • இது தமிழில் “ஆனைந்து” எனப்பெறும். உழவியலுக்கும் சித்த மருத்துவத்திற்கும் உரியது.
  • இன்றும் மிக ஆச்சாரமான அந்தணர் குடும்பங்களில் மகவை ஈன்றபின் பெண்களுக்கு பதினோறாம் நாள் தூய்மைக்காக உண்ணத் தரப்படுகிறது.மேலும் தீட்டு ஏற்படும் காலங்களில் அது நீங்கும்போதும், வெளிநாடு சென்று திரும்போதும், முக்கியமாக சாலிகிராம வழிபாடு உள்ள வீடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது.


பயன்பாடு
  • ஈசனுக்கு... நல்லெண்ணெய், பஞ்சகவ்வியம், பஞ்சாமிருதம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, எலுமிச்சம்பழச்சாறு, இளநீர், சந்தனம் ஆகிய 11 பொருட்களால் அபிசேகித்து, கும்ப ஜலத்தால் நீராட்டு முடிவடையும். (சக்தி விகடன், 28-டிசம்பர்-2010)
  • பஞ்சகவ்யம் --- இது வந்த நோயைப் போக்கும். இனிவரும் நோயை வராமல் தடுக்கும்.

[[1]]

(இலக்கியப் பயன்பாடு)

  • பஞ்சகவ்வியங் கொள்ளவோர் பசுவருளென்றான் (உத்தரரா. அசுவ. 129)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பஞ்சகவ்வியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :ஆனிடை ஐந்து - # - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சகவ்வியம்&oldid=1980083" இலிருந்து மீள்விக்கப்பட்டது