பஞ்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பஞ்சி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. சோம்பல்
  2. பஞ்சாங்கம், பஞ்சிகை
  3. பஞ்சு
  4. பஞ்சணை
  5. வெண் துகில்
  6. இலவு
  7. செவ்வரக்குச்சாயமிட்ட பஞ்சு
  8. சடைந்தது
  9. பருத்தி
  10. பெரும் தூறு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. laziness; repugnance to activity due to lassitude
  2. almanac
  3. cotton
  4. cotton cushion
  5. white cloth
  6. red silk-cotton tree
  7. cotton coloured with lac-dye
  8. anything loose or bushy, as cotton, down, etc.
  9. cotton plant
  10. dense thicket
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பஞ்சி ஒளிர்,விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க (கம்பராமாயணம்)
  • பஞ்சிவெண்டிரிச் செஞ்சுடர் (குறுந்.353)
  • புகழெனும் பஞ்சிசேர்த்திப் பொலிவுறு பேரத் தாணி (சூடா. சிறப்புப். 6)
  • பஞ்சியுங் களையாப் புண்ணர் (புறநா. 353).
  • செருக்கற்ற பஞ்சிமலர்ச் சீறடி (சீவக. 2339).
  • பஞ்சிமெல்லடி (தக்கயாகப். 33, உரை).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பஞ்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சோம்பல் - சோம்பேறித்தனம் - பஞ்சு - பஞ்சணை - பருத்து

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சி&oldid=1218671" இலிருந்து மீள்விக்கப்பட்டது