உள்ளடக்கத்துக்குச் செல்

பொறுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பொறுப்பு (பெ)

 1. ஒப்படைக்கப்பட்டதை நிறைவேற்றும் கடமை; உத்தரவாதம்
 2. விளைவுகளை உணர்ந்து செயல்படும் நிலை
 3. கடமையையும், விளைவுகளையும் உணர்ந்து செயல்படவேண்டிய பதவி
 4. பாரம்
 5. முட்டு
 6. முக்கியம்
 7. தகுதி
 8. பொறுமை
 9. வரி]
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. duty
 2. responsibility
 3. position of responsibility
 4. stress, pressure, burden
 5. prop, stay, support
 6. importance
 7. weight of character
 8. patience, forbearance
 9. tax
விளக்கம்
பயன்பாடு
 • ஆட்சிப் பொறுப்பு
 • குடும்பப் பொறுப்பு
 • ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் மக்கள் நலனை மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்.
 • குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு லோகனுடையது (ஒரு கோட்டுக்கு வெளியே,

சு. சமுத்திரம்)

 • பணத்துக்கு வழி செய்ய வேண்டியது உன் பொறுப்பு (பிறந்த மண், தீபம் நா. பார்த்தசாரதி)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

பொறு - பொறுப்பு
பொறுப்புவகி, பொறுப்பேற்றல், பொறுப்பளி
கடமை, சுமை, பாரம், தகுதி, பதவி

ஆதாரங்கள் ---பொறுப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பயன்பாடு
 • அதுவும் வங்கி மேலாளர் என்று பொறுப்பு வரும்போது, விடுப்பு என்றே நினைக்கக் கூடாது என்று எழுதப்படாத சட்டம் என்று ஒன்று கொண்டு வந்து விடுவார்கள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பொறுப்பு&oldid=1969028" இலிருந்து மீள்விக்கப்பட்டது