காவணம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காவணம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- காவணம் = கா + அணம்
- "பந்தல்" என்ற சொல்லின் ஆட்சியைப் பார்ப்போம்: திருமணத்திற்குப் பந்தல் போடும் வழக்கம் இந்நாட்டில் சாலப் பழமை வாய்ந்தது. காவிரிப்பூம்பட்டினத்திலே செல்வக் குடியிற் பிறந்த கண்ணகிக்கும் கோவலனுக்கும் முத்துப் பந்தலிலே திருமணம் நிகழ்ந்தது. "மாலை தாழ் சென்னிவயிரமணித் தூணகத்து நீல விதானத்து நித்திலப் பூம்பந்தர்" என்று அப்பந்தலைச் சிலம்பு பாடிற்று. கோடையிலே வழிநடந்து செல்வார்க்கு நீரும் நிழலும் தரும் பந்தலைத் "தண்ணீர்ப் பந்தல்" என்பர்.
- இத்தகைய மேன்மையான சொல் தனவணிகர் நாடு என்னும் செட்டிநாட்டிலே அமங்கலச் சொல்லாகக் கருதப்படுகின்றது. பந்தல் என்பது அந்நாட்டிலே மணப்பந்தலைக் குறிப்பதில்லை; பிணப் பந்தலையே குறிக்கும். இழவு வீட்டில் போடுவது பந்தல்; கல்யாண வீட்டில் போடுவது காவணம் அல்லது கொட்டகை. இலக்கியத்தில் வழங்கும் "காவணம்" என்ற சொல் செட்டிநாட்டிலே பழகு தமிழாய்ப் பயில்கின்றது. (பழகு தமிழ்: வேருக்கு நீர் வார்த்தவர்கள் -1, இடைமருதூர் கி.மஞ்சுளா, தமிழ்மணி, 14 ஆக 2011)
பயன்பாடு
- காவணக்கால் நடு - set up the first post of a marriage pandal with ceremonies on an auspicious day
- காவணப்பத்தி - the ornamental roof of a mansion
(இலக்கியப் பயன்பாடு)
- காவணங்களிற் றோன்றினபச்சிளங் கமுகம் (பாரத. கிருட். 56)
- காவண மிலங்கு மந்தண் காசி (காசிக. வியாதன்சா. 23).
- தேவாசிரியனெனுந் திருக்காவணம் (பெரியபு.திருக்கூட்ட. 2).
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---காவணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
பந்தல் - பந்தர் - கொட்டகை - மேடை - மண்டபம் - காவணக்கால் - காவணப்பத்தி - பந்தற்கால்