ஞான்று
Appearance
பொருள்
ஞான்று(பெ)
-
- ஊசலூர்ந்தாட வொருஞான்று வந்தானை(கலித். 37)
- நேரத்தில், காலத்தில்.
- அம்மனைக்கோ லாகிய ஞான்று (நாலடி, 14)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- எஞ்ஞான்றும் வாழ்க - may you live long
- பிற்றைஞான்று - மற்றைஞான்று - the following day.
- உயிர்மெய் எழுத்துகளில் க,ச,த,ந,ப,ம,வ,ய,ஞ,ங எனும் பத்து மட்டுமே சொல்லின் முதல் எழுத்தாக வரக் கூடியவை. இவற்றுள் "ங" மொழி முதலில் எப்படி வரும் என்று ஐயம் தோன்றலாம். அ,இ,உ, எ, யா என்பனவற்றோடு இணைந்து அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம் என வரும் என இலக்கணம் இயம்புகிறது. ஞ எனும் எழுத்து ஞாயிறு, ஞாலம், ஞான்று, ஞிமிறு (வண்டு) ஞமலி (நாய்) எனப் பல சொற்களில் வருதல் காணலாம். .(பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, தினமணிக்கதிர், 12 டிச 2010)
(இலக்கியப் பயன்பாடு)
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை (திருக்குறள்)
ஆதாரங்கள் ---ஞான்று--- DDSA பதிப்பு + வின்சுலோ +