ஏர்
Appearance
பொருள்
- (பெ) ஏர்
- ஏ + ர் = ஏர்
- நிலத்தைக் கிளறிப் பயிர் செய்ய உகந்ததாக்குவதற்கு உதவும் ஒரு கருவி; கலப்பை
- ஒரு கலப்பையும் ஓரிணைமாடும்
- உழவு மாடு
- உழவு
- ஒருநாளி லுழக்கூடிய நிலம்
- அழகு
- தோற்றப் பொலிவு
- எழுச்சி
- நன்மை
- செயல்பாட்டை கொண்டது; செயல்பாடு என்பது இங்கு, உள்ளீடு(களை) எடுத்து, செயல்படுத்தி வெளியீடு(களை) உருவாக்குவது
- (எ. கா.) எனது கடவுச்சீட்டு புதுப்பிக்கும் விண்ணப்பம் ஏராடப்பட்டு வருகிறது (my passport renewal application is being processed)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- plough, plow
- team of oxen and the plough
- ploughing, agriculture, as an occupation
- yoke of oxen
- as much land as can be ploughed in a day
- beauty
- fine appearance, bearing
- development, growth
- goodness
- process
விளக்கம்
பயன்பாடு
- வயலில் ஏர் உழுதான் (he ploughed the land)
(இலக்கியப் பயன்பாடு)
- ஏர் ஓட்டும் மக்கள் எல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேர் ஓட்டம் ஏன் உனக்கு ..? (பாடல்)
- ஏராலே சேறாக்கி யெருவாலே கருவாக்கி நீராலே பைங்கூழை நிலைப்பார் (ஏரெழுபது, கம்பர்)
{ஆதாரம்} --->