உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள்அகரமுதலி ஆகாரவரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உள் இணைப்பான்கள்

[தொகு]
-:அகடு-:அங்கணம்-:அசாவாமை-:அஞர்-:அடக்கம்-:அணங்கு-:அதர்-:அந்தணர்-:அம்-:அயர்-:அரங்கு-:அல்-:அவம்-:அழ-:அள-:அற-:அனிச்சம்

அகஇணைப்பான்கள்

[தொகு]
/ஆக/ஆங்கால்/ஆசாரம்/ஆட/ஆணி/ஆம்/ஆய்/ஆர்/ஆல்/ஆவது/ஆழ்/ஆள்/ஆறா/ஆன்.

ஆகாரவரிசை

[தொகு]

ஆ= பசு
குறள் 560, 1066;
=ஆகும்போது
குறள் 82, 104, 119, 122, 161, 233, 300, 357,
379, 429, 433, 444, 451, 455, 507, 528;
=அவ்வாறானவற்றை
குறள் 655.
ஆயிடை=இவற்றுக்கிடையே, இவ்விருவழியிலும்
குறள் 1179.
ஆவிற்கு= பசுவிற்கு
குறள் 1066

ஆக

[தொகு]
ஆக= உண்டாக
குறள் 54, 92, 117, 155, 278, 323, 342, 365, 424,
434, 445, 518, 519, 602, 751, 758, 879, 902, 951,
988, 1043, 1127, 1128, 1147, 1242, 1249, 1263, 1317;
= இருக்கும்போது
குறள் 100, 758, 879;
=இருக்கப்பெற்றால்
குறள் 666, 988.
ஆகல்= ஆதல்
குறள் 372.
ஆகா= ஆகாத
குறள் 421, 456;
=ஆகமாட்டா
குறள் 376.
ஆகாத=முடியாதசெயல்கள்
குறள் 537.
ஆகாதது= துணையாகாதுஇருத்தல், ஆகாதிருத்தல்
குறள் 1291.
ஆகாது= ஆகமாட்டாது
குறள் 619.
ஆகார்= ஆகமாட்டார்
குறள் 895.
ஆகி= ஆய்
குறள் 17, 51, 128, 217, 461, 476, 529, 586, 587, 732, 744, 745, 764, 998, 1218, 1227, 1228.
ஆகிய ஆன
குறள் 270, 283, 329, 817.
ஆகியக்கண்ணும்= ஆனபோதும்
குறள் 750.

திருவள்ளுவரின் வேறுபெயர்கள்: அதன் பொருள் விளக்கம்


  1. முப்பால்முனிவர்= அறம், பொருள், இன்பம் எனும் மூன்று பால்கள் பற்றி உரைத்த முனிவர்
  2. முதற்பாவலர்= முதற்பா எனப் போற்றப்படும் வெண்பாவில் நூல்செய்த பெருமகனார்
  3. தெய்வப்புலவர்= அவதார புருடர்
  4. தேவர்= தெய்வம்
  5. நாயனார்= தலைவர்
  6. நான்முகனார்= படைப்புக்கடவுளான பிரமனை ஒத்தவர்
  7. செந்நாப்போதார்= செம்மையான நா மலரை உடையவர்
  8. பெருநாவலர்= நாவன்மை மிக்கவர்
  9. மாதாநுபங்கி= தாய்போல் அன்பு கொண்டவர்
ஆகியாங்கு= ஆனாற் போல
குறள் 247.
ஆகியார்= ஆய்விடுவார்
குறள் 935.
ஆகிவிடின்= ஆய்விட்டால்
குறள் 17.
ஆகிவிடும்=ஆகியேதீரும்
குறள் 128, 476.
ஆகு= ஆவதற்குக்காரணமான
குறள் 371;
=வருகின்றவழி
குறள் 478.
ஆகுதல்= ஆதல்
குறள் 683, 823.
ஆகுதிர்= ஆவீர், ஆகின்றீர்
குறள் 1319.
ஆகும்= ஆம், ஆகும்.
குறள் 94, 134, 138, 205, 262, 344, 368, 452, 454,
456, 459, 514, 590, 630, 1049, 1079, 1214;
= ஆகின்ற
குறள் 235, 328, 436.
ஆகுல= ஆரவாரம், டம்பம்
குறள் 34.
ஆகுவது= ஆதல்
குறள் 315.
ஆக்கம்=மேன்மேல் உயர்தல்
குறள் 31, 32, 112, 122, 135, 163, 169, 177, 183,
283, 328, 457, 468, 492, 522, 527, 562, 593,
594, 642, 651, 692, 755, 858, 859, 902.
ஆக்கத்தின்=செல்வத்தைவிட
குறள் 657
ஆக்கத்தை=செல்வத்தை
குறள் 113
ஆக்கல்=மேலாகச்செய்தல்
குறள் 264
ஆக்கி=ஆகும்படிசெய்து
குறள் 12, 678, 1026
ஆக்கும்=வளர்க்கும்
குறள் 616

ஆங்கால்

[தொகு]
ஆங்கால்=விளையுங்காலத்தில்
குறள் 379
ஆங்கு= (வேண்டிய)படி, போல
குறள் 15, 50, 247, 252, 265, 279,
474, 532, 534, 561, 666, 676, 740,
803, 908, 1189, 1293;
= உடனே, அப்பொழுதே
குறள் 16, 171, 179, 289, 333, 487,
566, 788, 928, 1215, 1325;
=அசைநிலை
குறள் 43, 584, 1307;
=அவ்விடத்தில்
குறள் 279.

ஆசாரம்

[தொகு]
ஆசாரம்=நல்லொழுக்கம், நன்னடத்தை
குறள் 1075
ஆசு=குற்றம்
குறள் 503
ஆசையுள்= விருப்பத்துள்
குறள் 266

ஆட

[தொகு]
ஆட=மேற்கொள்ள, பேச
குறள் 405, 1070
ஆடல்=மேற்கொள்ளுதல்
குறள் 187;
தெரிந்துவினையாடல்,அதி.52
ஒற்றாடல், அதி.59
ஆடவர்=ஆண்மக்கள்
குறள் 1003
ஆடார்=பேசாமல்
குறள் 818
ஆடி=நீரில் முழுகி
குறள் 278;
=விளையாடினாற்போலும்
குறள் 401.
ஆட்சி=ஆளும்தன்மை, பயன்கொள்ளுதல்
குறள் 252
ஆட்டு=ஆடுதலைச்செய்கின்ற
குறள் 352

ஆணி

[தொகு]
ஆணி=அச்சாணி, இருப்புமுளை
குறள் 667, 1032.
ஆண்டு= அவ்விடம், அந்த இடம்
குறள் 363;
= அதில்
குறள் 1098;
= அங்ஙனம்
குறள் 1279.
ஆண்மை==ஆளுந்தன்மை
குறள் 603;
இல்லாண்மை
குறள் 1026;
ஊராண்மை
குறள் 773;
ஒப்புரவாண்மை
குறள் 480;
காரறிவாண்மை
குறள் 287;
சான்றாண்மை
குறள் அதி. 99;
சான்றாண்மை
குறள் 981, 989, 990;
தாளாண்மை
குறள் 613, 614;
நல்லாண்மை
குறள் 1026 1133, 1134;
புல்லறிவாண்மை
குறள் 331;
புல்லறிவாண்மை
குறள் அதி. 85;
பேராண்மை
குறள் 148, 773, 962;
மடியாண்மை
குறள் 609;
வினையாண்மை
குறள் 904;
வேளாண்மை
குறள் 81, 212;
ஆண்மையின்=ஆண்மையைக் காட்டிலும்
குறள் 907.

ஆஅதும்

[தொகு]
ஆஅதும்=மேலாகக் கடவோம்
குறள் 653.
ஆதல்=ஆகுதல்
குறள் 95, 219, 248, 285, 374,
419, 600, 802, 998, 1291;
=ஆகுக
குறள் 34, 714.
ஆதி=முதல்
குறள் 1, 543.

ஆம்

[தொகு]
ஆம்=ஆகும்
குறள் 125, 144, 146, 175, 351, 375,

376, 390, 397, 453, 488, 556, 573, 627, 643, 664, 685, 686, 690, 763, 787, 788, 849, 858, 860, 881, 889, 896, 897, 932, 939, 942, 977, 1002, 1059, 1075, 1298;

ஆமை=கூர்மம்
குறள் 126.

ஆய்

[தொகு]
ஆய்=ஆகி
குறள் 15, 446, 543, 745, 746, 868, 873, 1025;
ஆய்தொடியார்=பெண்கள், ஆய்ந்தெடுத்த வளையலைஅணிந்தவர்கள்
குறள் 911
ஆயிழை= ஆய்ந்தெடுத்த அணிகலனைஅணிந்தவர், பெண்கள்
குறள் 1081
ஆய்மயில்=ஆராயப்பட்ட? மயில்
குறள் 1124.
ஆய=ஆகிய
குறள் 2, 12
=ஆகியவற்றை
குறள் 1286.
ஆயது=ஆனது
குறள் 12.
ஆயம்==ஊதியம்
குறள் 933
=சூது
குறள் 939.
ஆயவர்=உயர்ந்தவர்
குறள் 1016.
ஆயன்=இடையன்
குறள் 1228.
ஆயார்=ஆகியவரது
குறள் 106.
ஆயிரம்=பத்துநூறு
குறள் 259.
ஆயின்=ஆனால்
குறள் 52, 144, 209, 355, 404, 409, 414,
458, 478, 563, 599, 656, 769, 868, 889,
900, 961, 1018, 1065, 1119, 1156, 1216;
=ஆனால்
குறள் 44, 45, 49, 52, 127, 128, 566,
705, 1005, 1058, 1306, 1321, 1325.
ஆயும்=ஆராய்ந்து அறியும்
குறள் 198, 918;
=ஆராய்ந்து செய்யும்
குறள் 914.
ஆய்ந்தவர்=நாடிஅறிந்தவரது
குறள் 662.
ஆய்ந்தாய்ந்து=ஆராய்ந்துஆராய்ந்து
குறள் 792.
ஆய்ந்து=ஆராய்ச்சிசெய்து
குறள் 517, 792, 795;
ஆய்விடும்=ஆகியேதீரும்
குறள் 133.

ஆர்

[தொகு]
ஆர்=போன்ற
குறள் 906;
=பொருந்திய,சூடிய, அணிந்த
குறள் 1105
=அருமையான
குறள் 73, 1141;
=அரிய
குறள் 121;
=பொறுத்துக்கொள்வதற்குஅரிய
குறள் 1179.
ஆர=நிரம்பிய
குறள் 837, 1265.
ஆரா=நிரம்பாத
குறள் 370.
ஆராய்தல்=ஆய்வுசெய்தல்
நட்பாராய்தல், அதி.80
ஆராய்ந்த=பொருந்தநாடிய, ஆராய்ந்துபார்த்த
குறள் 682, 684.
ஆராய்ந்து=பொருந்திநாடிஅறிந்து
குறள் 586, 711.
ஆராய்வது=பொருந்தநாடுவது
குறள் 584
ஆராய்வான்=பொருந்தநாடுபவன்
குறள் 512.
ஆரார்=நிரம்பார்
குறள் 936.
ஆர்க்கும்=பிணிக்கும், கட்டும்
குறள் 482.
ஆர்வம்= விருப்பம், அன்பு
குறள் 74.
ஆர்வலர்=அன்புடையவர்
குறள் 71.

ஆல்

[தொகு]
ஆல்=அசைநிலை
குறள் 91, 216, 217, 256, 397, 704, 720,
758, 838, 840, 875, 894, 923, 966,
993, 1017, 1038, 1110, 1145, 1148,
1152, 1180, 1184, 1192, 1302, 1303;
=மூன்றாம் வேற்றுமை உருபு(கருவிப்பொருள்)
குறள் 2, 11, 102, 114, 129, 139, 185,202,
220, 242, 265, 279, 283, 294, 309, 371,
418, 422, 514, 517, 561, 588, 642, 660,
678, 686, 732, 757, 768, 804, 817,
825, 892, 894, 896, 991, 1000, 1011,
1017, 1020, 1031, 1106, 1141, 1144,
1182, 1210, 1213, 1216, 1219, 1257, 1280;
மூன்றாம் வேற்றுமைத்தொகை(கருத்தாப்பொருள்)
குறள் 1004;
மூன்றாம்வேற்றுமைத்தொகை(உடனிகழ்ச்சிப்பொருள்)
குறள் 387, 732, 1083.

ஆவது

[தொகு]
ஆவது=ஆதல்
குறள் 283, 427, 461.
ஆவர்=ஆகுவார்
குறள் 1165, 1189, 1218.
ஆவன்=உளனாவேன்
குறள் 1207.
ஆவார்=ஆகுபவர்
குறள் 1299.
ஆவாரை=ஆகுபவரை
குறள் 1074.
ஆவிற்கு=பசுவிற்கு, பசுமாட்டிற்கு
குறள் 1066

ஆழ்

[தொகு]
ஆழ்=ஆழவைக்கின்ற, புதையவைக்கின்ற
குறள் 500.
ஆழி=கடல், கடற்கரை
குறள் 989.
ஆழும்=புக்குஅழுந்தும், அழுந்துகின்ற
குறள் 919.


ஆள்

[தொகு]
ஆள்=படைமறவன், வீரன்
குறள் 500, 746, 1030.
=மேற்கொள்ளுகின்ற
குறள் 618, 632, 1022.
ஆள்வினையுடைமை அதி.62
ஆளப்படும்=செலுத்தப்படுபவன்
குறள் 511
ஆளரை=உடையவரை
குறள் 1230.
ஆளும்= நடத்தும்
குறள் 251, 1252.
ஆள்க=உடையராகுக
குறள் 242;
=செலுத்துக
குறள் 589.


ஆள்பவர்=மேற்கொள்பவர்கள்
குறள் 1017.
ஆள்பவர்க்கு=மேற்கொள்பவர்களுக்கு
குறள் 791.
ஆள்பவற்கு=ஆளுந்திருவுடையவனுக்கு, ஆள்கின்றவனுக்கு
குறள் 383
ஆள்வாரை=ஆளுகின்றவரை
குறள்447.
ஆள்வார்க்கு=ஆளபவருக்கு
குறள் 245
ஆள்வாற்கு=ஆள்கின்றவனுக்கு
குறள் 244

ஆறாது

[தொகு]
ஆறாது=ஆறமாட்டாது
குறள் 129
ஆறு=6 என்னும் எண்
குறள் 381;
=பயன், நெறி, வழி
குறள் 37, 43, 161, 219, 222, 324, 465,
478, 662, 787, 932, 943, 1140;
=தன்மை
குறள் 397, 849, 1321.
ஆறும்=தீரும்
குறள் 129.
ஆற்ற=மிகவும்
குறள் 64, 367, 732, 1209.
ஆற்றல்=வலிமை
குறள் 25, 225, 269, 768, 985;
=ஒத்தல்
குறள் 101;
=பெருமை
குறள் 287, 891;
=பொறுத்தல்
குறள் 225.
ஆற்றலது=ஆற்றலையுடையது
குறள்765.
ஆற்றலின்=வலிமையைவிட/வலிமைக்கு
குறள் 225.
ஆற்றலுள்=செய்வதனுள்
குறள் 469.
ஆற்றா=தாங்கமாட்டாமல்
குறள் 1174, 1175;
=ஒப்பாகாத
குறள் 1175.
ஆற்றாக்கடை=செய்யாவிட்டால்
குறள் 469.
ஆற்றாதார்=வலிமையில்லாதார்
குறள் 894.
ஆற்றாதான்=மாட்டாதவனது, முடியாதவனுடைய
குறள் 1007.
ஆற்றாது=பொறுக்கமாட்டாமல்
குறள் 555;
=செய்யமாட்டாமல்
குறள் 1032.


ஆற்றாமை=பொறுக்கமுடியாமை
பிரிவாற்றாமை அதி.116
ஆற்றார்=மாட்டார்
குறள் 286;
=மாட்டாதவர், இயலாதவர்
குறள் 493, 998.
ஆற்றான்=நெறியால்
குறள் 242, 367,
ஆற்றி=செய்து
குறள் 212, 1276;
=வலியராய்
குறள் 493;
=பொறுத்து
குறள் 515;
=வைத்து
குறள் 568;
=உடையராய்
குறள் 669;
=வல்லராய்
குறள் 748;
=உடம்பட்டு
குறள் 1160.
ஆற்றின்=செய்தால்
குறள் 38, 46, 234;
=வல்லனானால்
குறள் 126, 297, 525;
=நெறியால்
குறள் 123, 164, 468, 477, 725, 975;
=நெறியின்கண்
குறள் 46, 48, 130;
=நெறியினின்றும்
குறள் 716.
ஆற்றின்கண்=இல்லறத்தின்கண்
குறள் 176.
ஆற்று=(துணை)வலிமை
குறள் 798, 814.
ஆற்றுபவர்=செய்யவல்லவர்
குறள் 1165.
ஆற்றுபவர்கண்=செய்யவல்லவரிடத்தில்
குறள் 893.
ஆற்றுபவர்க்கு=செய்யவல்லவர்க்கு
குறள் 741.
ஆற்றும்=தாங்கும்
குறள் 189;
=செய்யும்
குறள் 211;
=செய்துகொள்ளும்
குறள் 1159;
=செய்யும்
குறள் 67, 70, 388, 579?
ஆற்றுவார்=செய்யவல்லவர்
குறள் 975;
=செய்யவல்லவர்க்கு
குறள் 225, 1027.
=செய்யவல்லவரது
குறள் 891, 985.
ஆற்றுவார்க்கு=செய்யவல்லவர்க்கு
குறள் 894.
ஆற்றுவான்=செய்யவல்லவனது
குறள் 130.
ஆற்றேன்=செய்யும் ஆற்றல்இல்லேன்
குறள் 1162

ஆன்

[தொகு]
ஆன்=மூன்றாம்வேற்றுமை உருபு(கருவிப்பொருள்)
குறள்
=மூன்றாம்வேற்றுமை உருபு(உடனிகழ்ச்சிப்பொருள்)
குறள்
ஆனால்=(ஆ+ன்+ஆல்=ஆனால்)ஆயினால்
குறள் 53.
ஆனும்=(ஆ+ய்+இன்+உம்/ஆ+இன்>ன்+உம்)ஆயினும்
குறள் 128, 317, 397, 416.
ஆன்ற=(அகல்+ற்+அ/ ஆல்>ஆன்+ற்+அ)மிகுந்த
குறள் 148, 416, 681, 694, 862, 909, 992, 1022.
ஆன்றாரோடு=(ஆல்>ஆன்+ற்+ஆர்+ஓடு)முற்றறிவு உடையாரோடு, தேவரோடு
குறள் 413.
ஆன்று=(ஆல்>ஆன்+ற்+உ) நிரம்பி
குறள் 635.

அகஇணைப்பான்கள்

[தொகு]
/ஆக/ஆங்கால்/ஆசாரம்/ஆட/ஆணி/ஆம்/ஆய்/ஆர்/ஆல்/ஆவது/ஆழ்/ஆள்/ஆறா/ஆன்.


பார்க்க:
[தொகு]
திருக்குறள் அகரமுதலி
திருக்குறள்அகரமுதலி இகரவரிசை
திருக்குறள்அகரமுதலி ஈகாரவரிசை
திருக்குறள்அகரமுதலி உகரவரிசை
திருக்குறள்அகரமுதலி ஊகாரவரிசை
திருக்குறள்அகரமுதலி எகரவரிசை
திருக்குறள்அகரமுதலி ஏகாரவரிசை
திருக்குறள்அகரமுதலி ஐகாரவரிசை
திருக்குறள்அகரமுதலி ஒகரவரிசை
திருக்குறள்அகரமுதலி ஓகாரவரிசை


திருக்குறள்அகரமுதலி ககரவரிசை

நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | மா- |மி, மீ, மு, மூ- | மெ, மே, மை, மொ, மோ- || யா || வ-|

திருக்குறள் பரிமேலழகர் உரை