பத்து
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
பத்து(பெ)
பொருள்
10
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(உருசியம்)
பயன்பாடு
- வயற்காட்டைப் பத்து என்று சொல்வார்கள். சோற்றுப் பருக்கையையும் சொல்வது பத்து என்றுதான். 'பத்துப் பாத்திரம் தேய்ப்பது', பத்தும் தண்ணியுமாக் குடிச்சேன்' என்பன எடுத்துக்காட்டுகள். பசி வந்திடப் பத்தும் பறந்து போம்' என்றால், பசி வந்தால் சிறந்த பத்துக் குணங்களும் பஞ்சாகப் பறந்துபோய்விடும் என்றும் அந்தப் பத்துக் குணங்கள் எவை என்றும் பட்டிமன்றப் புலவர்கள் விரித்துரைப்பார்கள். கறி, குழம்பு, கூட்டு, பொரியல் எதுவுமின்றியே பசி வந்தால் வெறும் பத்தும் பறந்து உள்ளே போகும் என்பது எளிய பொருள். (படுவப் பத்து (1), நாஞ்சில்நாடன்)
- வயல்வெளிகளைப் பற்றிப் பேசும்போது வடக்குப் பத்து, தெற்குப் பத்து, மேலப்பத்து, கீழப்பத்து எனத் திசைகள் சார்ந்தும், புறப்பத்து, கண்டமூட்டுப் பத்து, சாத்தாங்கோயில் பத்து, மடத்துப் பத்து என்று இடங்களையும், தேரூர் பத்து, கடுக்கரைப் பத்து, புத்தேரிப் பத்து, பறத்தைப் பத்து என்பது ஊர்களையும் வைத்துப் பேசுவது. மற்றும் பதிற்றுப் பத்து என்பதற்கும் படுவப் பத்து என்பதற்கும் யாதொரு பிணையும் இல்லை. மருதாணியைப் பகலில் நிறம் பிடிப்பதை பகல் பத்து என்றும் இரவில் நிறம் பிடிப்பதை இராப்பத்து என்றும் கூறுவதுண்டு. திருவரங்கத்தில் ஒரு திருவிழா நாளில் பகல் பத்து பாடியும் ஆடியும் கேட்டதும் நினைவில் இருக்கிறது. (படுவப் பத்து (1), நாஞ்சில்நாடன்)
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - பத்து