மாய்மாலம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மாய்மாலம்{
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- hypocrisy; dissimulation, pretension
- (colloq.)deceit
விளக்கம்
- மாய்மாலம் என்பது 'மாயாஜாலம்' என்னும் சொல்லின் திரிபு...மயாஜாலம் மக்களின் பொழுதுப்போக்குக்காகவும்,பிரமிக்கவைத்து மகிழ்ச்சிப்படுத்தவும் செய்யப்படும் ஒரு கலை..இதன் உயிரே தந்திரங்களினால் இல்லாததை இருப்பது போலவும், இருப்பதை இல்லாதது போலவும் காண்பிப்பதாகும்...அதாவது 'ஏமாற்றுவது,'பொய்யான தோற்றங்களை உண்டாக்கி மக்களை நம்பவைத்து வியப்பிலாழ்த்துவது' போன்றவையாகும்...பின்னர் மயாஜாலம் என்ற சொல்லே 'மாய்மாலம்' என்று மருவி, ஏமாற்றுதல்,பொய் சொல்லி நம்பவைப்பது, மோசடி செய்வது முதலிய குணங்களைக் குறிப்பிடும் சொல்லாயிற்று.
பயன்பாடு
- அவளைப் பார்த்தியா? கள்ளி.... எல்லாம் நடிப்பு, மாய்மாலம் ( வளவு)
- ஆக புரட்சி, புண்ணாக்கு என்று இதுகாறும் இவர்கள் பேசியதெல்லாம் மாய்மாலம், போலி, பொய். உண்மையாக இவர்கள் நோக்கம், நல்ல கப்பல்களில் பாதுகாப்பான சொகுசுப் பயணம் ( ‘புரட்டு’ப் பாதையின் ‘புரட்சி’ வீரர்கள், கீற்று)
- பூசாரி நாயக்கர் வீட்டுக்குள் யாரும் இதுவரை போனதில்லை. உள்ளே என்ன மந்திரம் வச்சிருக்காரோ மை மாய்மாலம் இருக்குமோ என்ற பயந்தான். ( கீற்று)
- பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள்-அரசு – மருத்துவர்கள்- என்று மருத்துவத் துறையை ஆளும் இந்த மிகப் பெரிய மாஃபியாவை கண்டு நடுக்கமாக இருக்கிறது. மருத்துவத்துறை பெரும்பாலும் வணிகமயமாகிவிட்டதை கண்கூடாகவே உணர முடிகிறது. அதையும் தாண்டி இன்னபிற மாய்மாலங்கள் இல்லாமல் எளிய மருந்துகளின் மூலமாகவும் நம்பிக்கையான உரையாடல்களாலும் மாத்திரமே நம் வியாதிகளைக் குணப்படுத்தும் மருத்துவர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள் ( நமது மருத்துவம் பற்றி…, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மாய்மாலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +