அபாரம்
Appearance
அபாரம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- exceptionally good; something superb or excellent
- immense; that which is boundless, as not having an opposite shore
விளக்கம்
பயன்பாடு
- என்ன அபாரமான அழகு! - how beautiful
- அழகுடன் அபார அறிவும் கொண்டவர்
- இலங்கையுடன் நடந்த கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா அபாரம்
- அபாரமான திறமை
- நகைச்சுவை கட்டுரைகள் அபாரமாக எழுதுகிறீர்கள் (வாசகர் கடிதங்கள், ஜெயமோகன்)
- இந்திய அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றது
- சூடாகச் சாப்பிட்ட போது இலையப்பம் அபாரமாக இருந்தது (இலையப்பம், ஜெயமோகன்)
- "அபாரம் அபாரம் உன் நாட்டியம் அபாரம்", என்று பாராட்டினார்.
- உன் அறிவுக் கூர்மை அபாரம்! சந்தேகமில்லை. (பொன்னியின் செல்வன், கல்கி)
- "அபாரம்! அற்புதம்! இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்து இதே திறமையோடு இந்த தமிழ்நாட்டில் நீ பிறந்தால் அந்தக் காலத்துக்கே நீதான் மகாகவியாக இலங்குவாய்.(பாண்டிமாதேவி, தீபம் நா. பார்த்தசாரதி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அபாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +