ஏகபோகம்
Appearance
பொருள்
ஏகபோகம், .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sole enjoyment or possession; monopoly, exclusivity
- abundance
- single crop
- mutual, reciprocal enjoyment
விளக்கம்
- ஏகபோகம் = ஏக + போகம்
பயன்பாடு
- ஏகபோகம் என்பது சட்ட விரோதச் சூழ்ச்சிகள் மூலம் போட்டியாளர்களை ஒழித்து விடுவதால் அடையப்படுவது அல்ல. சுயமுயற்சியின் மூலம் ஒரு பொருளை அல்லது சேவையை உருவாக்கி, அதைச் சந்தைப்படுத்தி, அதற்கான சந்தையை விரிவுபடுத்தித் தனித்தன்மையான அடையாளத்தையும், நிலையான இடத்தையும் உருவாக்கிக் கொள்வதே ஏகபோகம். அந்தச் சேவை அல்லது பொருள் கொஞ்ச காலத்துக்காவது தம் வசமே, தாம் மட்டுமே வழங்குவதாக இருக்கும்படி செய்வதே ஏகபோகம். (போட்டி போடாமல் வெல்வது எப்படி? தினமணி, 21 May 2012)
- ஏகபோக விளைச்சல்
- இன்று தொலைக்காட்சி, தொலைக்காட்சி சேனல்களை விநியோகிக்கும் கம்பிவட இணைப்பு, நாளிதழ், வார இதழ், பண்பலைச் சேனல் என ஊடகங்களின் ஆதி முதல் அந்தம் வரை ஒரே குழுமத்தின் கட்டுப்பாட்டில் வந்து இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஊடகத் துறையில் இத்தகைய ஏகபோகம் உருவாகும் போது, உண்மையோ இல்லையோ அவர்கள் சொல்வதுதான் செய்தி என்ற நிலைமை உருவாகிறது. இலங்கையில் போர் உச்சத்திலிருந்த போது இத்தகைய மீடியா ஏகபோகத்தால் பல உண்மைச் செய்திகள் தமிழ் மக்களைச் சென்றடையவே இல்லை என்று சொல்கிறார் ஊடக நோக்கர் ஒருவர். (ஊடக ஏகபோகம் : சமூகத்துக்குச் சாவுமணி , கீற்று)
- (இலக்கியப் பயன்பாடு)
- ஏகபோகமாய் நீயுநானுமாய் இறுகும்வகை பரமசுகமதனையருள் . . . பெருமாளே (திருப்பு. 862)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- தனியுரிமை - ஆதிக்கம் - போகம் - அனுபவம் - ஏகாதிபத்தியம் - சர்வாதிகாரம் - #
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஏகபோகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற