உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள்அகரமுதலி எகரவரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.



பார்க்க:

திருக்குறள்
திருவள்ளுவமாலை
திருக்குறள் முதற்குறிப்பு அகரமுதலி
திருக்குறள் கடைச்சொல் அகரமுதலி


திருக்குறள் அகரமுதலி எகரவரிசை

[தொகு]
= எந்த, 30, 110, 355, 423, 491, 533, 695, 982.

எஃகு

[தொகு]
எஃகு
= படைக்கலம், குறள்: 759;
= கூர்மை, 773.

எங்ஙனம்

[தொகு]
எங்ஙனம்
= எப்படி, 251,

எச்சம்

[தொகு]
எச்சம்
= மிஞ்சிநிற்பது, 238;
= ஒழிவு/ஒழிந்துநிற்பது, 674, 1004;
= (கூறாது விடப்பட்டு)ஒழிந்தவை, 1012;
= அஃதுஒழிந்தது, 1075;
= மக்கட்பேறு, 456.
எச்சத்தால்
= மக்களால்/(நன்மக்களது உண்மையாலும், இன்மையாலும்), 114.
எச்சத்திற்கு
= வழியிலுள்ளார்க்கு(ம்), 112.

எஞ்சல்

[தொகு]
எஞ்சல்
= இறத்தல், 44.
எஞ்சாது
= ஒழியாமல், 690.
குறள்
எஞ்சாமை
= இடைவிடாது நிற்றல், 382;
= ஒழியாமல், 497.
குறள்
எஞ்ஞான்று
= எப்போது(ம்), 44, 145, 317, 361, 439, 582, 635, 697, 701, 864, 870, 886, 903, 905, 910, 921, 926, 927.
குறள்

எடுக்கும்

[தொகு]
எடுக்கும்
= (அவரை) எழுப்புகின்றது, 1150.
எடுத்து
= பிரித்தெண்ணி, 776.
எடுப்பது
= மேலோங்குவிப்பது, 15.

எண்

[தொகு]
எண்
= எட்டாகிய - [எண்குணத்தான்], 9;
= கணக்கு, 392;
=(கருமச்)சூழ்ச்சிக்கட்(சென்ற) - [எண்சேர்ந்த], 910;
= எளிய - [எண்மை], 424, 548, 760, 991.
எண்ணப்பட
= மதிக்கப்பட, 922.
எண்ணப்படுவது
= (வைத்து)எண்ணப்படுகின்ற ஒரு பொருள், 438.
எண்ணம்
=(வெற்றி)நினைப்பு, திட்டம், 494.
எண்ணாத
= நினைத்து ஆராயாத, 568.
எண்ணாது
= (பின்விளைவது)அறியாமல், 180.
எண்ணி
= எண்ணிக்கையிட்டு, 22;
= ஆராய்ந்து, 62, 467;
= நாடி, 470, 497, 530, 675, 687;
= கருதி, 699, 1298.
எண்ணிய
= எண்ணப்பட்டவை, 666, 941;
= நினைத்த, 666, 753.
எண்ணியார்
= நினைத்தவர், 494, 666.
எண்ணின்
= நினைத்தால், 264.
எண்ணும்
= நினைக்கும், 1004;
= நினைக்கும் - [எண்ணும் மந்திரியின்], 639.
எண்ணுவம்
= நினைக்கக் கடவோம், 467.

எதிர்

[தொகு]
எதிர்
= எதிரில், நேர்(ஆக), 765, 1982;
= ஏற்றுக்கொள்ளுதல், 855, 858.
எதிரது
= எதிர்காலத்தில் நேரக்கடவது, 429.
எதிர்ப்பை
= கைம்மாறாகக் கொடுத்தல், 221.

எம்

[தொகு]
எம்
= எமது, 1126, 1185, 1204, 1205, 1222, 1278;
= எம்மை, 1180.
எமக்கு
= நமக்கு, 790, 1142, 1176, 1291.
எம்மிடை
= எங்களிடத்தில், 1122.
எம்மை
= எங்களை, 1205, 1217, 1318.

எயிறு

[தொகு]
எயிறு
= பல், 1121.
எய்து
= பொருந்த, 561.
= ஏவிய [எய்த அம்பினில்], 772.
எய்தல்
= பெறுதல், 671, 904, 991.
எய்தலால்
= பெறலாம் ஆதலால், 265.
எய்தலின்
= உண்டாதலைவிட, 815.

எய்தற்கு

= அடைவதற்கு, 489.
எய்தா
= அடைவதற்கு உரித்ததல்லாத, 137.
எய்தாமை
= இல்லையாதல், 815.
எய்தார்
= அடையமாட்டார், 598, 901.
எய்தி
= பெற்று, 665, 749, 932.
எய்தியக்கண்
= (தம்வயத்தது)ஆயவழி(யும்), 354;
= உடயாராயவிடத்து(ம்), 670;
= இருந்ததாயி(னும்), 740.
எய்தின்று
= உற்றது, 1240.
எய்துப
= அடைவர், 666.
எய்தும்
= அடையும், 75, 676;
= அடைவான், 145, 309;
= அடையும், 1024.
எய்துவர்
= அடையப்பெறுவர், 137.
எய்யாமை
= மெய்வருந்தாமல், 296.

எரி

[தொகு]
எரி
= நெருப்பு, 308, 435, 1148.
எரியால்
= (காட்டுத்)தீயால், 896.
எரு
= குப்பை, உரம், 1037, 1038, 1147.

எலி

[தொகு]
எலி
= எலி(ஓர்உயிரி அதாவது பிராணி), 763.
எல்லா
= (அனைத்து)உயிரும், 260, 296, 299, 361, 457, 746, 851, 972.
எல்லாம்
= எவையும், முழுவதும், அனைத்தும், 1, 15, 33, 39, 47, 68, 72, 79, 81, 142, 203, 212, 221, 232, 238, 268, 294, 309, 320, 321, 322, 325, 343, 411, 430, 443, 444, 507, 542, 547, 582, 596, 610, 624, 651, 659, 661, 673, 761, 776, 832, 860, 891, 1002, 1012, 1013, 1032, 1033, 1056, 1064, 1067, 1168, 1227, 1265.
எல்லாஅம்
= எவையும், 375.
எல்லாரும்
= அனைவரும், 191, 752, 1139, 1311.
எல்லார்க்கும்
= எல்லோருக்கும், 125;
= எல்லார்கண்ணும், 582.
எல்லைக்கண்
= வரம்பு கடவாமல் அதன்கண்ணே, 806.

எவன்

[தொகு]
எவன்
= யாது?, 31, 46, 1225, 1291;
= என்ன பயன் கருதி?, 99, 237, 345, 379, 1171, 1172;
= என்ன உதவி?, 79;
= என்ன பயன்?, 57, 272, 574, 803, 1089, 1308;
= என்ன?, 1165, 1195, 1207.
எவ்வ
= துன்பத்தைச் செய்யும் (நோய்) [எவ்வ நோய்], 853;
= ஒன்றானும் தீராத (நோய்), 1241.
எவ்வது
= எவ்வாறு, 426.
எவ்வம்
= இளிவரவு, 223.

எழ

[தொகு]
எழ
= (அலர்)உண்டாக, 1141.
எழில்
= எழுச்சி/ கம்பீரத் தோற்றம், 407.
எழிலி
= முகில், 17.
எழு
= எழுவகையாகிய [எழுபிறப்பும்], 62, 107;
= ஏழாகிய, 1269, 1278.
எழுதல்
= பகைவர்மேற் செல்லுதல், 465.
எழுதுங்கால்
= மைதீற்றும்போது, 1285.
எழுதேம்
= (அஞ்சனத்தால்) எழுதமாட்டோம், 1127.
எழுத்து
= எழுதப்படுவது= எழுத்து, 1;
எழுத்திலக்கணம், 392.
எழுபது
= ஏழாகிய பத்து, (7*10=70) 639.
எழுமை
= (வினைப்பயன்)எழுந்தன்மையுடையது, 107;
= எழுபிறப்பு, 126, 398, 538, 835.
எழுவாரை
= (பிறதொழில்களின்)மேற்செல்பவரை, 1032.
எழுவாள்
= எழுந்திருப்பவள், 55.

எள்

[தொகு]
எள்
= எள்விதையினது [எட்பகவு], 869.
எளிது
= வருந்தாமல் கிட்டக்கூடியது, 45, 540, 745, 864, 991.
எளிய
= கிட்டக்கூடியன, 664.
எளியர்
= முயற்சியின்றிக் கிடைத்தற்குரிய, 723.
எளியன்
= வருந்தாமல் காணக்கூடிய தன்மையுடையனாய், 386;
= (பகைவர்க்கு)இளப்பமுடையவன், 863.
எள்ளப்படும்
= இகழப்படுவான், 191.
எள்ளற்க
= இகழாதொழிக, 491.
எள்ளாத
= இகழாத(உபாயங்களை), 470.
எள்ளாது
= இழிவுசொல்லாமல், 1057.
எள்ளாமை
= இகழாமல், 281;
= இகழாதிருத்தல், 667.
எள்ளின்
= இகழ்ந்தால்/வாயின் மறுத்தால், 1298.
எள்ளும்
= இகழ்ந்து சொல்லும்(சொல்லை)[எள்ளும் சொல்], 607.
எள்ளுவர்
= இகழ்வர், 752.
எள்ளுவாரை
= இகழ்பவரை(பகைவரை), 829.

எறிக

[தொகு]
எறிக
= தண்டிக்க, ஒறுக்க, 562.
எறிதற்கு
= முழுதும் வெட்டுதற்கு உதவுவதாய, 821.
எறிந்து
= (ஒருமுகமாகப்)போர்செய்து, 747.
எறிய
= (வேலைச்)செலுத்த, 775
எற்றா
= நீங்காத, 663.
எற்றிற்கு
= எத்தொழிற்கு, 1080.
எற்று
= எத்தன்மையது, 557, 655, 1256;
= என்செய்தோம், என்செய்தோம்[எற்று எற்று], 275.
எற்றுள்
= எல்லாவற்றுள்(ளும்)[எற்றுள்ளும்], 438.

என்

[தொகு]
என்
= யாது= என்ன, 2, 53, 70, 144, 175, 211, 301, 318, 397, 420,430, 436, 573, 586, 726, 763, 812, 897, 923, 966, 1004, 1059, 1206, 1217, 1225, 1243, 1270, 1287;
= எங்ஙனம், 862;
= எதனை(ப்பெற்றிருந்தாலும்) [என்உடையரேனும்], 430;
= எனது, 771, 1081, 1088, 1136, 1139, 1163, 1170, 1175, 1181, 1182, 1185, 1189, 1209, 1213, 1230, 1237, 1242, 1246, 1248, 1249, 1252, 1254, 1262, 1264, 1265, 1284, 1292, 1295, 1296, 1297, 1310, 1324;
= என்னை, 1168, 1316.
என
= என்றுசொல்ல, 37, 55, 69;
= என்றுசொல்லப்படுகின்ற, 111, 1042, 1216;
= என்ற, 168, 334, 1190, 1257;
= என்று சொல்லப்பட்ட, 1022, 1252;
= என்று, 316, 630, 700, 942, 1236;
= என்றுகருதி, 145, 1245, 1259;
= என்பதுபற்றி, 1292;
= ((எண் இடைச்சொல்)), 146, 766;
= விரைவது ((ஒலிக்குறிப்பு)) [கதுமென], 1173.
எனக்கு
= என்றனக்கு, 1151.
எனது
= என்னுடையது, 346.
எனப்படுதல்
= என்றுசொல்லப்படுதல், 967.
எனப்படும்
= என்றுசொல்லப்படும், 453.
எனப்படுவது
= என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது, 291, 324, 591, 801, 844.
எனப்படுவர்
= என்றுசொல்லப்படுவார், 722.
எனப்படுவார்
= என்று சொல்லப்படுவார், 989.
எனப்பட்டது
= என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது, 49.
எனல்
= என்று கருதல், 971, 1148, 1260;
= என்றுசொல்லுக ((வியங்கோள்)), 196(2);
= என்று சொல்லற்க ((எதிர்மறை வியங்கோள்)), 196(1);
= என்று கருதற்க, 282.
எனின்
= என்றால், 2, 19, 20, 82, 102, 149, 178, 210, 220, 222, 254, 256, 291, 292, 309, 321, 324, 328, 378, 499, 546, 560, 619, 638, 730, 768, 770, 789, 801, 831, 844, 986, 1041, 1189, 1190, 1194, 1199.
எனும்
= என்னும்(சொல்லை) ((இடைக்குறை)), 70.
எனை
= எத்துணைப்பெரிய=எவ்வளவுபெரிய, 52, 144, 207;
= எல்லா, 514, 70?, 750.
எனைத்தானும்
= எவ்வளவு சிறிய அளவினதாயினும், 317.
எனைத்து
= எவ்வளவு சிறியது, 209, 281, 300, 317, 416, 820, 825, 1202, 1241;
= எவ்வளவு மிக, 1208.
என்கண்
= என்னிடத்தில், 1174.
என்ப
= என்று சொல்லுவர், 60, 63, 66, 73, 75, 76, 203, 238, 244, 330, 361, 392,617, 729,736, 738, 739, 773, 851, 918, 953, 981, 991, 1280;
= என்றுசொல்லப்படுபவை, 392|3|, 483.
என்பதனை
= சொல்வதை, 1083.
என்பது
= என்று சொல்லப்படுவது, 87, 114, 116, 193, 210, 364, 661, 797, 831, 850, 1026;
= என்றல், 467, 928, 1188, 1293, 1310.
என்பர்
= என்று இரங்குவர், 88;
= என்று சொல்லுவர், 246, 662, 1220.
என்பவர்
= என்று சொல்லப்படுபவர், 393.
என்பவன்
= என்று செய்பவனது, 856.
என்பாக்கு
= என்று உரையாடுவேமாக, 1312.
என்பார்
= என்று சொல்லுபவர், 275, 710, 956, 1188, 1209;
= என்று சொல்லப்படுபவர், 365.
என்பார்க்கு
= என்று சொல்லுபவர்க்கு, 1036.
என்பான்
= என்று சொல்லப்படுபவன், 41, 42, 47, 147, 163;
= என்று நன்கு மதிக்கப்படுபவன், 281;
= என்று தெளிந்திருப்பவன், 628;
= என்று சொல்லுபவன், 850.
என்பு
= எலும்பு, 77, 80.
என்பேன்
= என்று கருதியிருந்தேன், 1254.
என்போடு
= உடம்போடு, 73.
என்போர்
= என்று சொல்லப்படுபவர், 30.
என்ற
= என்று சொல்லப்பட்ட, 384.
என்றது
= என்று வேண்டுதல், 552.
என்றல்
= என்று சொல்லப்படுதல், 181.
என்றவர்
= என்று சொன்னவர், 1154.
என்றவற்றுள்
= என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டவற்றுள், 715.
என்றார்
= என்று சொன்னவர், 1149.
என்று
= என்பதாக, ((பெயருக்குப்பின்)), 11, 307, 351, 388, 515, 575, 627, 698, 743, 790, 805, 1004, 1066, 1314;
= என்பதாக, ((வினைக்குப் பின்)), 275, 331, 517, 537, 564, 593, 611, 626, 655, 699, 1002, 1040, 1067, 1112, 1114, 1139, 1148, 1248, 1298, 1308;
= என்பதாகக்கருதி, 174, 205;
= எனக்(கருதலால்), 1307;
= என்பதாக(ச் சொல்லி), 1313, 1316, 1317, 1318, 1319, 1320;
= என, 27, 43, 674, 939, 950;
= எப்போது(ம்), [என்றும்], 138,152, 536, 652, 1130;
= சிறப்புண்டான ஞான்று(ம்), அஃதில்லாத ஞான்று(ம்), 978.


என்றேன்
= என்று சொன்னேன்(ஆக), 1314, 1315;
= என்று சொன்னேன், 1316.
என்ன
= எத்தகைய, 705, 987, 1100;
= எத்தன்மையன, 1122.
என்னாது
= என்று செய்யாது, 1138;
= எனக் கருதாமல், 36.
என்னின்
= என்னைக்காட்டிலும், 1290.
என்னும்
=[வாரி, தோட்டியான், குன்று, திண்மை, நாடாச் சிறப்பு, செருக்கு, எவ்வம், தீப்பிணி, எச்சம், காரறிவாண்மை, ஆற்றல், சேர்ந்தாரைக்கொல்லி, ஏமப்புணை, பெருமை, பேதைமை, செம்பொருள், துன்பத்துள், மாத்திரையர், இவறன்மை, ஏதப்பாடு, கழிபெருங்காரிகை, மாசு, தகைமை, நலன், பொய்யாவிளக்கம், அன்பீன்குழவி, செவிலி, பண்பு, எவ்வநோய், நல்லாள், முகடி, நோக்கு, வழக்கு, நன்மை, ஒருவற்கு, நசை, இடும்பையுள், வன்மையின், ஏமாப்பில் தோணி, பார், தீ, புணை, தகையால், கதவு] என்கின்ற, 14, 24, 29, 54, 74, 180, 201,223, 227, 238, 287, 306, 336, 346, 358, 369, 406, 438, 464, 571, 598, 601, 613, 641, 753, 757, 844, 851, 853, 854, 860, 871, 924, 936, 976, 988, 991, 992, 1013, 1021, 1023, 1040, 1043, 1045, 1063, 1068, 1104, 1134, 1156, 1182, 1193, 1251;
= என்று சொல்லுவர், 1015;
= என்று சொல்லாநிற்கும்/ என்றுசொல்லும், 1129, 1130;
= (புல்லிதாய்= அற்பமாய்த்) தோன்றும், 790;
= சுருங்கும் [தவ்வென்னும் ((குறிப்புமொழி))], 1144.
என்னுமவர்
= எனக் கருதுகின்ற அவர்கள், (எனக்கருதுவார் அல்லது என்னும்+அவர்), 653.
என்னை
= யாது?, 188;
= என்றனை, 1244, 1256, 1296, 1316.


அக இணைப்பான்கள்

[தொகு]

-எஃ-எங்-எச்-எஞ்-எட்-எண்-எத்-எம்-எய்-எர்-எல்-எவ்-எழ்-எள்-எற்-என்-[[#|]]

திருக்குறள் அகரமுதலி எகரவரிசை முற்றும்

[தொகு]
பார்க்க

திருக்குறள் அகரமுதலிஅகரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஆகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி இகரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஈகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி உகரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஊகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஏகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஒகரவரிசை

திருக்குறள்அகரமுதலி ஓகாரவரிசை

திருக்குறள்அகரமுதலி ககரவரிசை