உள்ளடக்கத்துக்குச் செல்

வாதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • விவாதம்
  • சர்ச்சை
  • தர்க்கம்
  • தருக்கம்
  • ஒரு பட்சத்தை எடுத்துக் கூறுதல்
  • உடல் உறுப்புகளை முடமாக்கும் வாத நோய்
  • சித்த, ஆயூர்வேத மருத்துவத்தில் உள்ள மூன்று நாடிகளில் (வாதம், பித்தம், கபம்) ஒன்று, இங்கு வாத நாடி காற்றைக் குறிக்கும்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
  • வாதம் செய்யத் தயாரா? (ready to debate?)
  • பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் (the debate over the existence of ghosts and spirits)
  • நாடாளுமன்றத்தில் காரசாரமான வாதம் (acrimonious debate in the parliament)
  • வக்கீலின் வாதம் (the contention of the lawyer)
  • கணவன் மனைவி இடையே வாக்குவாதம் (argument/quarrel between husband and wife)
  • எதற்காக வீண் வாதம்? (Why this pointless debate?)

(இலக்கியப் பயன்பாடு)

  • வாதம் ஓதிய வஞ்சரைக் காணில் ஓர் - திருவருட்பா
வாதம்
வாதநோய்
பக்கவாதம், கீழ்வாதம், இளம்பிள்ளைவாதம், முடக்குவாதம்
விவாதம், வாக்குவாதம், பிடிவாதம், எதிர்வாதம், விதண்டாவாதம், பிரிவினை வாதம்
பொருள்முதல்வாதம், யதார்த்தவாதம், பயங்கரவாதம்,

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாதம்&oldid=1954930" இலிருந்து மீள்விக்கப்பட்டது