பயனர் பேச்சு:பரிதிமதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அன்பிற்கினிய நண்ப தகவலுழவனுக்கு,

ஒரு மொழியாக்க வேலைக்காக தற்செயலாகத்தான் விக்சனரியைப் பார்க்க நேரிட்டது.மிகவும் பயன்படக்கூடிய ஒரு தளம்.

பறவையியலில் எனக்கு ஆர்வமுண்டு.அதில் நாமே சொற்களைப் புகுத்தலாம் என்று தெரிந்தவுடன் மிகவும் ஆர்வமாக செயல்பட்டு விட்டேன் என்று எண்ணுகிறேன்!

நீங்கள் அளித்துள்ள படங்கள் அருமை.

நன்றி.

பரிதிமதி

அன்பு நண்ப தகவலுழவனுக்கு,

விக்சனரி என்னை ஆட்கொண்டு விட்டது (completely taken over). அதில் உங்கள் பங்கு அதிகம்.
விக்கிபீடியா தமிழில் Jupiter பற்றி பார்த்தேன். பல கலைச்சொற்களுக்கு தமிழ் சொற்கள் சரியல்லவோ என்று தோன்றியது. விக்சனரியுடன் இணைத்து செய்தார்கள் என்றால் சரியாக இருக்கும் அல்லவா? (i.e. people who write in விக்கிபீடியா may do well to have a look at விக்சனரி).பின்னர் அதை முடிந்த அளவு திருத்தினேன்.
விக்சனரியில் நீங்கள் செய்யும் வித்தைகள் எனக்கு ஆச்சரியம் கலந்த பொறாமையை அளிக்கின்றது. சொற்களை ஏற்றுவதிலேயே நான் நிறைவு அடைகின்றேன்.
நன்றி. வணக்கம்.
பரிதிமதி

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஓங்குக தமிழ் வளம் !

  • உங்கள் வேலைகளுக்கும் இடையில், நீங்கள் இங்கு பங்களிப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. எனக்கு பணிச்சுமைகள் கிடையாது. எனவே, அதிக நேரம் கிடைப்பதால் அதிக ஈடுபாடு காட்டமுடிகிறது. உங்களின் உரையாடல், எனக்கு உற்சாகத்தினை அளிக்கிறது. ஒரு வார்த்தையை, இங்கே வார்த்தெடுக்க ஏறத்தாழ ஒரு மணி நேரம் தேவை. குறைந்தது அரைமணி நேரம் எனக்குத் தேவைப்படுகிறது.
  • என்னுடன் உரையாட, முதலில் அண்மைய மாற்றங்கள் வாருங்கள். அங்குள்ள என்பெயரைச் சொடுக்கவும். பின் தோன்றும் பயனர்:தகவலுழவன் பக்கத்தின் மேலுள்ள உரையாடல் என்ற தத்தலைச் சொடுக்கி, தோன்றும் பக்கத்தில், என்னிடம் கூற விரும்பும் கருத்துக்களை தட்டச்சு செய்யவும். இங்ஙனம் செய்தால் மட்டுமே, உங்களது கருத்துக்கள் தானாகவே எனது கவனத்திற்கு வரும். இல்லையெனில், ஒவ்வொருமுறையும் நான் உங்கள் உரையாடல் பக்கத்தினை கவனித்தால் மட்டுமே, எனக்குத் தெரியும். தானாகவே தெரியவராது.
  • உங்களைப் போலவே தமிழ் விக்கிப்பீடியாவில் சொற்சுவையும், சொல்மேலாண்மையும் பற்றி நானும் கருதுகிறேன்.
நன்றி. (தகவலுழவன் 07:34, 30 ஏப்ரல் 2009 (UTC))



வரவேற்புரை[தொகு]

ஓங்குக தமிழ் வளம் !

வாங்க! பரிதிமதி,
நீங்கள் வந்ததிலே எனக்கு மிக்க மகிழ்ச்சிங்க!!
உமது பங்களிப்புகளும், இவ்விணையதளமும், மேலும் சிறக்க சிலவற்றினைச் சொல்லிக் கொள்ள விரும்புறங்க!!!
  • ஒரு குறிப்பிட்டச் சொல்லுக்குரிய, உமது கருத்துரைகளை, அந்தந்த சொல்லின் மேலுள்ள 'உரையாடல்' என்ற பக்கத்தில் தயங்காமல் தெரிவிக்கவும். அப்படி தெரிவித்தால், அக்கருத்துக்களை, அச்சொல்லை உருவாக்கியவர்கள் தவறாமல் காண, இங்கு உள்கட்டமைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
(எ.கா) கவுதாரி‎ (simple way), தூக்கணாங்குருவி (gallery presentation), முக்குளிப்பான் (detailed),
emerald dove (simple way), brahminy kite(video), அங்கே(literary detailed).

நீங்களும் கொஞ்சம் உங்க அனுபவத்தினைத் தாங்க. (tha.uzhavan ->gmail->com)

நன்றி. (தகவலுழவன் 06:54, 20 ஏப்ரல் 2009 (UTC))

மகிழ்ச்சியுரை[தொகு]


ஓங்குக தமிழ் வளம் !

  • நண்ப என்று நீங்கள் விளிக்கும் போதே நினைத்தேன். நிச்சயம் நீங்கள் மெத்தப்படித்தவராக இருக்க வேண்டும் என்று.. அதுவும் இயற்பியல் துறை பேராசிரியர். எனக்கு இயற்பியல் என்றாலே, ஙே..??? 'உஃசு..உஃசு.. அப்பா.. இப்ப நினைச்சாலும் கண்ண கட்டுதே'
  • உங்களுடன் உரையாடியதில் எனக்கு மகிழ்ச்சியே. எனக்கு பறவைகளைப் பற்றி, அடுத்து என்ன எழுதப் போகிறீர்கள்.. என்ற ஆர்வம் எப்பொழுதும் இருக்கிறது. தொடர்ந்து, கவனித்தே வருகிறேன்.
  • காகம் பற்றி விக்கிப்பீடியாவில், ஒரு சிறந்த கட்டுரையை எழுத வேண்டுகிறேன். ஏனெனில், உலகப்பறவையியல் நிபுணர் சலீம் அலி அவர்கள், தனக்குப் பிடித்தது காகம் என்று கூறியிருந்தார். அது ஏன்?
உங்களுக்கு பின்னாலே இருப்போமில்ல!..
  • உங்களுக்கு நேரம் இருக்கும் போது, உங்களுடன் சேர்ந்து நானும் பங்களிக்க விரும்புகிறேன். எனவே, தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் ஆக்கங்களின், நோக்கங்களை எப்பொழுதும் போல நான் மேம்படுத்துவேன்.

(தகவலுழவன் 02:11, 29 ஏப்ரல் 2009 (UTC))(tha.uzhavan ->gmail->com)

மாற்றமறிக[தொகு]

அவ்வப்பொழுது, எனது தொகுத்தல் அனுபவங்களைத் தங்களிடம் தெரியப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். அவைகள், பெரும்பாலும் உங்கள் பங்களிப்புகளைச் செவ்வனேச் செய்ய உதவுமென நம்புகிறேன். மேலும், எனது அனுபவங்கள் உங்கள் நேரத்தினையும் காக்கும்.
  • ஆங்கிலச்சொல்லுக்கானப் படிவம்
1) மேலுள்ள தொகு என்ற தத்தலைச் சொடுக்கவும்.
2)கீழுள்ள NEW WORD என்ற இடத்தில், புதிய தமிழ்ச்சொல்லை தட்டச்சவும்.
3) இதற்கு கீழுள்ள nowiki என்ற விக்கி நிரலை நீக்கவும்.
4) முன்தோற்றம் என்பதனைச் சொடுக்கவும்.
5) இதோ! புதுச்சொல் முன்பை விட, சற்று எடுப்பாக வந்து விட்டது.

[[படிமம்:Common Moorhen.jpg|thumb|right|254px|கானான் கோழி [http://commons.wikimedia.org/wiki/Common_Moorhen (படங்களுக்கு..)] ]] ;[[பலுக்கல்]] {{audio|en-us-{{PAGENAME}}.ogg|(ஐ.அ)}}{{பொருள்}}*([[ஆங்கிலம்|ஆங்]]) - '''{{PAGENAME}}'''. {{மொழிபெயர்ப்பு}}*([[தமிழ்|தமி]]) - ''' NEW WORD '''.

  • தமிழ்ச்சொல்லுக்கானப் படிவம்


{{பொருள்}}*([[தமிழ்|தமி]]),([[பெயர்ச்சொல்|பெ]]) - '''{{PAGENAME}}''' {{மொழிபெயர்ப்பு}}*([[ஆங்கிலம்|ஆங்]]),([[பெயர்ச்சொல்|பெ ]]) - ''' NEW WORD '''.

தீபாவளி வாழ்த்துக்கு நன்றி![தொகு]

உங்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள். தினம் சில வார்த்தை திருத்தியும் சேர்த்தும் வரவேண்டும் என்பதுஎன்பதே என் விருப்பம் Pazha.kandasamy 03:32, 15 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

இப்பறவைகள் பெயரென்ன?[தொகு]

வண்டலூர் உயிரியல் பூங்காவிலுள்ள, இப்பறவைகள் பெயரென்ன? இவற்றுள் ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களுள்ளன.

http://commons.wikimedia.org/wiki/File:Bird_pond-vandalur_zoo-Tamil_Nadu90.JPG

http://commons.wikimedia.org/wiki/File:Bird-_vandalur_zoo-Tamil_Nadu91.JPG

http://commons.wikimedia.org/wiki/File:Birds-vandalur_zoo-Tamil_Nadu92.JPG

உங்களின் மின்னஞ்சல் முகவரியை, என் முகவரிக்கு tha(dot) uzhavan (at) gmail (dot) com அனுப்பவும். இங்கு அதனைக் குறிக்க வேண்டும். ஏனெனில், என் முகவரியை இங்கு எடுத்து, விளம்பரங்களுக்கு தவறாக பயன் படுத்தியுள்ளார்கள். அதனால் விக்சனரி குழுமத்தால் தடைசெய்யப்பட்டேன். நேற்று தான் இரவி, அத்தடையை நீக்கினார்.த*உழவன் 05:52, 18 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

பகுப்புகள் பற்றி..[தொகு]

  • உங்களது பங்களிப்புக்களின் தொடர்ச்சி, சிறப்பாக வருகிறது. எனது உடல்நிலைக் காரணங்களால், என்னால் அடிக்கடி வரமுடியாமல் ஆகி விடுகிறது.

என்பதையும், ஆங்கில ஆக்கங்களில் [[பகுப்பு:birds]] என்பதையும் சேர்க்கக் கேட்டுக்கொள்கிறேன்.


மீன் கொத்தி?
பரிதிமதி

1)அனுபவத்தினால் பகுப்புகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன். அதன்படி, அனைத்து பகுப்புகளிலும் இனி தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும். முன்பு பகுப்பு:birds என்பதை, இனி பகுப்பு:ஆங்கிலம் - பறவைகள் என சேர்க்குமாறுக் கேட்டுக் கொள்கிறேன். முன்பு பகுத்தவற்றை, இப்பகுப்புக்கு மாற்றி விடுவேன்.

2)உசிலம் என்பதிலுள்ள மாற்றங்களை அறியவும்.

3)பகுப்பு:மரங்கள் மற்றும் பகுப்பு:பூக்கள் என்பவைகளையும் பயன்படுத்தவும்.

4)விக்கி ஊடக நடுவத்திற்க்கு இன்னும் செல்லவில்லை. பிறகு பறவைகள் பற்றிய சந்தேகங்களைக் கேட்கிறேன்.

5)சில பிழை வரிகளை, இப்பக்கம் நன்கு இருக்க நீக்கம் செய்தேன். உங்கள் அனுமதி வாங்கமல் செய்ததற்கு தவறு எனில் மன்னிக்கவும்.

நன்றி. த*உழவன் 07:20, 15 டிசம்பர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..

1) க்ரியாவின் இணைய அகரமுதலியை எனக்கு அறிமுகப் படுத்தியதற்கு நன்றி!த*உழவன் 13:36, 16 டிசம்பர் 2009 (UTC)


2) பகுப்பு:தமிழ்ப்பூக்கள் அசத்துகிறது. பறவையாக பறந்து, பூக்களில் அமர்ந்து மனமலர் ஆகிறீர் போலும்.த*உழவன் 19:39, 17 டிசம்பர் 2009 (UTC)

3)

  • தமிழ் மலர்கள் என்ற பகுப்பை நீக்கி விட்டேன். காரணம், ஏற்கனவே பகுப்பு:தமிழ்ப்பூக்கள் என்ற பகுப்பை உருவாக்கியிருக்கீங்க.
  • மற்றொன்று தகவலாதாரம் என்ற சொல்லை எளிமையாக ஆதாரம் என்று குறிப்பிடுமாறு இரவி கூறியிருந்தார். அதன்படி, தகவலாதாரம் என்பதனை ஆதாரம் என மாற்றி வருகிறேன். நீங்களும் அங்ஙனம் எழுதினால், தமிழ் விக்சனரி ஒரே மாதிரி இருக்குமல்லவா? அடிக்கடிப் பயனாகும் சொற்கள் ஒரேமாதிரியாக இருந்தால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன்.
  • மேலும், செல்வா அவர் எனக்குச் சொல்லியதையும், உங்களிடம் சொல்ல நினைக்கிறேன். யாதெனில், இது தமிழ் விக்சனரி என்பதால், தமிழ் என்ற தலைப்புத் தேவையில்லை என்றார். நான் பகுப்பு: கருவச்சொற்கள் என்பதிலும் தமிழ் என்ற தலைப்பை நீக்கி வருகிறேன். பிறமொழிகளுக்கு அங்ஙனம் தலைப்பிடுதல் நலமென்று, பழ.கந்தசாமி அவர்களும் உணர்த்தினார்.

நம் தமிழ் விக்சனரியின் அமைப்பு எளிமையாக, சீராக, சுலபமாக அனைவரும் புரிந்து கொள்ள இவைகள் அவசியமென நான் எண்ணுகிறேன். உங்களின் கருத்தினை அறியவும் ஆவலாக இருக்கிறேன்.த*உழவன் 06:03, 18 டிசம்பர் 2009 (UTC)

தமழ் பூக்கள் பற்றி..[தொகு]

நீங்கள் மலர விடும் தமிழ் பூக்களில் தாவரவியல் பெயரினையும் சேர்ப்பது அருமை. அனைத்தும் நன்கு மலர நினைக்கிறேன். அனிச்சத்தை மேம்படுத்தியமைக்கு நன்றி.த*உழவன் 23:54, 20 டிசம்பர் 2009 (UTC)

தகவலுழவன்!

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. த.வி. - யில் அவசியம் எழுத வேண்டிய தலைப்புகள் சிலவற்றை நீங்கள் செய்ய வேண்டும். நாம் அன்றாடம் கையாளும் சென்னைப் பல்கலையின் தமிழ் சொற்களஞ்சியம் (Tamil Lexicon) பற்றியும் அது போன்ற சொற்களஞ்சியங்களை எண்முறைப்படுத்தி ( digitize ) நாம் பயன்படுத்த வகை செய்த ஆய்வு நூலகங்களுக்கான மையம் (Center for Research Libraries), சிக்காகோ பல்கலைக்கழகம் (University of Chicago) ஆகியவை பற்றியும் தகவல்களைத் திரட்டி த.விக்கியில் எழுத வேண்டும். உங்களால் முடியும் என்று நினைக்கிறேன். -- பரிதிமதி 08:35, 21 டிசம்பர் 2009 (இந்திய நேரம்)

விக்கி ஊடக நடுவப் படம்[தொகு]

  • நேற்று வெட்சிக்கான, இப்படத்தை முதலில் இங்கும், 5நிமிடங்களுக்கு பிறகு விக்கி ஊடகத்திலும் பதிவேற்றம் செய்திருக்கிங்க. மிக்க மகிழ்ச்சி. தமிழ் விக்கிப்பீடியர் அதிகமாக அத்தளம் வருவதில்லை. ஆனால், தமிழ் தெரியாத பலர், தமிழ் ஊடகங்களை ஒழுங்கு படுத்துகின்றனர்.
  • அங்கு பதிவேற்றம் செய்து விட்டாலே போதும். விக்சனரியிலோ, விக்கிப்பீடியாவிலோ பதிவேற்றத் தேவையில்லை. வேறு எந்த மொழித் தளத்தினரும், அப்படத்திற்குரிய கோப்பின் பெயரைப் பயன்படுத்தலாம். நீங்கள் அதைத்தான் வெட்சி சொல்லில் செய்திருங்கிங்க.இங்க தவறுதலா பண்ணியிருப்பிங்கன்னு நினைக்கிறேன்.
  • அப்படம் அங்கு வகைப்படுத்தாமல் இருந்தது. அதை சரி செய்து விட்டேன்.அப்படத்தை, இவ்வாரத்தில் மேலும் மெருகூட்ட வேண்டும். இங்குள்ள அதே படத்தை நீக்க முடிவு செய்துள்ளேன். உங்களின் கருத்தென்ன?
  • சோனி -DSC-W190 நிழற்படக் கருவி உங்களிடம் உள்ளதா? 29.12.2009 எடுத்து 2நாட்களில் பதிவேற்றம் செய்து உள்ளீர்கள். உடன் பதிவேற்றியமைக்கு மகிழ்கிறேன். நான் சுறுசுறுப்பில், கொஞ்சம் ஆண் சிங்கம் மாதிரி.!த*உழவன் 00:10, 1 ஜனவரி 2010 (UTC)

  • ravisankar.srs என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் வெட்சி படத்தை மேம்படுத்தி அனுப்பியுள்ளேன்.அது பிடித்திருந்தால், விக்கி ஊடகத்தில் முன்பு பதிவேற்றியப் படத்திற்கு செல்லவும். அப்படத்தின் கீழுள்ள Upload a new version of this file என்பதைச் சொடுக்கி, இதனை பதிவேற்றம் செய்யுங்கள். காரணம் கேட்கும், அதற்குரிய இடத்தில் file size reduced and improved என்று தட்டச்சவும். மின்னஞ்சலிலுள்ள கோப்பின் பெயரில் 2 என்ற எண்ணுக்கு முன் Tamil Nadu என்று 2 பெரிய எழுத்துக்களுள்ளச் சொல்லைச் சேர்க்கவும். வேறு மாற்றம் வேண்டாம். ஏனெனில், ஏதாவது எச்சரிக்கைக் கேள்விகளை கேட்டு நேர விரயம் ஆகும்.

தமிழ் விக்கிப்பீடியாவிலும், இங்கும் அந்தபடம் தானாகவே இற்றைப்படுத்தப் பட்டுவிடும்.

  • உங்களுக்கு உடன்பாடு என்றால் அங்கு பதிவேற்றுவதற்கு முன் ,உங்களின் பிற படங்களைப் பற்றி, உங்கள் மின்னஞ்சல்மூலம் கலந்துரையாடுவோம். நன்றி.

த*உழவன் 15:06, 7 ஜனவரி 2010 (UTC)

ஆங்கில பெயர்ச்சொல் வடிவமைப்பு[தொகு]

  1. இப்பக்கத்தில் உள்ள ஆங்கிலப்பெயர்ச்சொல் படிவத்தினை, பலரது கருத்தினை ஒன்றிணைத்து உருவாக்கியுள்ளேன். பயன்படுத்திப் பார்த்து, தங்கள் கருத்தினை, இங்கு இடவும்.
  2. இவ்வடிவமைப்பின் இறுதிநிலைக் கருத்தோட்டங்கள், இப்பகுதியில் நடந்தது.

அடிக்கடி நீங்கள் வந்து செல்வது மகிழ்ச்சியளிக்கிறது.நன்றி.த*உழவன் 07:15, 6 பெப்ரவரி 2010 (UTC)

தானியங்கிப் பதிவு[தொகு]

அண்மையப்பக்கத்தில் தானிங்கிகளைக் காட்டு என்பதனைக் காணவும். இம்முயற்சியின் வெற்றியை உங்களிடம், முதலில் சொல்லிக்கொண்டு, மகிழ்ச்சி அடைகிறேன். இரவி, சுந்தர், பெரியண்ணன் ஆகியோரால், எனக்கு இவ்வெற்றி சாத்தியமாகியது.த*உழவன் 01:07, 18 பெப்ரவரி 2010 (UTC)

  • மன்னிக்கவும். அண்மையப்பக்கத்தில் 'அண்மைய மாற்றங்கள்' என்பதே சரி. தவறாக எழுதிவிட்டேன். த*உழவன் 01:56, 18 பெப்ரவரி 2010 (UTC)
  • காதல் பறவைகளின் குரலொலிகளைக் கேட்டு மகிழுங்கள்த*உழவன் 07:17, 24 பெப்ரவரி 2010 (UTC)

cricket[தொகு]

த*உழவன் 17:14, 26 பெப்ரவரி 2010 (UTC)

field observation[தொகு]

இச்சொல்லுக்க்குக் கள நேர்ப்பார்வை, களத்தில் காணல், களக் கண்டறி, களத்தில் காண்கை, களக் காண்டல் எனலாம். காண்பு என்றால் காணுதல், காண்டல், காட்சி. எனவே களக் காண்பு என்றும் கூறலாம். இது என்ன? களத்துல் நேரில் பார்த்து (கண்டு) அறிதல்தானே. ஏன் இவ்வளவு பாடுபட வேண்டும் :) பார்த்தறி, கண்டறி, பார்த்துணர், கண்டுணர்.. இப்படி ஏதும் சொல்லலாமே.--செல்வா 05:15, 6 மார்ச் 2010 (UTC)

நான் தேடிய சொல் கிடைத்து விட்டது : கள நேர்ப்பார்வை. நன்றி. மிகவும் நன்றி.--பரிதிமதி 15:21, 6 மார்ச் 2010 (இந்திய நேரம்)

1.பகுப்பு:மருத்துவகுணம் கொண்ட தாவரங்கள் என்பதனைச் சுருக்கமாக, பகுப்பு:மூலிகைகள் எனலாம். இரண்டும் ஒரே பொருளைத் தருமென்பதால், மருத்து...என்ற பகுப்பினைநீக்க நினைக்கிறேன். உங்களின் கருத்தறிய ஆவல். படங்களுடன், நீங்கள் பதிவது அருமை. சிறிது நாட்களாக, நான் படங்கள் பக்கமே போகவில்லை. இனி தவறாமல் செய்ய வேண்டும்.

2.{{படம்||}}---->{{படம்|கோப்பின் பெயர்|கோப்பினைப்பற்றிய குறிப்புரை}}என்ற வார்ப்புரு, படத்திற்கு எளிமையாக இருக்கும். அதை சடைச்சியில் பயன்படுத்தியுள்ளேன்.

3.சடைச்சி என்பதனை புதியபடிவத்திற்கு, விரிவுபடுத்தி உள்ளேன். கீரிப்பூண்டு. 2க்குமான வேறுபாட்டினைக் காண்க. நன்றி. வணக்கம்த*உழவன் 23:12, 4 ஏப்ரல் 2010 (UTC)

படத்திற்கான வார்ப்புரு[தொகு]

பரிதிமதி:
210px

[[பகுப்பு:கூட்டருகில் மாம்பழக் குருவி-படங்களுள்ளவை]]

இதில் பயன்படுத்தப் பட்டுள்ள, பட வார்ப்புரு பயன்பாட்டிற்கு எளிதாக இருக்குமெனக் கருதுகிறேன்.

பறவைகள் பல விதம்

ஒவ்வொன்றும் ஒருவிதம்..

மறந்து விட்டீர்களோ என்று நினைத்தேன். பறவைகளைப் பார்ப்பதால், புத்துணர்ச்சியாக இருக்கிறது.நன்றி.வணக்கம்.!த*உழவன் 17:57, 18 ஏப்ரல் 2010 (UTC)

வேண்டுகோள்[தொகு]

நீங்கள் பல இடங்களில் விரிவான செய்திகளை ஆங்கிலச் சொல்லுக்குத் தந்துவிட்டு, தமிழ்ச்சொல் தலைப்புகளில் ஆங்கிலச்சொல்லுக்கான இணைப்பை மட்டும் தந்துள்ளீர்கள். அருள்கூர்ந்து விரிவான செய்திகளைத் தமிழ்த் தலைப்புகளில் இட்டு, வேண்டுமென்றால் ஆங்கிலத் தலைப்புகளில் தமிழ்த் தலைப்புகளுக்கான சுட்டியைத் தாருங்கள். இது தமிழ் விக்சனரி என்பதால் தமிழில் விளக்கம் இருப்பதும், தமிழ்ச் சொற்களுக்கு விளக்கம் முதன்மைப்படுத்துவதும் முக்கியம். அண்மையில் இதற்கான எடுத்துக்காட்டுகள்: மஞ்சட்கொன்றை, [[மரகதப் புறா, மாங்குயில், தூங்குமூஞ்சி மரம். மஞ்சள் கொன்றை தலைப்புச்சொல் பக்கத்தை நான் மாற்றி அமைத்தேன். அருள்கூர்ந்து தமிழ்ச்சொற்களுக்கு முதன்மை இடத்தையும் விளக்கத்தையும் தாருங்கள். வேண்டுமென்றால் அதே கருத்தை ஆங்கிலச்சொல்லுக்கோ பிறமொழிச் சொல்லுக்கோ இடுங்கள். --செல்வா 19:22, 18 ஏப்ரல் 2010 (UTC)

குன்றிமணி[தொகு]

மொழியைக் குறிப்பிடும் தலைப்பு[தொகு]

கிசுவாகிலி, ஆங்கிலம், பிரான்சியம் ஆகிய மொழிகளில் உள்ள சொற்களுக்குப் பொருள் தரும்பொழுது, மொழியை மேலே குறிப்பிடுவது வழக்கம். அதற்கு நான் தேர்வு முயற்சியாக சில இடங்களில் பயன்படுத்தியுள்ளேன். உங்கள் கருத்துகள் ஏதும் இருந்தால் தெரிவிக்கவும். ஆங்கிலத்துக்கு thou, கிசுவாகிலிக்கு mti,பிரான்சியத்துக்கு légume ஆகியவற்றைப் பார்க்கவும். --செல்வா 05:14, 29 மே 2010 (UTC)[பதிலளி]

மொழிப்பட்டை பற்றிய கருத்துக் கணிப்பு[தொகு]

பயனர்களின் கருத்து வேண்டப்படுகின்றது. ஒரு சொல்லின் மொழியை அறிவிக்கும் பட்டையை உருவாக்குவது பற்றி உங்கள் கருத்துகள் வேண்டப்படுகின்றது. இக் கருத்துக் கணிப்பு 4 நாட்கள் நடைபெறும் (சூன் மாதம் 8 ஆம் நாள்வரை)). மொத்தம் மூன்று கேள்விகள் உள்ளன. உங்கள் கருத்துகளைப் ஆலமரத்தடி என்னும் பக்கத்தில் பதிவு செய்யுங்கள். நன்றி.--செல்வா 15:08, 4 ஜூன் 2010 (UTC)

வரவேற்புரை[தொகு]

  • Smartnish159 இதில் சரியாக வண்ணமிடப்பட வேண்டுமென நினைக்கிறேன். பிறகு இணைவோம். விரைவில் நம் விக்சனரியின் எண்ணிக்கை சில இலட்சம் அதிகரிக்க உள்ளது. இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இரவி தகவல் அளிப்பாரெனக் கருதுகிறேன். அதன் மூலம் தமிழ் 15வது இடத்திலிருந்து, 10வது இடத்திற்குள் வருமெனக் கருதுகிறேன்.--(த*உழவன் 07:52, 29 ஜூன் 2010 (UTC))

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?[தொகு]

வணக்கம் பரிதிமதி, விக்சனரியில் நீங்கள் காட்டி வரும் தொடர் ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களுக்கு விருப்பம் என்றால், தங்கள் பெயரை நிருவாகப் பொறுப்புக்கு முன்மொழிய விரும்புகிறேன். நன்றி--ரவி 07:21, 22 ஜூலை 2010 (UTC)

விருப்பமே. பழ. கந்தசாமி, செல்வா ஆகியோருடன் நானும் ஒருவனாக இணைய முடிந்தால் அது பெருமைக்குரிய விசயம். உங்கள் பரிந்துரைக்கு நன்றி. --பரிதிமதி 16:32, 22 ஜூலை 2010 (UTC)
பொறுப்பேற்க முன்வந்தமைக்கு மகிழ்ச்சி. Wiktionary:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் பொறுப்பேற்க முன்வருவதாக முறைப்படி குறிப்பிட வேண்டுகிறேன். நன்றி--ரவி 19:10, 25 ஜூலை 2010 (UTC)

நன்றி[தொகு]

பரிதிமதி! தங்களின் கனிவான வார்த்தைகளுக்கும் நிர்வாகப் பொறுப்பு பரிந்துரை ஆதரவு வாக்குக்கும் நன்றி. பழ.கந்தசாமி 05:59, 26 ஜூலை 2010 (UTC)

நிருவாகி வாக்கெடுப்பில் உங்கள் ஆதரவைப் பதிவு செய்தமைக்கு நன்றி. அங்கு பதிந்த உங்கள் கருத்துக்கும் நன்றி பல. --செல்வா 14:40, 26 ஜூலை 2010 (UTC)

வைரி யின் மொழிபெயர்ப்பு+விலங்கியல் பெயர்கள்[தொகு]

  1. பேச்சு:வைரி உள்ள ஐயத்தைத் தெளிவு படுத்தவும்.வணக்கம்.--தகவலுழவன் 05:32, 26 பெப்ரவரி 2011 (UTC)
  2. கள்ளிக்குயில் என்பதன் ஆங்கிலப் பெயர் சரியா?--05:14, 22 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

மேலுள்ள பகுப்பில் உள்ள சொற்களை நீக்க வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசு 1,30,000 சொற்கள் நமக்கு நன்கொடையாக, செம்மொழி மாநாட்டில் தந்த து தங்களுக்கு நினைவு இருக்கும். அதில் பெரும்பான்மையானச் சொற்கள் ஏற்கனவே, சுந்தர் தானியங்கி மூலம் பதிவேற்றப்பட்டு விட்டது. அத்தானியங்கி பதிவேற்றம் செய்யாத சொற்களை இனங்கண்டறிந்து, தமிழ் தானியங்கி (தகவலெந்திரன்!) செய்தது. எத்தகைய சொற்களை, தமிழக அரசு தந்த து என்பதனை இனங்கான, பிறருக்கு தெரியப்படுத்திய உரையாடல்களில் அப்பகுப்பு பயன்படுத்தப்படுகிறது. தெரிவிக்கப்பட்டது. எனவே, அதிலுள்ள பகுப்புகளை நீக்க வேண்டாமென இதன்மூலம் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு, உங்களைச் சந்தித்தில் மகிழ்ச்சியடைகிறேன்.வணக்கம்--15:10, 3 சூன் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

ஊடக உரிம வேண்டுகோள்[தொகு]

நீங்கள் பதிவேற்றிய ஊடகங்களுக்கு உரிய உரிமம் தர வேண்டுகிறோம். முழுக்க முழுக்க உங்களின் சுயமுயற்சியால் உருவாக்கப்பட்ட ஊடகம் எனில், . {{GFDL}} என்ற உரிமத்தை இடலாம். (எ. கா.) படிமம்:DSAL-neechalkaran-spreadsheet-customised-model-word.png. மேற்கண்ட உரிமம் வழங்க உங்களுக்கு உகப்பெனில், அவ்வூடகபக்கத்தினைத் திறந்து, {{GFDL}} என்று ஒட்டினால் போதும். அவ்வாறு உரிமத்தை வழங்கவில்லையெனில் அவை நீக்கப்பட பெருமளவு வாய்ப்புள்ளது. ஐயமிருப்பின் வினவவும் .--தகவலுழவன் (பேச்சு) 04:30, 3 சூலை 2014 (UTC)[பதிலளி]

Your administrator status on ta.wiktionary[தொகு]

Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.

You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on the wiki listed above. Since that wiki does not have its own rights review process, the global one applies.

If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.

If you wish to resign your rights, you can reply here or request removal of your rights on Meta.

If there is no response at all after approximately one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards. Rschen7754 06:38, 21 சூலை 2016 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:பரிதிமதி&oldid=1459027" இலிருந்து மீள்விக்கப்பட்டது