வெண்டையம்
Appearance
பொருள்
வெண்டையம் (பெ)
- வீரர் காலணி
- வீரவெண்டைய முழங்க (திருப்பு. 750)
- குதிரை முதலியவற்றின் காற்சதங்கை
- வெண்டையங் கவடி (அரிச். பு.வேட்டஞ். 13).
- கட்டைவிரல் மோதிரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- warrior's anklet
- hollow ring with pebbles inside, tied to the feet of horses or elephants;
- thumb-ring
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
- தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவே (திருப்பு., 62)
- தண்டை என்கின்ற காலணி, வெண்டையம் என்ற வீரக் காலணி, கிண்கிணி, சதங்கையும் அருள் கழல்களும், சிலம்புடன் கொஞ்சி ஒலிக்க
ஆதாரங்கள் ---வெண்டையம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +