உள்ளடக்கத்துக்குச் செல்

கற்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கற்பம்:
-இந்துவியல்
கற்பம்:
புளியாரை-பொருள் எண்-11
கற்பம்:
-கஞ்சா-பொருள் எண்-12
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--कल्प/काल्प--க1ல்ப1/கா1ல்ப1--மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • கற்பம், பெயர்ச்சொல்.
  1. இருத்தற்கு ஏற்படுத்தப் பட்ட இடம் (சீவக. 600, உரை.)
  2. நானூற்று முப்பத்திரண்டுகோடி வருடங் கொண்ட பிரமனது ஒருநாள்
    (எ. கா.) கற்பம் பலசென்றன (கம்பரா. சரபங். 18)
  3. பிரமனுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் (திவா.)
  4. இந்திரன் முதலிய தேவர்க்குரிய வாழ்நாளளவு
    (எ. கா.) ஆயுக்கற்பத் தினை மிகவுடைய இந்திரன் (சிலப். 11, 154, உரை)
  5. ஆயுளை நீடிக்கச் செய்யும் மருந்து
    (எ. கா.) காயகற்பந் தேடி (தாயு. பரிபூ. 13)
  6. இலக்ஷங்கோடி (பிங். ) (Arith.)
  7. தேவர் உலகம் (பிங். )
  8. பசுவின் சாணத் தைக் கையாலேந்தி ஆகமப்படி உண்டாக்கிய திருநீறு (சைவச. பொது. 178.)
  9. காண்க...கற்பசூத்திரம்
    (எ. கா.) கற்ப முஞ் சொற்பொருள்தானும் (திவ். பெரியதி. 2, 8, 5).
  10. கற்பகம் (சூடாமணி நிகண்டு)
  11. காண்க... புளியாரை (மலை.)
  12. காண்க... கஞ்சா (M.M. 389.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. abode of peace, as chosen by gods or men
  2. A day of Brahmā, a period of 4,320,000,000 years of mortals
  3. period of Brahmā's life- time
  4. The standard by which the life-time of Indra and other celestials is measured
  5. medicine to promote longevity
  6. (Arith.) The number 1,000,000,000,000
  7. The world of gods
  8. sacred ashes prepared according to Āgamas from cowdung received directly from the cow, by hand
  9. See கற்பசூத்திரம்
  10. See கற்பகம்
  11. yellow wood-sorrel
  12. indian hemp


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கற்பம்&oldid=1401139" இலிருந்து மீள்விக்கப்பட்டது