வண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
வண்டு
பல்வகை வண்டினங்கள் (படத்தைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும்)
வண்டு
தமிழ்


வண்டு பெயர்ச்சொல்

பொருள்
  1. அறுகால் கொண்ட பறக்கும் ஒரு பூச்சியினம், பறவை. கோலியாப்டெரா (Coleoptera) என்னும் காப்புறை சிறகிகள் என்னும் உயிரினப் பெயர் கொண்ட இனத்தைச் சேர்ந்த உயிரினம். பறக்கப் பயன்படும் இறக்கைகளைக் காக்கும் பொருட்டு கெட்டியான வன்சிறகு அல்லது காப்புச் சிறகு (elytra) கொண்டிருப்பது இந்த இனத்தின் சிறப்பு. உலகில் ஏறத்தாழ 350,000 வகை வண்டினங்கள் உள்ளன்.
  2. மறவருள் ஓர் உட்பிரிவினர்
  3. அம்பு
  4. குற்றம்
  5. கைவளை
  6. சங்கு
  7. நூல் (பஞ்சுநூல்)
  8. பூசம் (நாள்மீன்)
  9. செம்மரம்
  10. நடனத்தில் கைமுத்திரைகளில் ஒன்று
  11. சிற்றொழுக்கம்
  12. தானியம் அளக்கையில் கீழேவிழும் தானியத்தைப் பிடித்துக் கொள்ளும் வைக்கோற்கூடு
  13. முற்காலத்தில் மாட்டுவண்டியில் நெடுந்தொலைவு செல்லும்பொழுது இழுத்துச் செல்லும் மாடுகளின் உணவாக வண்டியின் மேலிடும் வைக்கோற்பழுதை.
மொழிபெயர்ப்புகள்

[தொகு]

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]


{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=வண்டு&oldid=1636334" இருந்து மீள்விக்கப்பட்டது