உள்ளடக்கத்துக்குச் செல்

பெண்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பெண்மை (பெ)

  1. பெண் பிறப்பு/இயல்பு
  2. பெண்ணுக்குரிய நலம்
  3. பெண்ணின் தன்மை
  4. பெண்ணின்பம்
  5. அமைதித் தன்மை
  6. நிறை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. being born a woman
  2. feminine grace
  3. feminity; womanliness; gentleness; womanishness
  4. sexual enjoyment with a woman
  5. modesty
  6. self-restraint, natural to a woman


பயன்பாடு
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • பெண்மைக் கிரதியென (பாரத. திரௌபதி மாலை. 39)
  • காணியைப் பெண்மைக்கெல்லாம் (கம்பரா. மீட்சி. 46)
  • பெண்மையு மிலளாகி யழுதலு மழூஉம் (கலித். 147)
  • பிற னியலாள் பெண்மை நயவாதவன் (குறள். 147)
  • பெண்மை நாண் வனப்புச் சாயல் (சீவக. 356)
  • பிறையெனு நுதலவள் பெண்மை யென்படும் (கம்பரா. மிதிலைப். 40)
  • முலையில்லாள் பெண்மை விழைவு (இன்னா நாற்பது)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :பெண் - பெண்ணியம் - ஆண்மை - ஆண் - தாய்மை

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெண்மை&oldid=1242946" இலிருந்து மீள்விக்கப்பட்டது