நன்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நன்று (பெ)

 1. அங்கீகாரக் குறிப்பு; பாராட்டுக் குறிப்பு
 2. நல்லது
 3. சிறப்பு
 4. பெரிது
 5. அறம்
 6. இன்பம்
 7. நல்வினை
 8. உபகாரம்
 9. வாழ்வினாக்கம்
 10. சுவர்க்கம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. expression signifying approval, praise
 2. that which is good, goodness
 3. excellence
 4. greatness, largeness
 5. virtue, merit
 6. happiness, felicity
 7. good deed
 8. benefit
 9. prosperity
 10. heaven
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆலயம் தொழுவது சாலவும் நன்று (கொன்றை வேந்தன், ஔவையார்)
 • நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று (மூதுரை, ஔவையார்)
 • ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு!
செந்தமிழ் நாடெனும் போதிலே (பாரதியார்)
 • தீதும் நன்றும் பிறர்தர வாரா
 • கற்றலில் கேட்டல் நன்று
 • நன்றப்பொருளே வலித்தேன் (சீவக. 1932)
 • அங்கிது நன்றிது நன் றெனு மாயை யடங்கிடு மாகாதே (திருவாச. 49, 8)
 • நன்றாகு மாக்கம் பெரிதெனினும் (குறள். 328)
 • சான்றோர் செய்த நன் றுண்டாயின் (புறநா. 34)
 • தக்கார்க்கு நன்றாற்றார் (நாலடி. 327)
 • நன்றாங்கா னல்லவாக் காண்ப வர் (குறள். 379)
 • வாள் வாய் நன்றாயினு மஃதெறியாது விடாதே காண் (கலித். 149)
 • நட்டார் குறை முடியார் நன்றாற்றார் (குறள். 908).


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல் வளப்பகுதி

 :சிறப்பு - பாராட்டு - பிரமாதம் - அருமை - அபாரம்


(உரிச்சொல்)

பொருள்
பெரிது
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)

"நன்று பெரிதாகும்" - தொல்காப்பியம் 2-8-46

(இலக்கியப் பயன்பாடு)

நன்றும் அரிது உற்றனையால் பெரும (அகயானூறு 10)
"https://ta.wiktionary.org/w/index.php?title=நன்று&oldid=1969107" இருந்து மீள்விக்கப்பட்டது