பந்தல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) பந்தல்
- கால் நட்டுக் கீற்றுக்கள் பரப்பிய இடம்; பந்தர்; கொட்டகை
- நீர் விழுதற்குக் குழாய் வடிவாகச் செய்யப்பட்ட கருவி
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- pandal; a temporary shed used for meetings; shed with sloping roofs, cow-stall, marriage pandal
- a conduit pipe to carry water from a higher level to a lower one
விளக்கம்
- "பந்தல்" என்ற சொல்லின் ஆட்சியைப் பார்ப்போம்: திருமணத்திற்குப் பந்தல் போடும் வழக்கம் இந்நாட்டில் சாலப் பழமை வாய்ந்தது. காவிரிப்பூம்பட்டினத்திலே செல்வக் குடியிற் பிறந்த கண்ணகிக்கும் கோவலனுக்கும் முத்துப் பந்தலிலே திருமணம் நிகழ்ந்தது. "மாலை தாழ் சென்னிவயிரமணித் தூணகத்து நீல விதானத்து நித்திலப் பூம்பந்தர்" என்று அப்பந்தலைச் சிலம்பு பாடிற்று. கோடையிலே வழிநடந்து செல்வார்க்கு நீரும் நிழலும் தரும் பந்தலைத் "தண்ணீர்ப் பந்தல்" என்பர்.
- இத்தகைய மேன்மையான சொல் தனவணிகர் நாடு என்னும் செட்டிநாட்டிலே அமங்கலச் சொல்லாகக் கருதப்படுகின்றது. பந்தல் என்பது அந்நாட்டிலே மணப்பந்தலைக் குறிப்பதில்லை; பிணப் பந்தலையே குறிக்கும். இழவு வீட்டில் போடுவது பந்தல்; கல்யாண வீட்டில் போடுவது காவணம் அல்லது கொட்டகை. இலக்கியத்தில் வழங்கும் "காவணம்" என்ற சொல் செட்டிநாட்டிலே பழகு தமிழாய்ப் பயில்கின்றது. (பழகு தமிழ்: வேருக்கு நீர் வார்த்தவர்கள் -1, இடைமருதூர் கி.மஞ்சுளா, தமிழ்மணி, 14 ஆக 2011)
{ஆதாரங்கள்} --->