நனை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- நனை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நான் மழையில் நன்றாக நனைந்தேன்
- கடல் அலையில் காலை நனைத்தாள்
- ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம் (பழமொழி)
- முழுக்க நனைந்தபின் முக்காடெதற்கு? (பழமொழி)
- இளைய நிலா பொழிகிறது இதயம் வரை நனைகிறது (பாடல்)
- நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன் (பாடல்)
- நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன் எனக்கும் கூட நனைந்தால் மிக பிடிக்கும் என்றாய் (பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- நனைகவுள் யானையால் யானையாத் தற்று (திருக்குறள், 678)
- பிடவ மலரத் தளவ நனைய (ஐங்குறுநூறு. 499)
- மகிழ் நனை மறுகின் மதுரையும் (சிறுபாணாற்றுப்படை. 67)
நனைத்தல் (வி)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஈரமாக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இதமான வெந்நீரில் உடலை நனைத்தேன்
- குண்டு வீச்சுக்குப் பலியான தமிழர்கள் ரத்தம் பூமியை நனைத்தது
- வேர்வை கொட்டி முதுகுப்புறத்தை நனைத்தது ( அந்தப் பையன், புதுமைப்பித்தன்)
- வானமாதேவி சக்கரவர்த்தியின் காலடியில் அமர்ந்து, அவருடைய பாதங்களைக் கண்ணீரால் நனைத்தாள் (பொன்னியின் செல்வன், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
நனை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மாநனை கொழுதி மகிழ்குயி லாலும் (நற்றிணை. 9)
- நனை கொள் போது வேய்ந்து நாதற் பாடுகின்றான் ([[சீவக சிந்தாமணி]. 1417)
- மாரியினளிக்குநின் சாறுபடு திருவி னனைமகி ழரனே (பதிற்றுப்பத்து. 65, 17)
ஆதாரங்கள் ---நனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +