கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உ - சிவன், ஆச்சரியம். ( Yarl.com)

'உ' எழுத்தை எழுதும் முறை
உ என்னும் எழுத்தின் பிரெய்ல் வடிவம்
இது தமிழ் உயிர் எழுத்துக்களில்,ஐந்தாமெழுத்தாகும்.
  • (லக்கணக் குறிப்பு)- என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் குறில் வகை எழுத்தாகும்.
  • இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
  • இரண்டு என்னும் எண்ணின்(2) தமிழ்க் குறியீடு
  • என்னும் வடிவம் பிள்ளையார் சுழி என்பதாகவும் பயனாகிறது.
  • நாள் அதாவது தேதி என்பதைக்குறிக்கும் அடையாளமாகவுமிருக்கிறது...எ.கா...சித்திரை மாதம் 15 உ என்றால் சித்திரை மாதம் பதினைந்தாம் நாள்/தேதி என்று பொருள்.
  • என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் =81 .அவற்றினை இங்கு காணலாம்.

விளக்கம்[தொகு]

பிள்ளையார் சுழியான 'உ' என்பதை ஒரு காகிதத்தின் உச்சியில் சுழித்துவிட்டுதான் மற்ற விவரங்களை அக்காகிதத்தில் எழுதுவார்கள்...வினாயகப் பெருமானின் பிரதிஉருவமாகக் கருதப்படுவதால், இச்சுழியிட்டு எழுதினால் எழுதப்படும் காரியங்கள் எவ்வித தடையுமின்றி நடந்தேறும் என்பது தமிழ் இந்துக்களின் நம்பிக்கை...முதன்முதலில் பொதுவாக இறைவனைக் குறிக்கும் அடையாளமாகயிருந்து, பின்நாளில் வினாயகனை முதலில் தொழும் வழக்கம் நடைமுறையில் வந்தபோது பிள்ளையாரைக் குறித்த அடையாளமாயிற்று...இன்னும் பல்வேறு கருத்துகள் உள்ளன.[1]


மொழிப்பெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம் : the fifth tamil vowel.
  • tamil numerical sign for 2(two)
  • sign of god (lord vinayaka) written before commencing any writing
  • sign to represent the word date


சொல் வளப்பகுதி----------(உங்கள் மொழியறிவை, அகலமாக்கும் பகுதி.)
1.பலுக்கல், 2.எழுத்து, 3. , 4.மெய்யெழுத்து, 5.உயிர்மெய்யெழுத்து.
"https://ta.wiktionary.org/w/index.php?title=உ&oldid=1889435" இலிருந்து மீள்விக்கப்பட்டது