சேக்காளி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சேக்காளி(பெ)
- தோழன், தோழி; தோழமையுள்ளவ-ன்-ள்; நண்பன், கூட்டாளி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நேரம் கடந்து கொண்டிருந்தது. .. இரவு 1:50. .. . புறப்பட யத்தனித்தேன். .. கான் சாகிப் "பேசாமல் என் ரூமில படு" என்றார். வர்ணக் கோரம்பாயும் தலையணையும் போர்வையும் எடுத்துப்போட்டார். சங்கு மார்க் லுங்கியும் வர்ணத்துண்டும் தந்தார். விரித்துப் படுத்தேன், இரா முழுக்கப் பேசிக் கொண்டிருந்தார்., அவர் பேசினால் சிரித்துச் சிரித்துக் குடலறுந்து போகும். அப்படித்தான் தொடங்கியது (எங்கள் நட்பு). ஒரு சேக்காளி, சகா, தோஸ்த், நண்பன் எனப் பாய்ந்துபோயிற்று காலம். (கான் சாகிப், நாஞ்சில் நாடன்)
- சங்கரமூர்த்தி வீடு வரைக்கும் போனாள் பேச்சியம்மை. அவன் மதுசூதனனின் வகுப்புத் தோழன், நெருங்கிய சேக்காளி. (பேச்சியம்மை, நாஞ்சில் நாடன்)
- தாத்தா மரம்போக மத்தது மன்னானுக்கு. தாத்தாவுக்கு நல்ல சேக்காளி. இப்பமும் குடும்பத்துக்கு நல்ல ஒத்தாசை. (வஞ்சம், ஆதவன் தீட்சண்யா)
- கிராமத்துத் தெருக்களில் நடந்து போகும்போது எனக்கு ஏழு வயது - யாராவது பெண்கள் அழைத்து, அஞ்சலட்டையைத் தந்து வாசிக்கச் சொல்வார்கள். என்னுடன் வரும் சேக்காளிகள் சிட்டாகப் பறந்துவிடுவார்கள். நான் அந்தக் கார்டை வாங்கிப் பார்ப்பேன். கூட்டெழுத்தில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளை வாசிக்கும்போது கண்ணுக்கு எதிரே பூச்சி பறக்கும். நான் எப்படியோ, முக்கித் தக்கி, ஒரு வழியாக கல்வெட்டு எழுத்தை வாசிப்பதுபோல வாசித்து விடுவேன். ‘நல்லா பாருப்பா.. இன்னம் ஏதாச்சும் தாக்கல் இருக்கும்’ என்ற பெண்ணின் குரலுக்கு ‘அவ்வளவுதாங்க’ என்று சொல்லிவிட்டு ஓடிவிடுவேன். தெருமுனையில் எனக்காகக் காத்திருக்கும் சேக்காளி, ‘நல்லா மாட்டிக்கிட்டியா’ என்பான். இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனான நான் அஞ்சலட்டை வாசித்தது செய்தியாகப் பரவியது. (வாசிப்பின் வழியே பதிவாகிடும் வாழ்க்கை, ந.முருகேச பாண்டியன்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சேக்காளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +