பெண்மை
Appearance
ஒலிப்பு
|
---|
பொருள்
பெண்மை (பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- being born a woman
- feminine grace
- feminity; womanliness; gentleness; womanishness
- sexual enjoyment with a woman
- modesty
- self-restraint, natural to a woman
பயன்பாடு
- அவனோடு பேசுவது அவளுக்குப் பிடித்திருக்கிறது. பெண்ணை பெண்மையை மதிக்கத் தெரிந்தவன் அல்லவா? (திசை ஒன்பது திசை பத்து, எஸ். ஷங்கரநாராயணன்)
- பாரம்பரியப் படி நீண்ட முடி வளர்த்துக் கொள்ளுவதில்தான் பெண்மை இருக்கிறதா? (இளித்ததாம் பித்தளை!, ஜோதிர்லதா கிரிஜா)
- நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது (திரைப்பாடல்)
- உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை
- விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- பெண்மைக் கிரதியென (பாரத. திரௌபதி மாலை. 39)
- காணியைப் பெண்மைக்கெல்லாம் (கம்பரா. மீட்சி. 46)
- பெண்மையு மிலளாகி யழுதலு மழூஉம் (கலித். 147)
- பிற னியலாள் பெண்மை நயவாதவன் (குறள். 147)
- பெண்மை நாண் வனப்புச் சாயல் (சீவக. 356)
- பிறையெனு நுதலவள் பெண்மை யென்படும் (கம்பரா. மிதிலைப். 40)
- முலையில்லாள் பெண்மை விழைவு (இன்னா நாற்பது)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +