பட்டினப்பாலை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பட்டினப்பாலை, பெயர்ச்சொல்.
- பட்டினப்பாலை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் .
நூலின் வகை
[தொகு]- பட்டினப்பாலை, பத்துப்பாட்டு என்னும் தொகை நூலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தொகை நூல்கள்
[தொகு]- சங்க இலக்கியங்களான திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,பெரும்பாணாற்றுப்படை முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம் போன்று பட்டினப்பாலையும், தொகை நூல்களுளொன்று.
நூலின் அமைப்பு
[தொகு]- நேரிசை ஆசிரியப் பாவினால் இயன்ற இந்நூல் 301 அடிகளைக் கொண்ட செய்யுளால் ஆனது. கூடுதல் செய்திகளுக்கு: தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ காண்க : https://thamizppanimanram.blogspot.com/
நூலின் பகுப்பு
[தொகு]- சோழவளநாட்டின் சிறப்பு, காவிரியின் சுழிப்பு, பொருள் வளம், மன்னன் கரிகால் பெருவளவனின் ஆளுமை போன்ற பகுப்புகளை உள்ளடக்கியது இந்நூல்.
நூலை இயற்றியவர்
[தொகு]- பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார்.
நூலின் காலம்
[தொகு]இந்நூல் கி.பி.2-ஆம் நூற்றாண்டுக்கு புன்பாக எழுந்தது என்பது அறிஞர்கள் முடிவு !
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/09-ilakkiyam.html