உள்ளடக்கத்துக்குச் செல்

நெடுவரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பூமியின் நெடுவரைக் கோடுகள்
பொருள்

நெடுவரை (பெ)

  1. நில உருண்டையின் மீது வடக்கு-தெற்காக சீரான இடைவெளியுடன் கற்பனையாக வரையப்பட்ட நெடுக்குக் கோடுகள். இதனை λ (லாம்டா) என்னும் கிரேக்க எழுத்தால் குறிப்பர். இங்கிலாந்தில் உள்ள கிரீன்விச் (Greenwich) என்னும் இடத்தில் அமைந்துள்ள வேந்திய விண்காணி (Royal Observatory) நிலையம் வழியாகச் செல்லும் நெடுவரை 0° பாகை (சுழியப் பாகை) என்று கொண்டு, நெடுவரைகள் கிழக்கும் மேற்குமாக குறிப்பிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சென்னை நகரத்தின் நெடுவரை ஆள்கூறு (coordinate): 80°16′12″E    (80 பாகை, 16 பாகைத்துளி, 12 பாகைநொடி, கிழக்கு)
விளக்கம்
  • எல்லா நெடுவரைக்கோடுகளும் வடமுனையில் ஒரு புள்ளியிலும் தென் முனையில் ஒரு புள்ளியிலும் கூடும்.
  • ஒரு முனையின் மேலே இருந்து பார்த்தால், இருக்கும் 360° சுழற்சியை 24 மணிநேரத்தில் புவி தன் அச்சில் சுழல்வதால், ஒரு மணியில் புவி சுழலும் அளவு 15° நெடுவரைகள் ஆகும் (360°/24 மணிகள் = ஒரு மணியில் 15°நெடுவரை)
பயன்பாடு
  • -
மொழிபெயர்ப்புகள்
  • -
"https://ta.wiktionary.org/w/index.php?title=நெடுவரை&oldid=780719" இலிருந்து மீள்விக்கப்பட்டது