கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
'ஐ' எழுதும் முறை
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

, பெயர்ச்சொல்.

ஐ-சைகை நிகழ்படம்
9வது இந்தி உயிரெழுத்துthumb
 1. 9 ஆம் உயிரெழுத்து
 2. தலைவன்
 3. அழகு
 4. ஐந்து
 5. ஐயம்
 6. வியப்பு
 7. மெல்ல - பைய
 8. பண்புப்பெயர் விகுதி
 9. ஒரு சாரியை
 10. கடவுள்
 11. விகுதி
 12. குரு
 13. கோழை
 14. சர்க்கரை
 15. தும்பை
 16. தண்ணீர் முட்டான் கிழங்கு
 17. துர்க்கை
 18. நுண்மை
 19. பருந்து
 20. தந்தை
 21. பெருநோய்
 22. யானையைப் பாகன் அதட்டும் ஓசை
 23. ஐயம்
 24. ஓரிடைச்சொல்
 25. கணவன்
 26. பாஷாணம்
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. the ninth tamil vowel
 2. leader
 3. beauty
 4. five
 5. doubt
 6. astonishment, awe
விளக்கம்
1) திருக்குறள்: எழுத்தினால் ஆரம்பமாகும் குறள்கள் = மொத்தம் 4.
2) என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் - திருக்குறள் 771
3) சிலப்பதிகாரம்
 • ஆடகப் பெரு நிறை ஐ-ஐந்து இரட்டி, (எண்ணுப்பெயர்)
தோடு ஆர் போந்தை வேலோன், 'தன் நிறை" (27:174-175)
 • பெய் வளைக் கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே,
ஐ! என்றாள், ஆயர் மகள் ..[வியப்பு]; (ஆய்ச்சியர் குரவை) (உரிச்சொல் - ஒலிக்குறிப்பு - 'ஐ வியப்பு ஆகும்' - தொல்காப்பியம் 868)
4) அகநானூறு
பகலிலும் அகலா தாகி யாமம்
தவல் இல் நீத்தமொடு யெனக் கழிய.. [பைய]; (அகநானூறு :305)
5) தேவாரம்
பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே.(தேவாரம்)-(ஆறாம் திருமுறை; பாடல் 95; அப்பர்.)
6) பெரியபுராணம் : புவனி புகழ் ஐயடிகள் திருமூலர் காரி. (பெரியபுராணம்.)

(உரிச்சொல்)

பொருள்
வியப்பு
இலக்கணம்
"ஐ வியப்பு ஆகும்" - தொல்காப்பியம் 2-8-88
இலக்கியம்
"ஐதே காமம்" - நற்றிணை 143
சொல் வளப்பகுதி
- ஐவர்
கொல் - கொலை
நில் - நிலை
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐ&oldid=1633647" இருந்து மீள்விக்கப்பட்டது