சங்கதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sanskrit -
  2. சங்கதம், சங்கத மொழி
  3. சமசுகிருதம், சமசுக்கிருத மொழி, வடமொழி
  4. appropriateness, consistency - பொருத்தம்
  5. acquaintance, friendship - நட்பு
  6. complaint - முறையீடு
விளக்கம்

மொழியியல் அடிப்படையில், ஒரு மொழிச் சொல் இன்னொரு மொழியில் புழங்கும் போது, அச்சொல் அம்மொழியினரின் இயல்புக்கு ஏற்ப அல்லது பலுக்கல் முறைக்கு ஏற்ப வேறுபடும். அதனடிப்படையில் சங்கதம் எனும் சொல்லே சரியானது ஆகும்.

சமற்கிருதம், சமசுக்கிருதம், சமசுகிருதம் என்றும் தமிழில் குறிப்பிடப்படுகிறது.

பயன்பாடு
  1. ஏறத்தாழ 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரின் தேவரங்களில் சங்கதம் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

(இலக்கியப் பயன்பாடு)

  1. ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்தசங்கத பங்கமாப்
    பாகதத்தொ டிரைத்துரைத்த சனங்கள்வெட்குறு பக்கமா
    மாகதக்கரி போல்திரிந்து புரிந்துநின்றுணும் மாசுசேர்
    ஆகதர்க்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே
    திரு ஆலவாய் பதிகத்தில் திருஞானசம்பந்தர் பாடிய பாடல்.
  2. சங்கத பங்கமாப் பாகதத்தொடிரைத் துரைத்த (தேவாரம். 858, 2).

ஆதாரங்கள் ---சங்கதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

(சங்கதி)-(சங்கம்)-(மொழி)

"https://ta.wiktionary.org/w/index.php?title=சங்கதம்&oldid=1969218" இலிருந்து மீள்விக்கப்பட்டது