பயனர் பேச்சு:Eldiaar

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்புரைகள்[தொகு]

வருக!

  • பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளை சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின் , இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களது உதவிகளை நானோ, பிறரோ செய்வர்.
வணக்கம்.

--Sodabottle 07:51, 22 சனவரி 2011 (UTC)[பதிலளி]

புதிய சொற்களின் வடிவம்[தொகு]

உங்கள் அருமையான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்ந்தேன். புதிய சொற்களை உருவாக்கும் போது, வார்ப்புருக்களுடன் உருவாக்கினால் இன்னும் நன்றாக இருக்கும். வார்ப்புருக்கள் விக்சனரி முழுவதும் உள்ள சொற்களுக்கு ஒரு பொது வடிவத்தைக் கொடுக்கவும், கணினியல்லாத பிற கருவிகளின் வழியாக விக்சனரியைப் படிக்கவும் பெரிதும் உதுவுகின்றன.

நீங்கள் உருவாக்கிய நுணல் சொல்லில் தேவையான வார்ப்புருகளை இட்டுள்ளேன் பாருங்கள். --Sodabottle 07:51, 22 சனவரி 2011 (UTC)[பதிலளி]

மனிதர்களின் பெயர்கள், அமைப்புகளின் பெயர்கள்[தொகு]

Eldiaar! வணக்கம். விக்சனரியில் வந்து முனைப்பாகப் பங்களிப்பது குறித்து மகிழ்ச்சி. விக்சனரியில் மனிதர்களின் பெயர்களும் அமைப்புகளின் பெயர்களும் பெரும்பாலும் எழுதப்படுவதில்லை. சில விதிவிலக்குகள் உண்டு. (எ.கா) FedExing ([1]). --பரிதிமதி 17:05, 23 சனவரி 2011 (UTC)[பதிலளி]

பிற மொழி வேர்ச்சொற்கள்[தொகு]

பிற மொழிகளில் இருந்து வந்து பல காலமாக தமிழில் பயன்படும் சொற்களும் தமிழ்ச் சொற்கள் என்றே கொள்ள வேண்டும். “இது ஒரு தமிழ் சொல்” அல்ல என்று அனைத்திலும் இடுவதற்கு பதில், அவற்றில் [[பகுப்பு:புறமொழிச் சொற்கள்]] என்ற பகுப்பினை இறுதியில் இணைத்து விடுங்கள். எம்மொழியிலிருந்து தோன்றியது என்பதை அடைப்பில் குறியுங்கள். மேலும் இணையான தமிழ்ச் சொல் இருந்தால் அதனைக் குறிப்பிடுங்கள்.--Sodabottle 03:49, 25 சனவரி 2011 (UTC)[பதிலளி]

தலைப்பு[தொகு]

ஆங்கிலத் தலைப்புகள் capital letter இல் ஆரம்பிக்கப்படுவதில்லை. மேலும் தலைப்பின் இறுதியில் நிறுத்தல் புள்ளியும் இடப்படுவதில்லை. இது விக்கிப்பீடியா கட்டுரைக்கும் பொருந்தும்.--Kanags 22:53, 25 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இந்தியா/உலகம்[தொகு]

விக்கித் திட்டங்கள் பல நாடுகளுக்கும் பொதுவானவை. பல நாடுகளில் வாழும் தமிழர்களும் இதனைப் பயன்படுத்துகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு இந்தியாவை மையப்படுத்தும் உள்ளடகங்களைத் தவிர்த்து பொதுவாக எழுத வேண்டும். எ. கா. மாவட்டம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல பல்வேறு நாடுகளில் உள்ள ஒரு நிருவாகப் பிரிவு. எனவே அதற்கு பொருள் தரும் போது “இந்தியாவின் நிர்வாகப் பிரிவு” என்று எழுதவதைத் தவிர்த்து, பொதுவாக “பல நாடுகளில் நிர்வாகப் பிரிவாக உள்ளது” என்று பொருள்பட எழுத வேண்டும்.--Sodabottle 05:44, 29 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இதற்கு பதில் {{பெ}} வார்ப்புருவை பயன்படுத்துங்கள்--Sodabottle 18:08, 29 சனவரி 2011 (UTC)[பதிலளி]

பொருள் எழுதுதல்[தொகு]

வணக்கம். தங்களின் முனைப்பான பங்களிப்புக்குப் பாராட்டுகள். sonnet பக்கத்தில் ஆங்கிலத்தில் பொருள் குறித்திருந்தீர்கள். ஆனால், இது தமிழ் விக்சனரியாதலால், அப்பகுதியில் தமிழில் மட்டும் பொருள் தரவேண்டும். ஆங்கலப் பொருள் அம்மொழி விக்சனரியில் வரும். நன்றி. பழ.கந்தசாமி 14:29, 1 பெப்ரவரி 2011 (UTC)

படம்[தொகு]

hasson trocar இதிலுள்ள படம் சரியா? அதன் பேச்சுப்பக்கத்தினையும் காணவும்.--த*உழவன் 02:25, 2 பெப்ரவரி 2011 (UTC)

விளக்கம்[தொகு]

பேச்சு:அஸ்கா காணவும். நன்றி. வணக்கம் --த*உழவன் 02:10, 8 பெப்ரவரி 2011 (UTC)

காலக்கோடுகள்[தொகு]

  • பேச்சு:அஸ்காவில், எனது உரையை முடித்துள்ளேன்.
  • நமக்குமுன் பலர், இங்கு உழைத்துள்ளனர். முடிந்தவரை அவர்களுடன் கைகோர்க்கவே எனது உணர்வுகளை உங்களிடம் கூறுகிறேன். இதன் மூலம், நீங்கள் மேலும் சிறப்பாக பங்களிக்கலாமென எண்ணுகிறேன்.
  • அவர்கள் ஒவ்வொரு முடிவையும், மாற்றங்களையும் உரையாடிய பின்னர் தான் செயற்பட்டனர். நாமும் அதனைப் பேணுவோம். ஏதேனும் கருத்துவேறுபாடோ அல்லது மாற்றமோ வேண்டுமெனின், அது குறித்து உரையாடிய பின்பு மாற்றுவோம். அந்த உரையாடல் திருப்திகரமாக இல்லையெனில், அதற்கு முன் உள்ள நடைமுறையை, நாம் பின்பற்றலாம்.இதுவரை நடந்த உரையாடல்களில் என்னால் முடிந்தவற்றை தொகுத்து முன்பு காட்டியுள்ளேன். இன்னும் நிறைய, தொகுக்கப்படாமல் உள்ளது.
  • நீங்கள் உருவாக்கிய இச்சொற்களில்(Mossad,இதழியல்,qwerty key board‎‎), மாற்றங்களைச் செய்துள்ளேன். அவைகள் பலரின் பதிவுகளையும், உங்களின் பதிவுகளோடு (காலக்கோடுகளோடு) இணைக்கும் என கருதுகிறேன்.
  • நீங்கள் உருவாக்கிய பின்பு, அச்சொல்லில் பிறர் வந்து மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும். அம்மாற்றங்களை பற்றி சிந்திக்கவும்.
மற்றவை, உங்கள் கருத்து கண்டு..வணக்கம்.--த*உழவன் 02:12, 11 பெப்ரவரி 2011 (UTC)

பகுப்பு உ,ருவாக்கம்[தொகு]

  1. தமிழ் சொற்களுக்கு --(எ. கா.) அழைப்பாணை (பகுப்பு:த.கா.)
  2. ஆங்கில சொற்களுக்கு--(எ. கா.) summon (பகுப்பு:ஆங்கிலம்-த.கா.)

அதாவது தமிழ்சொற்களுக்கு மட்டுமே பகுப்பின் தலைப்புக்கு முன் மொழியைக் குறிப்பிடத்தேவையில்லை. பிற மொழிச்சொற்களுக்கு, முன்னால் முன்னொட்டு தேவை. இங்கு எடுத்துக்காட்டில் , summon என்பது ஆங்கிலச்சொல் என்பதால் பகுப்புக்கு முன், ஆங்கிலம் என்று முன்னொட்டை நாம் எழுதுகிறோம். இது போல பிற மொழிகளின் பெயர்ச்சொற்களை, இங்கு காணலாம்.நீங்கள் தொடர்ந்து சட்டத்துறையைக் கையாள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. வணக்கம்.--தகவலுழவன் 17:31, 26 பெப்ரவரி 2011 (UTC)

அக இணைப்புகள்[தொகு]

இசைவு என்பதில் நீங்கள் இணைத்தச் சொற்களில் அக/உள் இணைப்புகளை ஏற்படுத்தி உள்ளேன். இதன் மூலம் ஏற்கனவே நம்மைப் போன்று பங்களித்தவர்களின் சொற்களோடு இணைக்கப்பட்டுள்ளது. மேலும், மேல்விக்கி (metawiki) நிரல்களால் தரமானதாகக் குறிப்பிடப்படுகிறது. அங்ஙனம் குறிக்கப்படுவதால் நம் தமிழ் மொழி, பிற மொழி விக்சனரிகளில் இருந்து மேலோங்குகிறது. முன்பு 3வது இடத்தில் இருந்ததாக செல்வா குறிப்பிட்டு இருந்தார். அவரின் பேச்சுப்பக்கத்தில் 32.1 மறுமொழிகளில் உள்ள பங்களிப்பாளர் கணக்கீடு பற்றிய உரையாடலைக் காணவும். மீண்டும் மற்றொருமொரு அனுபவக்குறிப்புக்களை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். இதன் மூலம், மேலும் நீங்கள் சிறப்பாக பங்களிப்பீர்களென எண்ணுகிறேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--தகவலுழவன் 01:02, 28 பெப்ரவரி 2011 (UTC)

புரியவில்லை[தொகு]

அக இணைப்புக்கள் என்ற தலைப்பில் நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்றே எனக்குப் புரியவே இல்லை. இன்னும் நிரல்கள், வார்ப்புருக்கள் போன்ற சொற்களின் பொருள் அல்லது அவற்றை நான் எப்படி என்னுடைய பங்களிப்புக்களில் பயன்படுத்த முடியும் என்று கூட முழுமையாகப் புரிந்து முழுமையாகப் பங்களிக்க இன்னும் சில திங்கள்கள் ஆகும் என்று நினைக்கிறேன்.-- Eldiaar 06:30, 28 பெப்ரவரி 2011 (UTC)

  • அகநானூறு, புறநானூறு என்பது போல, அக இணைப்பு( internal link), புற இணைப்பு எனக் குறிக்கிறேன்.
  • உங்களது விடுமுறை நாட்களில், உகந்த நேரத்தில் சொல்லுங்கள் ஒரு சில மணி நேரங்களில் அனைத்தினையும் உங்களுக்கு உணர்த்தி விடுகிறேன். நாம் இணைந்தால் மேலும் சிறப்பாக செயல்படமுடியும். எனக்கு இந்திய நேரம் காலை6முதல் 8வரை சிறப்பு.ஏனெனில், அப்பொழுதே இணைய வேகம் சிறப்பாக இருக்கும். நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்களா? அல்லது எங்கு? எந்நேரத்தில் நாம் இணையத்தில் பேச முடியும்.ஆவலுடன்..--தகவலுழவன் 06:45, 28 பெப்ரவரி 2011 (UTC)

மகிழ்ச்சி[தொகு]

நான் இந்தியாவில் கோயம்புத்தூர்-ல் இருக்கிறேன். கண்டிப்பாக நான் உங்களிடம் பேச வேண்டும் என்பது தான் என் விருப்பமும் கூட. உங்களுடைய மின் அஞ்சல் முகவரியை எனக்கு அனுப்புங்கள்.... ஓரிரு நாள்களில் நாம் உரையாடுவோம். --Eldiaar 06:48, 28 பெப்ரவரி 2011 (UTC)

  • அப்பாடி! உங்கள் பேரை பார்த்து பயந்து விட்டேன். ஏதோ பிரான்சு நாட்டுக்காரர் என்று நினைத்தேன். எனது மின்னஞ்சல்tha.uzhavan AT gmail(tha எழுத்துக்களுக்கு பிறகு புள்ளி இருக்கிறது) அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் பாருங்கள். உங்கள் பெயர் சிகப்பாகத் தெரியும். அதனை அழுத்தி அங்கு சென்று உங்களைப் பற்றி சிறு குறிப்பு எழுதுங்கள். பெயர், ஆர்வமானத் துறை , இங்கு எப்படி வந்தீர்கள், விருப்பம், கல்வி போன்றன.. கட்டாயமில்லை. இருப்பின் மேலும் நெருங்க பிறருக்கும் எனக்கும் வசதியாக இருக்கும். நன்றி மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--தகவலுழவன் 07:03, 28 பெப்ரவரி 2011 (UTC)

வழிமாற்று[தொகு]

வழிமாற்று/redirect இடுவதற்கு முழுமையான நிரல் இல்லாமல் இப்போது செய்து வருகிறீர்கள். ஒரு முழுமையான எ. கா கீழே கொடுத்துள்ளேன்.

கோடைக்காலம் என்ற பக்கம் கோடைக் காலம் என்ற பக்கத்துக்கு பொக வேண்டுமெனில் அதில் சேர்க்க வேண்டியது:

#redirect [[கோடைக் காலம்]]

(தற்போது இந்த #redirect விட்டுப்போயுள்ளது)--Sodabottle 18:13, 12 மார்ச் 2011 (UTC)

அப்படியா? வழிகாட்டுதலுக்கு நன்றி!---Eldiaar 18:37, 12 மார்ச் 2011 (UTC)

பயன்பாடு[தொகு]

பயன்பாடுகளில் தரப்படுபவை நேரடி எடுத்துக்காட்டுகள். அவற்றில் மாற்றம் செய்ய வேண்டாம் (அடைப்புகளுள் தனித்தமிழ் வார்த்தைகளைக் கொடுப்பதும் வேண்டாம்) நேரடி மேற்கோள்களில் நாம் கைவைக்கக் கூடாது.--Sodabottle 18:21, 13 மார்ச் 2011 (UTC)

சரி. ஒருவருடைய படைப்புக்களைத் திருத்த அவருக்கே முழு உரிமை என்று எனக்கு ஏற்கனவே தெரியும். இருப்பினும், அவை மேற்கோள்கள் என்று எனக்குத் தெரியவில்லை. --Eldiaar 18:28, 13 மார்ச் 2011 (UTC)

Invite to WikiConference India 2011[தொகு]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Eldiaar,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

பொன்வண்டு[தொகு]

Eldiaar:
பொன்வண்டுகள்

பொன்வண்டு பற்றி முன்பு நாம் பேசினாம் ஞாபகம் இருக்கிறதா? இப்படம் ஊடகப்போட்டியில் வந்த படம் நன்றாக இருக்கிறது அல்லவா? --04:16, 11 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

நான் இப்பொழுது தான் உங்களுடைய செய்தியைப் பார்த்தேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். படம் மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி.

upload[தொகு]

  • ஒரு படத்தை எப்படி upload செய்வது என்பதை விளக்கவும். நன்றி.
    • ஒரு படத்தை பதிவேற்றுவதை அறிந்தீர்ப்பீர்கள். எனினும், நீங்கள் குறிப்பிட்ட படம், இப்பகுதியில் உள்ளதா என முதலில் அறிந்து கொள்ளுங்கள்.

அதனால் உங்கள் நேரம் மீதமாகும். (எ. கா.) தென்னை மரங்கள், சீமைக்கருவேல மரங்கள் பிறகு இல்லையெனில்,அங்கேயே பதிவேற்றுங்கள்.அங்கு பதிவேற்றினால், அனைத்து மொழி விக்கிதிட்டங்களிலும் தெரியும். இங்கு பதிவேற்றினால், இங்கு மட்டுமே தெரியும். அங்கு பதிவேற்றும் ஊடகங்கள் சிறந்த முறையில் வடிகட்டப்படுகின்றன. நீங்கள் எடுத்தப்படம் என்றால் தொந்தரவு ஒன்றுமில்லை. பதிவேற்றுவது மிக எளிது. மற்றவை உங்கள் உரைக் கண்டு.--06:55, 13 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..


    • --Eldiaar (பேச்சு) 13:19, 17 மார்ச் 2012 (UTC) அதாவது, ஏற்கனவே இருக்கும் படங்களை நாம் மீண்டும் ஒரு முறை பதிவேற்றுதல் கூடாதா?
  • உங்கள் படங்களை ta.wiktionary.org-க்குப் பதில் commons.wikimedia.org தளத்தில் பதிவேற்றினால், விக்சனரி, விக்கி முதலிய அனைத்துத் தளங்களிலும் பயன்படுத்தப்படும் என்பதால் தகவலுழவன் அப்படிச் சொல்கிறார். பழ.கந்தசாமி (பேச்சு) 15:29, 17 மார்ச் 2012 (UTC)
    • சரிங்க.... நன்றி, Mr. Pazha.Kandasamy. இப்ப எனக்கு இன்னொரு சந்தேகம் என்னன்னா, என்னோட பெயரை Eldiaar-லிருந்து DORAI RAJ L -ஆக மாற்ற வேண்டும். இது முடியுமா?--Eldiaar (பேச்சு) 06:59, 18 மார்ச் 2012 (UTC)


How to use a photo?[தொகு]

அங்கு பத்வேற்றிய படங்களை மற்ற விக்கிகளில் எப்படிப் பயன்படுத்துவது? அதாவது, நான் பதிவேற்றிய ஒரு படத்தை என்னுடைய இன்னொரு விக்கிப் பக்கத்தில் எப்படிப் பயன்படுத்துவது என்பதை விளக்கவும்.--Eldiaar (பேச்சு) 18:35, 18 மார்ச் 2012 (UTC)

பலவித முயற்சிகளுக்குப் பின் நானே ஒரு படத்தை எப்படி இன்னொரு விக்கி பக்கத்தில் பதிவேற்றுவது எனக் கற்றுக்கொண்டேன். நன்றி.--Eldiaar (பேச்சு) 18:42, 18 மார்ச் 2012 (UTC)

ஊடக உரிம வேண்டுகோள்[தொகு]

நீங்கள் பதிவேற்றிய ஊடகங்களுக்கு உரிய உரிமம் தர வேண்டுகிறோம். முழுக்க முழுக்க உங்களின் சுயமுயற்சியால் உருவாக்கப்பட்ட ஊடகம் எனில், . {{GFDL}} என்ற உரிமத்தை இடலாம். (எ. கா.) படிமம்:DSAL-neechalkaran-spreadsheet-customised-model-word.png. மேற்கண்ட உரிமம் வழங்க உங்களுக்கு உகப்பெனில், அவ்வூடகபக்கத்தினைத் திறந்து, {{GFDL}} என்று ஒட்டினால் போதும். அவ்வாறு உரிமத்தை வழங்கவில்லையெனில் அவை நீக்கப்பட பெருமளவு வாய்ப்புள்ளது. ஐயமிருப்பின் வினவவும் .--தகவலுழவன் (பேச்சு) 04:02, 3 சூலை 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Eldiaar&oldid=1240954" இலிருந்து மீள்விக்கப்பட்டது