கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
'ஏ' எழுதும் முறை
ஏ என்னும் எழுத்தின் தமிழ் பிரெய்ல் வடிவம்

(பெ)

பொருள்
  1. நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒரு மொழி
  2. என்பது, உயிர் எழுத்துக்களில், 8வது எழுத்தாகும்.
  3. ஏ = அம்பு (பெயர்ச்சொல்)
  4. ஏ = ஏவு (வினைச்சொல்)
  5. ஏ - (இடைச்சொல்)
  6. ஏ = பெருமை "ஏ பெற்று ஆகும்" - தொல்காப்பியம் உரியியல் (உரிச்சொல்)
  7. என்பது, விளிச்சொல்லாகவும் பயனாகிறது.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. the eighth tamil vowel,
  2. arrow
  3. activate
  4. an addenda in nouns to express the moods of certainty, questioning, negative, clarity, threatening, counting,
  5. the greatness
  6. hey.
விளக்கம்

இடைச்சொல்[தொகு]

  • ஏ இடைச்சொல் 5 பொருளில் வரும் (தொல்காப்பியம் 2-7-9)
ஈற்றசை
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே (அகநானூறு 1)
எண்
நிலனே நீரே தீநே வளியே வெளியே
தேற்றம்
அவனேஎ கொண்டான்
பிரிநிலை
அவனே கொண்டான்
வினா
நீயே மொண்டாய்?
  • தெளிவு (அளபெடுக்கும்) (தொல்காப்பியம் 2-7-13
நீயேஎ கொண்டாய்
  • எண்ணும்போது இடை விட்டும் எண்ணப்படும் (தொல்காப்பியம் 2-7-40
தோற்றம் இசையே நாற்றம் சுவையே உறலோடு ஆங்கு ஐம்புலனெ என மொழிப
  • எண்ணும்போது தொகைச்சொல் பெற்றே முடியும் (தொல்காப்பியம் 2-7-42
சாத்தனே கொற்றனே பூதனே என மூவரும் வந்தார்.
  • ஏ - (அன்றே) குறிப்பு (தொல்காப்பியம் 2-7-34
அன்று ஈற்று ஏ - அன்றே அன்றே
  • ஏ – (நன்றே) குறிப்பு (தொல்காப்பியம் 2-7-34
நன்று ஈற்று ஏ - நன்றே நன்றே
  • ஏ – அசைநிலை (தொல்காப்பியம் 2-7-24
ஏஎ அம்பல் மொழிந்தனம் யாமே
  • ஏ – ஈற்றில் ஓரசை ஆகலும் உரித்து (தொல்காப்பியம் 2-7-38
கடல்போல் தோன்றல காடு இறந்தோரே

உரிச்சொல்[தொகு]

பொருள்
பெற்று என்னும் பெருமை
இலக்கணம்
"ஏ பெற்று ஆகும்" - தொல்காப்பியம் 2-8-7
இலக்கியம்
ஏ கல் அடுக்கம் (நற்றிணை 116)
விளக்கம்
ஏ < ஏற்றம் < ஏறு
மொழிபெயர்ப்பு[தொகு]
greatness (ஆங்கிலம்)
பிறமொழி
பயன்பாடு

(எ.கா.) ' , அங்க பார்!.' - ' hey, look there ! '


 :(), (பலுக்கல்), (மெய்யெழுத்து), (உயிர்மெய்யெழுத்து).

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏ&oldid=1995602" இலிருந்து மீள்விக்கப்பட்டது