அடை
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
அடை (வி)
- சேர்
- இரவு பத்து மணிக்கு ஊரை அடைந்தோம்.(தன்வினை)
- மூடு, சாத்து
- கதவை அடை - கதவை அடைத்தேன். (பிறவினை)
- எட்டிப் பிடி
- எனது இலக்கை அடையும் வரை, எனக்கு அதே நினைவு தான் இருக்கும்.
(பெ)
- அரிசி, பருப்பு வகைகள், சிறு தானியங்கள் அகியவற்றை பல விதமான சேர்க்கைகளில் ஊறவைத்து, மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துத் தோசையைப் போல வட்டமாகச் சுட்டு எடுக்கும் உணவுப் பண்டம் அடை...கத்தரிக்காய், வாழைப்பூ, தேங்காய், வெங்காயம் ஆகியவற்றையும் மிகப்பொடியாக அரிந்து, அடையின் மீதுத் தூவிச் சமைப்பர்...சம்பிரதாயமாக வெல்லம் அடையுடன் தொட்டுக்கொள்ளப்பட்டது...தற்காலத்தில் பலவிதமான சட்டினிகள் அடையுடன் தொட்டுக்கொள்ள அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன...