குறிஞ்சிப்பாட்டு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- குறிஞ்சிப்பாட்டு, பெயர்ச்சொல்.
- (குறிஞ்சி+பாட்டு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A poem in Pattu-p-pāṭṭu by Kapilar, treating of the tactful way in which the confidante communicates to the fostermother, the heroine's love-affair
நூல் வகை
[தொகு]- பத்துப்பாட்டு என்னும் வகைப்பாட்டைச் சேர்ந்தது.
தொகை நூல்கள்
[தொகு]- சங்க இலக்கியங்களான திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, மலைபடுகடாம் போன்று குறிஞ்சிப்பாட்டும் பத்துப்பாட்டு என்னும் தொகை நூல்களுளொன்று.
நூலின் அமைப்பு
[தொகு]- 261 அடிகளால் இயன்ற நேரிசை ஆசிரியப்பா அமைந்த நூல். கூடுதல் செய்திகளுக்கு: தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ காண்க :
பெயர் விளக்கம்
[தொகு]- தலைவனும் தலைவியும் காதல் வாழ்க்கைக்கு உடம்படுதல் “குறிஞ்சி” ஒழுக்கமாகும். குறிஞ்சி ஒழுக்கத்தைப் பற்றிப்
பாடுவதால் இந்நூல் குறிஞ்சிப்பாட்டு எனப்பெற்றது.
நூலை இயற்றியவர்
[தொகு]- இந்நூலை இயற்றியவர் கபிலர் என்னும் பெரும்புலவர்.
நூலின் காலம்
[தொகு]- கி.பி. 2 -ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்நூல் இயற்றப்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து !
நூலின் சிறப்பு
[தொகு]- குறிஞ்சிப்பாட்டு செய்யுளில் கபிலர் 99 வகையான பூக்களின் பெயர்களை விவரிக்கிறார். வேறெதிலும் காணப்படாத சிறப்பு இது.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/08-ilakkiyam.html