விம்மல்
Appearance
பொருள்
விம்மல்(பெ)
- தேம்பி அழுகை
- துன்பம்
- ஏக்கம்
- வீங்குகை
- உள்ளப் பூரிப்பு
- ஒலிக்கை
- யாழ் நரம்போசை
- சற்றேறக்குறைய சம அதிர்வெண்கள் உடைய இரு அலைகள் ஊடகமொன்றில் ஒரே திசையில் செல்லும்போது ஒன்றுடன் மற்றொன்று மேற்பொருந்தினால் விம்மல்கள் உருவாகின்றன. தொகுபயன்
ஒலியின் வீச்சு, ஒரு புள்ளியில் சீரான கால இடைவெளியில் அதிகரிக்கவும்,குறையவும் செய்யும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- sobbing
- distress
- despondency
- being puffed up or swollen
- elation of spirits
- sounding
- sound of lute strings
- (acoustics) beat, an interference between two sounds of slightly different frequencies, perceived as periodic variations in volume whose rate is the difference between the two frequencies
பயன்பாடு
- பாட்டைப் பாடிவிட்டுச் சீதா விம்மி விம்மி அழத்தொடங்கினாள். லலிதா அவளை அன்புடன் அணைத்துக் கொண்டு பலவிதமாக ஆறுதல் கூறினாள். சீதாவின் விம்மல் சத்தம் வரவர லேசாக மறைந்தது. (அலை ஓசை, கல்கி)
- நேராகக் குளியலறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு குழாயைத் திறந்துவிட்டுக்கொண்டு கதறி அழுதேன். நீர் கொட்டும் ஒலியில் என் அழுகை மறைந்தது. தலையிலும் முகத்திலும் அறைந்துகொண்டு தேம்பல்களும் விம்மல்களுமாக அழுது நானே ஓய்ந்தேன். பின்னர் முகத்தையும் கைகளையும் கழுவிக்கொண்டு வெளியே வந்தேன். (நூறுநாற்காலிகள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +