பேச்சு:evangelist

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • த*உழவனே, செல்வா, ஜார்ஜ், எனது மொழிபெயர்ப்பு, குறிப்பாக technology evangelist என்பதற்குச் சரியாக வரவில்லை. திருத்தங்களை வரவேற்கிறேன். பழ.கந்தசாமி 02:32, 27 மே 2010 (UTC)[பதிலளி]
    • நீங்கள் மேம்படுத்திய இதே சொல்லை, அதே நேரத்தில் நானும் உருவாக்கினேன்.

வருமாறு;-

evangelist, ஆங்கிலம். [தொகு]

evangelist(பெ) படிமம்:W Nee.jpg

பொருள்
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---evangelist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

[[பகுப்பு:ஆங்கிலம்-பெயர்ச்சொற்கள்]] [[பகுப்பு:ஆங்கிலம்-இறையியல்]] [[பகுப்பு:ஆங்கிலம்-கிறித்தவம்]] [[en:{{PAGENAME}}]]

படத்தினை மட்டும் மாற்றிவிடலாமா?த*உழவன் 02:36, 27 மே 2010 (UTC)[பதிலளி]

Evangelist - பல பொருள்கள்[தொகு]


  • Evangelist என்னும் சொல்லின் முதன்மைப் பொருளை அடையாளம் கண்டு, பின்னர் அதிலிருந்து உருவகமாகப் பிறக்கும் பிற பொருள்களைச் சுட்டிக்காட்டும் விதத்தில் மெருகூட்டியுள்ளேன். முதன்மைப் பொருள் தொடர்பான படிமமும் இணைத்துள்ளேன். த*உழவன் இட்ட படத்தை நீக்கிவிடலாம். Evangelist என்னும் சொல்லின் பிறப்பு இது: Ecclesiastical Latin evangelium / Ancient Greek εὐαγγέλιον (euangelion), “‘evangel’”), literally "good news". இதிலிருந்து தமிழ் "சுவிசேஷம்" (சு+விசேஷம் = நல்ல+செய்தி) பிறந்தது; "நற்செய்தி" பிறந்தது.
  • Evangelium என்பதிலிருந்து Evangelist வந்தது. "நற்செய்திக்கு எழுத்துவடிவம் கொடுத்தவர்" என்பது முதல் பொருள். எனவே "நற்செய்திநூல் ஆசிரியர்", "நற்செய்தியாளர்". இவர்கள் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நால்வர். இவர்களுக்குக் கிறித்தவத்தில் சிறப்பிடம் உண்டு (சைவ மரபில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போல). புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு நூல்களும் "நற்செய்தி நூல்கள்" ஆகும்.
  • Gospel என்னும் ஆங்கிலச் சொல்லும் euangelion, evangelium என்பதிலிருந்து பிறந்ததே: god+spel = good+news. இதன் வழிச் சொற்கள் பல: evangelical, evangelicalism, evangelical church(es), evangelization, evangelism. இவற்றிற்குப் பொருள் தமிழ் விக்சனரியில் இடுகைசெய்ய எண்ணியிருக்கிறேன்.
  • நற்செய்தியை அறிவிப்பவரும் evangelist தான்.
  • Evangelist என்பதற்கு உருவகப் பொருளும் உண்டு. மிகுந்த ஆர்வத்தோடும் தீவிரத்தோடும் ஒரு கொள்கை/கருத்து/கோட்பாடு/கருத்தியல் பரப்பும் ஆள் என்பது அதன் பொருள். Technology evangelist என்னும் சொல் இவ்வகையதே.
  • இத்துணைச் செழுமைவாய்ந்த சொல் என்பதால் இப்பதிவைக் கவனத்தோடு வடிவமைக்க எண்ணியுள்ளேன். அனைவருக்கும் நன்றி! வணக்கம்!--George46 13:51, 27 மே 2010 (UTC)[பதிலளி]

மேலே வறுவேல் (George46) கூறிய அனைத்தும் அருமையானவை. முழுவதும் ஏற்கத்தக்கன. மதம் சாராத பொதுப்பொருள்- ஆர்வத்துடன் அறிந்தொன்றை பரப்புநர். propaganda என்பதில் இருந்து சற்று வேறுபடுத்திக்காட்ட வேண்டிய ஒன்று. தொழில்நுட்பம் சார்ந்த நோக்கில் கூறுவதாயின் ஆர்வப்பரப்புநர் எனலாம். மதம் சார்ந்ததெனில் அருள்பறைஞர் அல்லது அருள்/மறை பறையர் என்பது போல தொழில்நுட்பப் பறையர்களை நுட்பப்பறையர் எனலாம். பறையர் என்பதின் சாதி/கீழ்மைப் பொருள் அறியாமையால் எழுந்தது. வைணவ மரபில் ஆண்டாள், இறைவன் தன்னுள் உணர்த்துவதை பறைதருவான் என்று கூறுகின்றார். பறைதருதல் என்பது உயர் உண்மையை (இறைவனே) உள்ளுணர்த்துவதாகும். நற்பறையர் என்பதும் மதம் சார்ந்த நோக்கில் evangelist என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தலாம். இசுலாமியர்களிலும் கூவி அழைப்பது,இறைவன் பெருமைகளைக் கூறி அழைப்பதும் வழக்கம். அரசர்கள் ஆண்ட காலத்தில் செய்தியிலும், அரசனின் ஆணை அறிவிப்பிலும் ஒரு சிறிதும் பிழையில்லாமல், பிசகேற்படாமல் மிகத் தெளிவுடன் அறிவிப்பது என்பது மிகவும் பொறுப்பான ஒரு தொழில். பறை என்னும் இசைக்கருவியால் ஒலியெழுப்பி, மக்களின் கவனத்தை ஈர்த்து அறிவிப்பு நிகழும். பறைதல் என்றால் தமிழில் சொல்லுதல். உறுதிபட சொல்லுதல். எனவே நற்பறையர் என்பது பொருந்தும். மலையாள மொழியிலும் பறை என்னும் சொல் வினைச்சொல்லாக பயன்பாட்டில் உள்ளது. technology evanelist = நுட்பறையர், நுட்பறைநர், நுட்பியல் பறைநர், நுட்பியல் ஆர்வப்பரப்புநர் (/ஆர்வப்பரப்பாளர்). கொள்கைப் பரப்ப்பாளர் என்பதில் இருந்து வேறுபடுத்திக்காட்ட, கொள்கை ஆர்வப் பறைநர் எனலாம். கொள்கைப் பரவுநர் எனலாம். அதே போல நுட்பப் பரவுநர் எனலாம் (பரவுதல் என்றால் பெர்ருமைகளை எடுத்துச்சொல்லி, கொண்டாடிப் பரப்புதல், பரவச் செய்தல்). பரப்புநர் என்பதைக் காட்டிலும் நுட்பமாய் சற்று வேறு பொருள் சுட்டக்கூடியது. --செல்வா 16:23, 27 மே 2010 (UTC)[பதிலளி]

Evangelist - பொருள் பாகுபாடு[தொகு]

பழ.கந்தசாமி, போதகர் என்பது முதல் பொருள் அல்ல; வழிப் பொருளே. எனவே, அதைத் தனியாகக் காட்டுவதே நல்லது. முதல் பொருள் நற்செய்தி நூல்களை உருவாக்கியவர் என்பதுதான். —முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து George46 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .

  • மேலே கையொப்பம் இட மறந்துவிட்டேன். மன்னிக்கவும். செல்வா, நீங்கள் கீழே தருகின்ற சொற்கள் சிறப்பாக உள்ளன. சொற்பொருளை வரிசைப்படுத்துவது எப்படி என்பது குறித்துக் கருத்துத் தெரிவித்தேன். முதல் வரியில் அமைய வேண்டியது நற்செய்தி நூல்களை முதல் நூற்றாண்டில் உருவாக்கியவர்கள். (நற்செய்திநூல் ஆசிரியர், நற்செய்தியாளர் - இது கிறித்தவ வழக்கு. ஆங்கிலத்தில்: Those who wrote the four Gospels). இரண்டாம் வரியில் நற்செய்தி அறிவிப்பவர், நற்செய்தி பறைசாற்றுபவர் போன்ற சொல்வகை அமையலாம். இறுதியில் உருவகப் பொருள் வரலாம் (எ.டு.: technology evangelist).--George46 18:12, 27 மே 2010 (UTC)[பதிலளி]
அப்பொழுது நன்னூலர் எனலாம் :) நற்பனுவலர் என்பதும் பொருந்தும். நல்லருட் பனுவலர்.--செல்வா 17:06, 27 மே 2010 (UTC)[பதிலளி]
  • செல்வா, ஜார்ஜ்: நன்றி. எங்கிருந்துதான் இவ்வகைச் சொற்பிரவாகங்கள் உங்களிருவரிடமும் சுனை போல் உருவாகின்றனவோ? எனது மண்டை வறண்ட பாலையாகவும், மேல்மாடி :( குடியிருக்கப்படாத காலித்தளமாகவும் ஏன் தான் இருக்கிறதோ? பழ.கந்தசாமி 18:19, 27 மே 2010 (UTC)[பதிலளி]
  • சொற்கட்டமைப்பும், உரையாடல்களும் மிகுந்த மனமகிழ்ச்சியைத் தருகிறது. இதுவரை இங்கு வாழ்கிறேனென்று நினைத்தேன். இனி, தமிழ் காற்றைச் சுவாசிக்கிறேன் என்றே நினைக்க வேண்டும். உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தருகிறேன். சுனை என்பதனை கட்டமைத்தால் நன்றாக இருக்கும்.நன்றி.த*உழவன் 00:35, 28 மே 2010 (UTC)[பதிலளி]
பழ.கந்தசாமி, த*உழவன்,உங்கள் பாராட்டுக்கு நன்றி :) நீங்கள் உங்களுக்குள் இருக்கும் தமிழறிவைக் கிளருங்கள். இதைவிடக் கூடுதலாக ஆக்க இயலும். தமிழின் சொல் வளத்தில், வெறும் நுனிப்புல் மேய்ப்வன் நான். தோண்டத் தோண்டத் தங்கச்சுரங்கமாய், வைரச்சுரங்கமாய் இருக்கும் தமிழ். சுரங்கம் கூட அளவெல்லை உடையது. தமிழில் உள்ளதோ உயிர்த்துப் பெருகுவன, அளப்பரியன. --கற்றனைத்தூறும் என்பார்களே, அப்படி, தமிழில் அறிவுறவாட உறவாடப் பெருகும் கூர்ப்பு பெறும். அறிவுறவாட்டம் தமிழில் நடந்தால் பன்னூறாயிரம் மடங்காகப் பெருகும். --செல்வா 15:46, 28 மே 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:evangelist&oldid=650690" இலிருந்து மீள்விக்கப்பட்டது