மலச்சிக்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மலச்சிக்கல் (பெ)

  • மல அடைப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  1. மலச்சிக்கல் என்ற கொடிய பிரச்சினை

தினமும் பல நேரங்களில் நாம் தண்ணீர் குடிக்கிறோம்; பலவிதமான உணவுகள் உண்ணுகிறோம். உடலுக்கு தேவையான சக்திகளை எடுத்துக்கொண்டு, மிகுதியை உடலானது வியர்வை, மூத்திரம் போன்றவை மூலம் வெளியேற்றி விடுகிறது. இருந்தாலும், முழுவதும் நீங்குவது இல்லை. அதிக நேரம் இந்த குடல் அழுக்குகள் என்று சொல்லப்படுகின்ற நச்சுக்கள் குடலில் தேங்கியிருக்கும் பட்சத்தில் அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு விஷத்தன்மை கொண்டவையாகி விடுகின்றன. சுறு சுறுப்பு நிறைந்தவர்கள் உடலில் இவை தங்குவதில்லை. உடலுக்கு எந்தவிதமான உடல் உழைப்பும் இல்லாதவர்களுக்கு இவை உடலில் தேங்கிவிடுகின்றன. எப்படி இவற்றை கண்டு பிடிப்பது? 01. மலம் சரியாக வெளியேறாமல் இருத்தல். பலர் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளுவதில்லை. இது மிகவும் மோசமானது. ஒரு மனிதனின் குடலின் நீளம் இருபது அடி என்று சொல்லுகிறார்கள். அது சுருட்டி வைக்கப்பட்டுள்ளது. மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு, இந்த மலம், குடலின் ஓரங்களில் ஒட்டிக்கொண்டு, அதன் அளவை குறைத்துவிடுகிறது. 02. இதன் காரணமாக முதலில் தோன்றுவது தலை வலி; பின்னர் தேவையில்லாமல் கோபம் வருதல்; சிந்தனை தடைபடுதல்; உழைப்பில் ஆர்வம் குறைதல் போன்றவை. 03. நாட்பட்ட மலச்சிக்கல் நரம்புகளிலும் ஊடுருவ ஆரம்பித்து விடும் - நச்சாக. இதன் காரணமாக மூட்டு வலி, முழங்கால் வலி கை இடுக்குகளில் வலி போன்றவை தோன்ற ஆரம்பிக்கும். 04. மலச்சிக்கலை நீக்க வேண்டும். தண்ணீர் அடிக்கடி குடிக்கவேண்டும். 05. நார் சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்ளவேண்டும். எல்லா காய்கனிகளிலும் நார் சத்து இருக்கிறது. கீரை வகைகளிலும் நார் சத்து இருக்கிறது. வாழைப்பழங்கள், பப்பாளி, கொய்யா போன்ற பழங்கள் மலச்சிக்கலுக்கு உகந்த பழங்கள். 06. குறைந்த பட்சம் நாம் உண்ணும் உணவில் 30 சதவீதம் காய்கனிகள் மற்றும் 30 சதவீதம் பழங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 07. மலச்சிக்கல் குறையும் போது உடல் எடையும் நிதானத்திற்கு வரும். இரத்தம் சுத்தமடையும். மனதும் தெளிவடையும். 08. நமது உடலில் தோன்றும் 80 சதவீத நோய்கள் - குடலில் இருந்து தான் உருவாகின்றன. (ஈகரை)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---மலச்சிக்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :மலம் - சிக்கல் - வயிற்றுப்போக்கு - செரிமானம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மலச்சிக்கல்&oldid=1906955" இருந்து மீள்விக்கப்பட்டது