உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Natkeeran

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

முக்கிய பக்கங்கள்

[தொகு]

ரவி

[தொகு]

உங்கள் பங்களிப்பு கண்டு மகிழ்கிறேன். விக்சனரி ஒரு அகராதியாக செயல்பட வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். பட்டியல்களை சேர்ப்பதுடன் அவற்றில் உள்ள சொற்களுக்கான பொருளையும் சேருங்கள். இவ்வாறு பட்டியல்களை முழுமைப்படுத்திய பின்னர் அவற்றை முதற் பக்கத்தில் சேர்ப்பது குறித்து எல்லாருடனும் கலந்தாலோசித்து செய்யலாம்--ரவி (பேச்சு) 09:24, 19 ஜூலை 2005 (UTC)

தமிழ் மீடியாவிக்கி திட்டங்கள் குறித்த கேள்விகள்

[தொகு]

1. தமிழ் விக்கிபீடியாவை நீங்கள்தான் ஆரம்பத்தில் ஆர்வத்துடன் அத்திவாரம் இட்டீர்கள், இன்று பலர் ஆர்வத்துடன் பங்களிகான்றார்கள், முன்னெடுக்கின்றார்கள். யாரும் இலகுவில் பங்களிக்கலாம் என்பதுதான் விக்கிபீடியாவின் சிறப்பு, இவ் வகையில் இன்று தன்லாவர்களின் பங்களிப்பு எந்த வகையில் அமைந்துள்ளது?

2. தமிழ் விக்கிபீடியாவின் இன்றைய நிலை என்ன?

3. ஆரம்பத்தில் மந்தமான பங்களிப்புக்கள் குறித்து நீங்கள் சற்று வேதனையடைந்திருந்தீர்கள், இன்று தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சி வேகம் உங்கள் எதிர்பார்புக்களை நிவர்த்தி செய்கின்றதா?

4. தமிழில் தரமான தகவல்களை அனைத்து துறைகளிலும் இருந்து தொகுத்து வகுத்து தருவதற்க்கு விக்கிபீடியாதான் மையமாக விளங்கும் என்று நான் நம்புகின்றேன், உங்களின் கருத்து?

5. தமிழின் மிகப்பெரிய சொத்தான இலக்கியங்களை மதுரை திட்டம் தொகுத்து. தமிழ்மணம் உடனடியாக பல தகவல்களை பகிரவும், பலவித விதயங்களை பகிரவும் உந்தியது. அறிவியல் தகவல்களை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட, தேட வசிதியான வகையில் ஒருங்கிணைக்க தமிழ் விக்கிபீடியாதான் சிறந்தது. ஒரு நிலையில் மனிதனால் பெறப்பட்ட அனைத்து அறிவையும் இயன்ற வரை ஒருங்கே தமிழில் குவிக்க விக்கிபீடியா உதவும் என கருதலாமா?


6. என்ன என்ன துறைகள் இருக்கின்றன என்ற தெளிவான ஒரு பரந்த கட்டமைப்பு தமிழ் விக்கிபீடியாவில் இன்னும் இல்லை என்றே தோன்றுகின்றது. எல்லா துறைகளையும் ஒரே தருணத்தில் விபரிக்கவோ தொகுக்கவோ முடியாது என்பது நான் அறிவேன். ஆயினும், ஒரு வித அடிப்படை Map of the Knowledge Domains தேவை என்றே கருதுகின்றேன். அவ் நீதியில்தான் விக்சனரி பின்னிணைப்பு:கல்வித் துறைகள் நான் தொகுக்க முயல்கின்றேன். இவ் விதயம் நோக்கி உங்களின் கருத்து ஏதும் உண்டா?

7. விக்கிபீடியாவில் தன் நிலை கருத்துக்களை அல்லது அபிப்பிராயங்களை தவிர்த்து, தகவல்களை முன்வைப்பதே வழமை. பொதுவாக, விக்கிபீடியாவில் தகவல்கள் கட்டுரை அமைப்பிலேயே உள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு, விக்கிபீடியாவில் கட்டுரை அல்லது தகவல்களை பகிர்வதற்க்கும் வலைப்பதிவுகளில் பதிவதற்க்கும் இருக்கும் வித்தியாசங்களை சுட்டுவீர்களா?

8. இலங்கையில், இந்தியாவில் பல கல்லூரிகளில் நூலக வசதி குறைவு. இணைய தொடர்பு ஏற்படுப்படும் நிலையில் சற்று விரிவடைந்த விக்கிபீடியா ஒரு அரும் கல்வி ஆயுதமாக திகழும். உங்களின் கருத்து?

9. இன்று பலர் பல விதயங்களை பற்றி எழுதுகின்றார்கள், ஆனால் அவற்றை விக்கிபீடியாவில் பதிப்பது கிடையாது. அவரவர் விக்கிபீடியாவில் பதிவதே விக்கி நடைமுறைக்கு ஏற்பு. இப்படி பதிவதன் மூலம் ஒரு திறந்த தொடுக்கப்பட்ட பொது கட்டமைப்பின் கீழே தமிழில் அனைத்து தகவல்களையும் தொகுக்கலாம். எவ்வாறு மற்றவர்களை விக்கியில் பதிய ஊக்கப்படுத்தலாம் என்று கருதுகின்றீர்கள்?

10. தமிழ் விக்கியின் எதிகால திட்டங்கள் எவை?

11. தமிழ் விக்கிபீடியா எப்படி பரிமானிக்கவேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?


User:ravidreams-இன் பதில்கள்

[தொகு]

நக்கீரன், இந்தக் கேள்விகளை நீங்கள் மயூரநாதனிடம் தான் கேட்டீர்கள் என்றாலும் தமிழ் மீடியாவிக்கி திட்டங்களில் ஆர்வமுடையவன் என்ற முறையில் நானும் என் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

1. மார்ச் 2005 முதல் விக்கிபீடியாவில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறேன். அது வரை மயூரநாதன் மட்டுமே கிட்டத்தட்ட தனியாளாக முனைந்து விக்கிபீடியாவிற்கு வடிவம் தந்திருந்தார். சுந்தரும், சந்தோஷ் குருவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்திருந்தனர். தற்பொழுது ஆர்வமுடைய தரமான பங்களிப்பாளர்களின் வருகை அதிகமாயிருப்பது மகிழ்ச்சி தருகிறது. ஏற்கனவே உள்ள பயனர்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் நண்பர்களிடம் விக்கிபீடியா குறித்து சொல்லியே பல புதிய பயனர்களை வருகை தர செய்து வருகிறார்கள். Googleல் தமிழிலேயே தேடும் வழக்கம் அதிகரிக்கும் போது அதன் மூலம் பல பயனர்கள் வருவார்கள் என்று நம்புகிறேன். விக்கிபீடியாவின் சாத்தியங்கள் பற்றி அறிந்த அனைவரும் ஆர்வத்துடன் பங்களிக்கின்றனர். அதனால், முதலில் விக்கி திட்டங்களைப்பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வழிவகை செய்ய வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் Chain reaction போல புதுப்பயனர்கள் பெருகுவார்கள் என நம்புகிறேன்.

2. தமிழில் ஒரு முழுமையான இலவச கலைக்களஞ்சியமாவதற்கான சாத்தியம் விக்கிபீடியாவிற்கு மட்டுமே உண்டு. www.kalanjiam.com என்று ஒரு தளம் பற்றிக் கேள்விப்பட்டேன். ஆனால், எழுத்துரு பிரச்சினைகளால் இன்று வரை என்னால் அதை படிக்க இயலவில்லை. தற்பொழுது பல்வேறு தலைப்புகளில் 800க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கட்டுரைகள் விக்கிபீடியாவில் உள்ளன. பல புதிய பயனர்களின் வரவால் புதிய கட்டுரைகள் உருவாகும் வேகம் அதிகரித்து வருகிறது. அனுபவம் வாய்ந்த பயனர்கள் அவற்றை படித்து, திருத்தி இயன்ற அளவு தரப்படுத்த முயல்கிறோம். விக்கிபீடியா தளமும் முன்பை விட ஒரளவுக்கு தற்பொழுது ஒழுங்கு படுத்தப்பட்டு வருகிறது.

3. 2003ல் ஆரம்பித்த தமிழ் விக்கிபீடியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு முதலில் குறைவாக இருந்தது உண்மை தான். இப்பொழுது பல தளங்களிலிருந்தும் விக்கிபீடியாவுக்கு இணைப்புகளை காண முடிகிறது. பல புதிய பயனர்களின் வரவு நம்பிக்கை அளிக்கிறது.

4. உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். இலக்கியம், சமயம் போன்ற எந்த வட்டத்திலும் அடங்காமல் அனைத்து துறை அறிவையும் தமிழ் மக்கள் பெற விக்கிபீடியாவும் இன்ன பிற விக்கி திட்டங்களும் முக்கிய ஆதாரமாக திகழும் என்பது என் நம்பிக்கையும் கனவுமாகும்.

5. அறிவியல் மட்டுமல்லாமல் மனிதனால் பெறப்பட்ட அனைத்து அறிவையும் இயன்ற வரை ஒருங்கே தமிழில் குவிக்க விக்கிபீடியா உதவும் என நம்புகிறேன்.

6. Map of the Knowledge Domains அவசியம் தான். இது குறித்த உங்கள் பணி பாராட்டத்தக்கது. குறைந்த அளவு பயனர்கள் மட்டுமே நேர நெருக்கடிக்கு இடையிலும் விக்கிபீடியாவை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது கட்டுரைகள் பக்க வகைப்படுத்தப்பட்டு வருகின்றன. விரைவில் உங்கள் Map-ஐ பின்பற்றி இன்னும் செழுமையாக ஒழுங்குபடுத்த விழைகிறேன்.

7. வலைப்பதிவுக்கும் விக்கிபீடியாவுக்கும் உள்ள அடிப்படை முக்கிய வேறுபாட்டை நீங்களே சுட்டிக்காட்டி விட்டீர்கள். விக்கிபீடியாவில் Creativity கிடையாது. உண்மை தகவல்களை மட்டும் பதிவு செய்யும் தார்மீக பொறுப்பு கட்டுரை ஆசிரியருக்கு உண்டு. பிற பயனர்களின் நியாயமான கருத்து முரண்பாடுகளுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு உண்டு. பிறகு, விக்கிபீடியா ஒரு குழுவாக சேர்ந்து செய்யும் வருங்கால நோக்குடைய திட்டமாகும். வலைபதிவுகளுக்கு மேற்கண்ட எதுவும் பொருந்தாது. விதிமுறையற்று இருப்பதாலேயே வலைப்பதிவு கலாசாரம் பலரையும் ஈர்த்துள்ளதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

8. கல்லூரி மாணவர்களுக்கும் அரிய பயன் தரும் அளவுக்கு விக்கிபீடியா வளர இன்னும் நீண்ட நாட்களாகும் என நினைக்கிறேன். தமிழ் இணையம் பரவலாகும் போது விக்கிபீடியாவின் வளர்ச்சியும் அதற்கேற்ப அமையும். ஆனால், பள்ளி மாணவர்களுக்கும், தமிழில் அடிப்படை கல்வி கற்றோருக்கும் பயன் தரும் வகையில் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் விக்கிபீடியாவை வளர்க்க முடியும் என்பது என் நம்பிக்கையும் நோக்கமும் ஆகும்.

9. பலருக்கும் தமிழ் தொண்டாற்றும் ஆர்வமும் தமிழில் அறிவு பரப்ப வேண்டிய அவசியத்தின் புரிந்துணர்வும் உண்டு. அதில் சந்தேகமில்லை. ஆனால், அப்படி ஆர்வமுடைய அனைவருக்கும் தமிழ் விக்கி திட்டங்கள் பற்றி தெரியவில்லை என்பது தான் பிரச்சினை. 1999 முதல் இணையத்தை பயன்படுத்தும் நானே 2005ல் யதேச்சையாக தமிழ் இணையத்தின் சாத்தியங்கள் பற்றியும் விக்கிபீடியா பற்றியும் அறிந்து கொண்டேன். விக்கி திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முயலும் முன் தமிழ் இணையம், கணனியில் தமிழ் தட்டச்சு, யுனிக்கோடு எழுத்துரு, Googleல் தமிழ் தேடல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். பிரபல எழுத்தாளர்கள் (சுஜாதா போன்றோர்) இது குறித்து வெகு மக்கள் இதழ்களில் எழுதினால் நல்ல விளைவ்களுக்கு வாய்ப்புண்டு. தமிழ் கம்ப்யூட்டர் போன்ற துறை சார் இதழ்களும் தமிழ் இணையத்தை பிரபலப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டு, இலங்கை அறிவியல் தமிழ் பாடத்திடங்களில் தமிழ் இணையத்தின் சாத்தியக்கூறுகள் பற்றிய பாடம் இடம்பெறுதல் மிக அவசியம். தன்னார்வமுடையவர்கள் தமக்குத் தெரிந்த Browsing Center நிர்வாகிகளிடம் இது குறித்து விழிப்புணர்வு உண்டாக்கலாம்.

10. தற்பொழுது பல பயனர்களும் விக்கிபீடியா பங்களிப்பில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அதற்மு இணையாக விக்சனரியிலும் ஆர்வத்தை பகிர வேண்டிய அவசியம். ஏனெனில் அனைத்து மொழி அறிவு பெற தமிழ் அறிவு மட்டுமே போதுமானதாக இருக்க விக்சனரி முக்கிய பங்காற்றும். அதற்கடுத்த முக்கிய திட்டமாக விக்கி நூல்களை கருதுகிறேன். ஆனால், இதே பணியை மதுரைத்திட்டம் போன்ற பல்வேறு பெயர்களில் பலர் ஏற்கனவே செய்து வருகின்றனர்.

11. தமிழ் அறிந்தால் உலகு அறியலாம் என்ற சொல்லத்தக்க நிலையை விக்கிபீடியா அடைய வேண்டும். இத்தத் தலைமுறை அடுத்து வரும் தமிழ் தலைமுறைகளுக்கு தரும் அரிய சொத்தாக விக்கிபீடியாவை வளர்த்தெடுக்க வேண்டும் என விழைகிறேன்

  • ரவியின் ஆர்வத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், விக்கிபீடியாவில் தெளிவான சிந்தனையுடன் அவர் பணியாற்றிவருவதில் வியப்பேதும் இல்லை. அண்மைக்காலத்தில் விக்கிபீடியாவில் ஏற்பட்டுவரும் கட்டுப்பாட்டுக்கும், ஒழுங்கமைவுக்கும் ரவியின் பங்களிப்பே முக்கிய காரணமாக உள்ளது. விக்சனரி பற்றிய ரவியின் கருத்துக்களுடன் எனக்கும் உடன்பாடே. தமிழில் முழுமையானதும், இயக்க நிலையில் அமையக்கூடியதுமான கலைச்சொல் அகராதியொன்றைத் தொகுப்பதற்கான அவசியம் குறித்தும், அம்முயற்சியில் விக்சனரியைப் பயன்படுத்தலாம் என்பதுபற்றியும் சில மடற்குழுக்களில் நான் எழுதினேன், அதிகம் பயன் கிடைக்கவில்லை. எனினும் இது தொடர்பில் ஓரளவு ஆரம்ப வேலைகளை நான் செய்திருந்தேன். தொடர்ந்து தீவிரமாக ஈடுபடக் கால அவகாசம் கிடைக்கவில்லை. மதுரைத் திட்டத்தில் தமிழில் எழுதப்பட்ட ஆக்கங்களை ஆவணப்படுத்தி வருகிறார்கள். மிகப் பயனுள்ள முயற்சி. விக்கிநூல்களிலும் இயலுமானால் இதேபோல் செய்யலாம். எத்தனை திட்டங்கள் தொடங்கினாலும் தொடர்ந்து வேலை இருக்கக்கூடிய அளவு ஆக்கங்கள் தமிழில் உள்ளன. தவிரவும் Public Domain இலுள்ள நல்ல பிறமொழி நூல்களைத் தமிழாக்கம் செய்து ஆவணப்படுத்துவதிலும் கவனம் செலுத்தமுடியும்.
  • நக்கீரன் நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த யோசனைகள் அருமையானவை. செயற்படுத்தக் கூடியவையும்தான். உங்கள் ஆலோசனைகளை விக்கிபீடியாவில் ஆலமரத்தடி பகுதியில் போட்டுவிடுங்கள், விக்கிபீடியா ஆர்வலர்கள் எல்லோரும் பார்ப்பார்கள். அங்கே ஒரு கலந்துரையாடலை நடத்தலாம். Mayooranathan 18:20, 1 ஆகஸ்ட் 2005 (UTC)

just a small suggestion in case u didnt know..I see u making multiple small changes in each page by editing the edit option found in each section of the page. Instead if u click the edit button at the top of the page, then u can edit all changes at one go and save time --ரவி (பேச்சு) 16:56, 9 ஆகஸ்ட் 2005 (UTC)

please vote for me for bureaucratship in Tamil wiktionary project

[தொகு]

natkeeran, right now we have no administrators here. but we badly need that to re structure Tamil wiktionary page. i have made a self nomnitaion for me at this page விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள். Please register ur vote there. Then i can proceed with the request and ask people at meta wiki to grant the adminship. thanks--ரவி (பேச்சு) 12:26, 23 செப்டெம்பர் 2005 (UTC)Reply

ஆதரவு அளித்ததற்கு நன்றி, நற்கீரன். இன்னும் ஒரு வாரம் கழித்து (விதிகளின் படி இந்த அவகாசம் தேவை) இது குறித்து மெடா விக்கி தளத்தில் விண்ணப்பித்து அதிகாரி அனுமதி பெற முயல்கிறேன்.--ரவி (பேச்சு) 12:24, 25 செப்டெம்பர் 2005 (UTC)Reply

check விக்சனரி:ஆலமரத்தடி

[தொகு]

hi, check விக்சனரி:ஆலமரத்தடி for my recent message about preloaded templates. I kindly order u to spend daily 10 minutes here atleast to create few word entries :). I am sure that with the new template u can create pages at the minimum rate of 3 pages per minute :) but these templates are for english and german words only if u like to have such template for tamil words we will have one. i foresee faster development for wiktionary since contributing here is very easy and quick. soon we will give a face lift to wiktionary project and start promoting it aggressively like tamil wikipedia..அன்புடன், ரவி--ரவி (பேச்சு) 20:18, 12 அக்டோபர் 2005 (UTC)Reply


small notes

[தொகு]

natkeeran, besides giving englsih translation for tamil words, please add a brief explanation of the word in tamil itself as the prime objective of wiktionary is to explain the meaning of any word (including tamil word ) in tamil itself. else u can create a page with english word title and give the tamil synonym as the brief explanation. and also the translations shall be added following the manual of style.i.e, instead of adding as * [[Eternity]] - முடிவிலி it should be added as * ஆங்கிலம் - [[eternity]] . also please note that all letters of english words in page title and internal links should be in small letters only..if we keep following these styles from the beginning stage of wiktionary then it will be easy to organise. thanks.--ரவி [[User_talk:Ravidreams|(பேச்சு)]] 17:10, 16 நவம்பர் 2005 (UTC)Reply

like to become admin?

[தொகு]

natkeeran, would u like to become admin here? it will b helpful in updating the mediawiki interface and website maintenance, Thanks--ரவி [[User_talk:Ravidreams|(பேச்சு)]] 15:31, 19 நவம்பர் 2005 (UTC)Reply

I accept your request, Thanks. --Natkeeran 02:43, 20 நவம்பர் 2005 (UTC)Reply

Pls accept the nomination at விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் and also vote for others--ரவி [[User_talk:Ravidreams|(பேச்சு)]] 03:22, 20 நவம்பர் 2005 (UTC)Reply

மாதிரிப் பக்கம்

[தொகு]

நற்கீரன், மாதிரிப் பக்கத்துக்கான அவசியம் குறித்து பல மாதங்கள் முன்னரே நீங்கள் தெரிவித்து இருந்தீர்கள். எனினும் அப்படி ஒரு பக்கம் இன்னும் உருவாக்கப்படவில்லை. முழுமையான மாதிரிப் பக்கம் ஒன்றை உருவாக்க ஆழ்ந்த மொழியியல் அறிவு தேவை. அத்தகைய பயனர்கள் தற்பொழுது இங்கு குறைவு அல்லது இல்லை. கடந்த ஓரிரு மாதங்களாகத் தான் இங்கு செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. மேலே உள்ள புதிய சொற்களை சேர்க்கவும் என்ற இணைப்பை பின்பற்றினால், புதிய பக்கங்களை உருவாக்கும் இணைப்புகள் வரும். அவற்றில், ஒரு பக்கத்தை உருவாக்கத் தேவையான குறைந்தபட்ச தகவல்கள் உள்ளன. தமிழ் விக்சனரியிலும் உங்கள் அதிகரித்த பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். ஒரு நாளைக்கு 5 சொற்கள் என்று நீங்கள் சேர்த்தால் கூட ஆண்டுக்கு 1800 சொற்கள் சேர்க்கலாம். முயன்று பாருங்கள். ஆங்கில விக்சனரியில் இன்றைய சொல் என்ற பகுதியில் நல்ல பக்கங்களை அறிமுகப்படுத்துகிறார்கள். விக்கிபீடியாவில் உள்ள சிறப்புக்கட்டுரை பகுதிக்கு இணையாக இதைக் கருதலாம். இது போல் தமிழிலும் கொண்டு வர முயல்வோம்.--ரவி 11:15, 14 ஆகஸ்ட் 2006 (UTC)

பகுப்பு

[தொகு]

நற்கீரன், பக்கங்களை பகுக்க வேண்டுமா என்று யோசனையாய் இருக்கிறது. அகரமுதலியில் வார்த்தைகளை இட்டுத் தேடுவது தானே முதன்மையான பணியாக இருக்க முடியும்? தவிர, பல மொழிச் சொற்களை ஒரு பகுப்பின் கீழ் கொண்டு வருவதும் அசாத்தியமானதும் தேவையற்றதாகவும் இருக்கக்கூடும் --ரவி 14:10, 31 மார்ச் 2007 (UTC)

வேண்டுகோள்

[தொகு]

நான் மெதுவாக செயல்படும் இயல்புடையவன் . விரைவில், உங்களுடன் இணைகிறேன். இப்ப த.இ.ப.அளித்தச்சொற்களை ஆய்கிறேன். --த*உழவன் 01:46, 29 ஜூலை 2010 (UTC)

இப்போ படுக்கப் போவதால், நாளை, அல்லது அதற்கு மறுநாள் உரையாடலைத் தொடருவேன்...

[தொகு]

--Natkeeran 03:57, 29 ஜூலை 2010 (UTC)

நித்திரை போகிறேன், நாளை வந்து மறுமொழிகள் இடுவேன்...நன்றி.

[தொகு]

--Natkeeran 06:58, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

பதிவேற்றம் பற்றிய வேண்டுகோள்

[தொகு]

நீங்கள் புதியச் சொற்களைப் பதிவேற்றம் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் அதனைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டுகிறேன். ஏனெனில், பக்க வடிவம் மாறிய பிறகு அனைத்தினையும் மறுபதிவேற்றம் செய்ய வேண்டும்.எனினும், நீங்கள் பதிவேற்றம் செய்ய கண்டு என்பதனை விரிவு படுத்தியுள்ளேன். உங்கள் கருத்துக்களை எதிர்நோக்குகிறேன்.

பகுப்பு:இலங்கைத் தமிழ்ச் சொற்கள் அருமை. நான் முதன்முதலாக இணையத்தில் வந்த போது, விடயம், பாவிக்கிறேன் என்று நிறையப் பார்ப்போன். எனக்கு அது சில நாட்களாகப் புரியவில்லை. இப்பகுப்பு இருந்திருந்தால், மிகவும் உதவியாக இருந்திருக்கும். நன்றி. நம் பக்கவடிவம் முடிந்தவுடன் கண்டு போல இணைகிறேன். அதற்காக தான் கண்டில் , உங்களின் கருத்தினைக் கேட்டேன்.--த*உழவன் 01:35, 3 ஆகஸ்ட் 2010 (UTC)

resume

[தொகு]

தற்போது புழக்கத்தில் காணப்படுகிற தற்குறிப்பு என்ற சொல்லை பயன்பாட்டுடன் இணைத்துள்ளேன். பழ.கந்தசாமி 05:47, 15 ஆகஸ்ட் 2010 (UTC)

பக்கவடிவில் சமக்குறியீடுகளின் பயன்பாடு

[தொகு]

இதனைக் காணவும். முன்பு இருந்த வடிவத்தினை விட, இவ்வடிவம் மறு சீரமைப்பிற்கு எளிதாக உதவுமென எண்ணுகிறேன். முன்பிருந்த வடிவத்தில் வார்ப்புருக்கள் இல்லாததால், ஒவ்வொரு சொல்லாக மறுசீரமைப்பு மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. ஆகையால், உங்களுக்கு வேறு வடிவம் இப்போதைக்கு வேண்டாமென்று கருதுவீர்கள் என நினைக்கிறேன்.

இம்முறையில் விக்கியமைப்பு பிறழாது. ஆனால், தொகு வசதி குறைக்கப்பட்டுள்ளது.(காரணம்) === குறியீடும், <.div>முறையும் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதுவரை கிடைத்த அனுபவங்களின் படி, மாற்றியுள்ளேன். உங்களின் கருத்தறிய ஆவல்.த.இ.ப. பக்கத்தினையும் எளிமையாக்கி உள்ளேன். நன்றி வணக்கம்--த*உழவன் 02:58, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

நன்றி தகவலுழவன். எனது கருத்து என்னவெனில் டிவ் பயன்படுத்துவதை தவிர்த்தால் நன்று என்று நினைக்கிறன். சுந்தர், கணேசு போன்றார் கருத்து தெரிவித்தால் நன்றாக இருக்கும். --Natkeeran 00:52, 15 செப்டெம்பர் 2010 (UTC)Reply

மறுப்பு வாக்கு

[தொகு]

நற்கீரன், நீங்கள் கருத்துக்கணிப்பில் வாக்களித்தமைக்கு நன்றி, ஆனால் நீங்கள் அளித்த மறுப்பு வாக்கை மறுபார்வை இட வேண்டுகிறேன். நீங்கள் அங்கே கூறியது div பற்றிக் கூறிய கருத்து - அது இக்கருத்துக்கணிப்புக்குள் வராது என்று நினைக்கின்றேன். ஏனெனில், இக் கருத்துக்கணிப்பு பொதுவான வடிவமைப்பைப் பற்றித்தானேயொழிய, அதனை எப்படிப்பட்ட நிரலால் செய்வது என்பதைப் பற்றியது அல்ல. எனவே உங்களுடைய மறுப்பு வாக்கை மறுபார்வை இட வேண்டுகிறேன். நீங்கள் கட்டாயம் மறுப்பு தெரிவியுங்கள், ஆனால் நீங்கள் அதற்காக இட்ட காரணம், இக்கருத்துக் கணிப்புக்கு முற்றிலும் பொருந்தாதது.--செல்வா 17:09, 15 செப்டெம்பர் 2010 (UTC)Reply

தானியங்கிச் சோதனை-1

[தொகு]

இப்பக்கத்தில் தங்களது வாக்கினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் தங்களது ஆலோசனைகளை, அதன் உரையாடற்பக்கத்திலும் தெரிவித்தால் அது மறுசீரமைப்பில் கவனத்தில் கொள்ளப்படும். நன்றி. வணக்கம்.--த*உழவன் 05:06, 8 அக்டோபர் 2010 (UTC)Reply

கனடிய சொற்பதிவேற்றம்

[தொகு]

உங்களின் முயற்சியால் எனக்கு அளிக்கப்பட்ட, கனடிய நண்பரின் சொற்கோவைப் பதிவேற்றத்தை, நாம் துவங்கலாமா? பிறரைப் போல, இங்கு உங்கள் ஆலோசனையையும் தரக் கோருகிறேன்.--00:13, 23 மே 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

பக்க வடிவம்.

[தொகு]

தமிழ் விக்சனரியில், தமிழ்சொற்களே அதிகமாக இருக்க எண்ணுகிறேன். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். மிக நீண்ட அனுபவம் உடைய நீங்கள், இச்சொல்லின் வடிவமைப்பைப் பற்றி, அதன் உரையாடல் பக்கத்தில் கருத்திடவும்.எதிர் நோக்கும்.--15:18, 29 சூன் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

{.{stroke order}}

[தொகு]

இங்கு உங்கள் கருத்திறிய ஆவல்.--06:02, 9 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

ஐயம்

[தொகு]
  1. இத்தகைய மாறுபாடுகளை, ஏறத்தாழ அனைத்துப் பகுப்புகளிலும் ஏற்படுத்த வேண்டியுள்ளது. அம்மாற்றத்தை ஏன் உருவாக்க வேண்டும்.அறிய ஆவல்.
  2. சீனம்-உறவினர் என்று எழுதலாமென்று எண்ணுகிறேன். இங்கு உங்கள் கருத்தினை இடக்கோருகிறேன்.--05:36, 10 மார்ச் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

பயிற்சி

[தொகு]

Teamviewer வழியே எனக்கு பயிற்சி அளித்தீர்கள் அல்லவா? அதேபோல, இன்னொரு முறை, உங்களிடம் பயிற்சி பெற விருப்பம். உங்களுக்கு உகந்த நாளையும், நேரத்தினையும் (UTC-இல்) குறிப்பிடவும். காத்திருக்கும்..--01:59, 3 மே 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

வணக்கம். த.உ. உங்களுக்கு தனிமடல் அனுப்புகிறேன். --Natkeeran (பேச்சு) 02:01, 3 மே 2012 (UTC)Reply
மிக்க மகிழ்ச்சி. வணக்கம்.--02:06, 3 மே 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

இன்று தொடர்ந்து success_destime என்ற சொல்லில் பகுப்பினை சேர்த்துப் பார்த்தேன். என்னாலும்! இணைக்க முடிகிறது.காணவும். இது எனக்கு புதுமையான அனுபவம். எனக்குள் தன்னம்பிக்கையை மலர வைத்ததற்கு மிக்க நன்றி. தமிழ் சொற்களின் மூலம் பகுப்பினை செய்ய முடியவில்லை?கேள்விக் குறிகளாக வருகிறது. தமிழ் சொற்கள் மூலம் பகுப்பினை உருவாக்குதலை அறிய ஆவல். வணக்கம்.--18:34, 21 சூன் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

நான் உபுண்டு பயன்படுத்துவதால் இந்தச் சிக்கலைச் சந்திக்கவில்லை என்று நினைக்கிறேன். விண்டோசு எக்சு.பியில் எப்படி ஒருங்குறி பயன்படுத்துவது என்று சற்று அலசிப் பார்க்க வேண்டும். பார்க்கலாம். --Natkeeran (பேச்சு) 18:50, 21 சூன் 2012 (UTC)Reply

பெயர்மாற்றம்

[தொகு]

பலருக்கு பயிற்சி அளிக்க முயன்றபோது, கீழ்காணும் பெயர்மாற்றம் அவசியம் என்று உணர்ந்தேன். எனவே, மீடியாவிக்கி பேச்சு:Gadget-mySandbox.js என்ற பக்கத்தில், தங்களது எண்ணங்களைத் தெரிவித்து, உங்கள் வாக்கினை அளிக்க வேண்டுகிறேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 02:19, 21 ஏப்ரல் 2014 (UTC)

Your advanced permissions on ta.wiktionary

[தொகு]

Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, interface administrator, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.

You meet the inactivity criteria (no edits and no logged actions for 2 years) on this wiki. Since this wiki, to the best of our knowledge, does not have its own rights review process, the global one applies.

If you want to keep your advanced permissions, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. A community notice about this process has been also posted on the local Village Pump of this wiki. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at the m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.

If you wish to resign your rights, please request removal of your rights on Meta.

If there is no response at all after one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards.

Yours faithfully. --علاء (பேச்சு) 19:06, 7 பெப்ரவரி 2021 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Natkeeran&oldid=1904407" இலிருந்து மீள்விக்கப்பட்டது