பஞ்சாட்சரம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பஞ்சாட்சரம்(பெ)
- சிவபிரானை அதிதெய்வமாகக் கொண்டதும் ` ந ம சி வா ய 'என்ற ஐந்து எழுத்துக்களாலானதுமான மந்திரம்; திருவைந்தெழுத்து
- திருநீறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- The five-lettered mantra whose presiding deity is Siva
- sacred ash
விளக்கம்
பயன்பாடு
- பஞ்சாட்சரம் என்னும் திருவைந்தெழுத்து மந்திரத்தைத் தூலம் (வெளிப்படையாகத் தொழுவது), சூக்கும்(புலப்படாதது-உணரக்கூடியது), அதிசூக்குமம்(ஞானிகளால் மட்டும் உணரமுடிவது) என மூவகையாக திருமூலர் திருமந்திரத்தில் விளக்குகிறார். தூல பஞ்சாட்சரம் அல்லது தூல ஐந்தெழுத்து என்பது சிவாயநம என்பதாகும். சிவாயநம என மானசீகமாகச் (மனதிற்குள்ளேயே கூறுதல்) செபித்தால் சூக்கும அசைவுகள் ஆகாயத்தில் பொருந்தி மூலாதாரம் முதலாக நிற்கும். நமசிவாய என்ற இறைவனை உடலில் பொருந்துமாறு செய்துவிடும். (மந்திர யோகம், முனைவர் சி.சேதுராமன்)
- சூக்கும பஞ்சாட்சரம் என்பது சிவாயநம என்பதை ஒளியாக நினைந்து ஓதுதல் ஆகும். சிவாய சிவ சிவ என்பது அதிசூக்கும பஞ்சாட்சரமாகும். சிவயநம என்பது சிவ பஞ்சாட்சரம். சிவாயநம என்பது சத்தி பஞ்சாட்சரம். வகாரம் நீண்டு தீர்க்கமாக இருப்பதால் சத்தி பஞ்சாட்சரமாகும் (மந்திர யோகம், முனைவர் சி.சேதுராமன்)
- இரண்டு பேர் என்னைக் கூட்டிச் சென்று மன அமைதிக்கான பஞ்சாட்சரத்தை , அதன் பெயர் valium என்றனர் , எமக்களித்து அறிதுயிலில் ஆழ்த்திவிட்டனர். (நான்காவது கொலை, ஜெயமோகன்)
- ”அட்ட அட்சரம் ஏற்கும் உள்ளம் பஞ்ச அட்சரம் பார்க்காது” (தசாவதாரம் திரைப்படப் பாடல், கவிஞர் வாலி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பஞ்சாட்சரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +