white elephant
Appearance
ஆங்கிலம்
[தொகு]- white + elephant
பொருள்
[தொகு]- white elephant, பெயர்ச்சொல்.
- பெரும் கவனமும், நிருவாகச் செலவும் கூடிய, ஆனால் மிகச்சிறு ஆதாயம் தரும் சொத்து; something that has cost a lot of money (to the owner) but has no useful purpose.
- சொந்தக்காரருக்கு மதிப்பில்லாததும், பிறருக்கு உயர்மதிப்புள்ளதுமான ஒரு பொருள்
- கொஞ்சமும் மதிப்பு இல்லாததும் அல்லது மதிப்பே இல்லாததுமான ஒன்று
விளக்கம்
[தொகு]- அரிய, வெளிறிய/மங்கலான நிறம் கொண்ட யானைகள் white elephant எனப்படுகிறது....இந்தியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து மற்றும் மயன்மார் நாடுகளில் இவை மிகவும் புனிதம் மிக்கவைகளாகக் கருதப்பட்டுப் போற்றப்படுகின்றன..ஆனால் இவைகளை வளர்க்க/நிருவகிக்க, ஏற்படும் பெரும் பொருட்செலவுகளால், மிகவும் பாரமானவைகளாக இருக்கின்றன...இவைகளுக்குத் தொடர்ந்த கவனமும், உணவூட்டலும் தேவை... இவை பதிலுக்குச் சொந்தக்காரருக்கு ஈட்டிக்கொடுக்கும் ஆதாயம் சூனியம்...மிகப்புனிதமானதால் ஒரு வேலைக்கும் வெள்ளையானைகளைப் பயன்படுத்தார்...தாய்லாந்து நாட்டு மன்னர்கள் யாரையாவது அழிக்க/ஒழிக்க நினைத்தால், வெள்ளை யானையை அவருக்கு பரிசளிப்பர் என்றும், புனிதமான இந்தப்பரிசை, வெகு கௌரவமாகவும், மரியாதையாகவும் நினைப்பதால், ஏற்றுக்கொள்ள மறுக்கமுடியாத நிலையில், அதை வாங்கிக்கொண்டவர், தன் செல்வத்தையெல்லாம் அதற்குச் செலவிட்டு, இழந்து, பரம ஏழையாகிவிடுவார் என்றும் கதை சொல்வதுண்டு...
- புத்தமதத்திலும், இந்துமதத்திலும் வெள்ளையானைக்குச் சிறப்பான இடமுண்டு...தேவர்களுக்கு அரசனான இந்திரனின் வாகனமான ஐராவதமும் ஒரு வெள்ளை யானைதான்...புத்தனின் தாய் ஒரு வெள்ளையானை ஞானத்திற்கும், தூய்மைக்கும் அடையாளமான தாமரை மலரை அளிப்பதுப்போலக் கனவுக் கண்டபின் புத்தனை ஈன்றெடுத்தாள் எனச் சொல்லப்படுகிறது...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---white elephant--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்