சான்றோர்
Appearance
பொருள்
சான்றோர்(பெ)
- அறிவொழுக்கங்களால்நிறைந்த பெரியோர், அறிஞர்
- சான்றோர் செய்த நன்றுண்டாயின் (புறநா. 34, 20). சான்றோர் என்றால் அறிஞர் அல்லது அறிவில் சிறந்தவர்கள் என்று பொருள்.
மேலும் கூர்மை என்பதையும் குறிக்கும். சான்றோர் என்றால் ஒரு இனத்தை குறிக்கும். சான்றோர் மருவி சான்றார் என்றாகி பின்பு சாணார் என்றானது.
- சங்ககாலத்துப் புலவர்
- சான்றோர் செய்யுளில் இன்சாரியை உருபுபற்றாது நிற்றல் நோக்கி(தொல். சொல். 1, உரை).
- வீரர்
- தேர்தர வந்த சான்றோ ரெல்லாம் (புறநா. 63, 5).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- பண்பட்ட மக்கள்(Cultured people)
- the great, the learned, the noble
- poets of the Sangam period
- warriors
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சான்றோர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +