உள்ளடக்கத்துக்குச் செல்

white elephant

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
white elephant:
in Myanmar--மயன்மாரில் ஒரு வெள்ளையானை
white elephant:
in Myanmar--மயன்மாரில் ஒரு வெள்ளையானை
  1. white + elephant

பொருள்

[தொகு]
  • white elephant, பெயர்ச்சொல்.
  1. அரிதான,வெளிறிய, கருநிறம் குன்றிய யானைவகை

ம.தொ.| id.

  1. பெரும் கவனமும், நிருவாகச் செலவும் கூடிய, ஆனால் மிகச்சிறு ஆதாயம் தரும் சொத்து; something that has cost a lot of money (to the owner) but has no useful purpose.
  2. சொந்தக்காரருக்கு மதிப்பில்லாததும், பிறருக்கு உயர்மதிப்புள்ளதுமான ஒரு பொருள்
  3. கொஞ்சமும் மதிப்பு இல்லாததும் அல்லது மதிப்பே இல்லாததுமான ஒன்று

விளக்கம்

[தொகு]
  1. அரிய, வெளிறிய/மங்கலான நிறம் கொண்ட யானைகள் white elephant எனப்படுகிறது....இந்தியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து மற்றும் மயன்மார் நாடுகளில் இவை மிகவும் புனிதம் மிக்கவைகளாகக் கருதப்பட்டுப் போற்றப்படுகின்றன..ஆனால் இவைகளை வளர்க்க/நிருவகிக்க, ஏற்படும் பெரும் பொருட்செலவுகளால், மிகவும் பாரமானவைகளாக இருக்கின்றன...இவைகளுக்குத் தொடர்ந்த கவனமும், உணவூட்டலும் தேவை... இவை பதிலுக்குச் சொந்தக்காரருக்கு ஈட்டிக்கொடுக்கும் ஆதாயம் சூனியம்...மிகப்புனிதமானதால் ஒரு வேலைக்கும் வெள்ளையானைகளைப் பயன்படுத்தார்...தாய்லாந்து நாட்டு மன்னர்கள் யாரையாவது அழிக்க/ஒழிக்க நினைத்தால், வெள்ளை யானையை அவருக்கு பரிசளிப்பர் என்றும், புனிதமான இந்தப்பரிசை, வெகு கௌரவமாகவும், மரியாதையாகவும் நினைப்பதால், ஏற்றுக்கொள்ள மறுக்கமுடியாத நிலையில், அதை வாங்கிக்கொண்டவர், தன் செல்வத்தையெல்லாம் அதற்குச் செலவிட்டு, இழந்து, பரம ஏழையாகிவிடுவார் என்றும் கதை சொல்வதுண்டு...
  2. புத்தமதத்திலும், இந்துமதத்திலும் வெள்ளையானைக்குச் சிறப்பான இடமுண்டு...தேவர்களுக்கு அரசனான இந்திரனின் வாகனமான ஐராவதமும் ஒரு வெள்ளை யானைதான்...புத்தனின் தாய் ஒரு வெள்ளையானை ஞானத்திற்கும், தூய்மைக்கும் அடையாளமான தாமரை மலரை அளிப்பதுப்போலக் கனவுக் கண்டபின் புத்தனை ஈன்றெடுத்தாள் எனச் சொல்லப்படுகிறது...
( மொழிகள் )

சான்றுகோள் ---white elephant--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=white_elephant&oldid=1992752" இலிருந்து மீள்விக்கப்பட்டது