உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Sengai Podhuvan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வரவேற்புரை

[தொகு]

வாங்க! Sengai Podhuvan

உங்கள் வருகைக் குறித்து மகிழ்ச்சி. உங்களது முயற்சி, மேலும் சிறக்க எனது அனுபவங்களை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1)தேடியின் (தேடுசாளரம்) மூலம் நீங்கள் பங்களிக்கும் சொல், ஏற்கனவே உள்ளதா? என சரி பாரத்துக் கொள்ளவும்.அது இல்லையெனில், படிவங்களைப் பயன்படுத்தி புதியச் சொற்களை உருவாக்கவும்.

2)ஒரு சொல்லுக்குரிய கருத்து வேறுபாடு்களை, அந்தந்த சொல்லுக்குரிய 'உரையாடல்' தத்தலில் (ஒவ்வொரு பக்கத்தின் மேலும்'உரையாடல் பக்கம்' இருக்கிறது.) தயங்காமல் தெரிவிக்கவும்.

3)பிற கருத்துக்களை, ஆலமரத்தடி என்ற பகுதியில் தெரிவிக்கலாம்.

தமிழ் மேலும் சிறக்க, தொடர்ந்து பங்களிங்க வேண்டி, விடைப் பெறுகிறேன்.
நன்றி!
ஓங்குக தமிழ் வளம் !
த*உழவன் 02:19, 10 ஆகஸ்ட் 2010 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..

விக்கிப்பீடியா

[தொகு]

அகத்திணை நூல்கள் என்பதில் தங்களது பதிவுகள் அருமை. ஆயினும், அங்குள்ளவைகளை தமிழ்விக்கிப்பீடியாவிற்கு மாற்றி, விரிவு படுத்தினால் பலரும் கற்பர். விக்சனரியென்பது, ஒரே ஒரு சொல்லுக்கு மட்டும், அறிமுக உரை போல மிகச்சுருக்கமாக எழுதுவதை வழமையாகக் கொண்டுள்ளோம். தாங்கள் தொடர்ந்து, தமிழுக்காக பங்களிக்க வேண்டி விடைபெறுகிறேன்.

  • தங்களது கருத்துப் பதிவு ஆலமரத்தடியில் 28 வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதில் உங்களது கருத்துக்கள் எனக்கு புரியவில்லை. நான் தமிழை அதிகம் கற்றவனல்ல. தமிழ் மேல் ஈடுபாடு கொண்ட ஒரு எழுத்தன். நான் கவனிக்கவேண்டிவற்றைக் கூறவும். நன்றி

--த*உழவன் 23:52, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

அன்புள்ள தகவலுழவன்! தங்கள் அடக்கம் 'நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் போல உள்ளது. தமிழில் சொற்களை 4 வகையாகப் பாகுபடுத்துவர். பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்பன அவை. உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் உரிமை பூண்டு வரும். அதாவது பெயருடனோ, வினையுடனோ இணைந்து வரும். பெயர்+உரி, வினை+உரி என்னும் பாகுபாடுகள் தேவையில்லை. அதில் இடம்பெறவேண்டிய பாகுபாடு இடைச்சொல். இதற்குத் தனியே வார்ப்புருவில் இடம் ஒதுக்கித் தாருங்கள். தொல்காப்பியத்தில் உள்ள இடைச்சொல், உரிச்சொல் பட்டியலையும், இரண்டிற்கும் இடையேயுள்ள வேறுபாடுகளையும் விக்கிப்பீடியாவில் இன்னும் ஓரிரு வாரங்களில் காணலாம். அதன் பின் அவற்றின் பயன்பாடு தெளிவுறும். --Sengai Podhuvan 19:36, 27 ஏப்ரல் 2011 (UTC)

பங்களிப்புகள் - ஒரு வேண்டுகோள்

[தொகு]

தங்களின் பங்களிப்புகளைக் கண்டு மிக்க மகிழ்ச்சி. பங்களிக்கும்போது அனைவரும் பின்பற்றும் பக்கவடிவத்தைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். எடுத்துக்காட்டாக உங்களின் மான்றல் பக்கத்தை நான் மாற்றியுள்ளேன். ஏற்கனவே உள்ள ஒரு பக்கத்தை நகலெடுத்து மாற்றிப் புதுப்பக்கத்தை உருவாக்கலாம். நன்றி. பழ.கந்தசாமி 23:31, 25 ஏப்ரல் 2011 (UTC)

  • தகவலுழவன் ஒரிரு மாதங்களாக இங்கு வர இயலாமல் இருக்கிறார். விரைவில் வருவார் என எதிர்பார்க்கிறோம்.
  • புதுப் பக்கங்களை அனைவரும் பின்பற்றும் வடிவத்தில் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். சீரான வடிவத்துக்கும், பக்க எண்ணிக்கை உயரவும் இது அவசியம். நன்றி.

பழ.கந்தசாமி 00:45, 26 ஏப்ரல் 2011 (UTC)

பயன்பாடு பற்றி

[தொகு]
  • புறநானூறு முதலிய இலக்கியப் பயன்பாடுகளை இலக்கியப் பயன்பாடு பகுதியில் குறிக்கவும். நன்றி. அப்படிக் குறிக்கையில் முன்னுள்ள மூன்று புள்ளிகளை நீக்கவும். பழ.கந்தசாமி 01:10, 27 ஏப்ரல் 2011 (UTC)

இடைச்சொல்

[தொகு]

பொதுவன் ஐயா, இடைச்சொல்லுக்கு வார்ப்புருவில் இடம் ஒதுக்கியுள்ளேன் (உரிச்சொல்லுக்கு கீழே உள்ளாது). பயன்படுத்திப் பாருங்கள்--Sodabottle 06:07, 27 ஏப்ரல் 2011 (UTC)

அன்புள்ள சோடா பாட்டில்! வார்ப்புருவில் இடைச்சொல் கட்டம் இன்னும் வரவில்லை. உதவுங்கள். --Sengai Podhuvan 19:11, 27 ஏப்ரல் 2011 (UTC)

சேர்த்திருக்கிறேன் ஐயா, “தமிழ் இடைச்சொல்” என்ற பெயரில் உள்ளது.--Sodabottle 04:43, 28 ஏப்ரல் 2011 (UTC)

அன்புள்ள சோடாபாட்டில்! இடைச்சொல் கட்டம் சேர்ந்துள்ளது. உதவிக்கு நன்றி. சேர்க்கை தொடரும். --Sengai Podhuvan 09:45, 28 ஏப்ரல் 2011 (UTC)

படு பக்கம்

[தொகு]

அப்பக்கத்தை நீங்கள் கேட்டபடி வடிவமாற்றம் செய்துள்ளேன், பார்க்கவும். நன்றி. 05:56, 29 ஏப்ரல் 2011 (UTC)

விக்சனரி நிருவாகி தேர்தலில் வாக்களிக்க வேண்டல்

[தொகு]

வணக்கம். நடைபெறும் விக்சனரி நிருவாகி தேர்தலில் தங்கள் வாக்கு அல்லது கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி--ரவி 06:49, 4 மே 2011 (UTC)Reply

நன்றி

[தொகு]

ஐயா நீங்கள் பொருந்‎, வெரிந்‎, உரிஞ், ஙனம்‎ போன்ற சொற்களை இங்குப் பதிவுசெய்ததைக் கண்டு மிகவும் மகிழ்கின்றேன். என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்! உங்கள் பங்களிப்புகள் இங்கு நிலைக்கும் ஐயா!--செல்வா 00:30, 13 மே 2011 (UTC)Reply

அன்புக்குக் கடப்பாடு. --Sengai Podhuvan 11:52, 13 மே 2011 (UTC)Reply

கனடிய சொற்பதிவேற்றம்

[தொகு]

கனடிய நண்பரின் சொற்கோவைப் பதிவேற்றத்தை, நாம் துவங்கலாமா? இங்கு உங்கள் ஆலோசனையையும் தரக் கோருகிறேன்.--15:43, 22 மே 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

அக இணைப்பு

[தொகு]

நீங்கள் தமிழின் இடைச்சொற்களை வளர்ப்பது கண்டு மிகிழ்ச்சி. உங்கள் பலவேலைகளுக்கும் இடையில், இங்கும் வருவதற்கு நன்றி. ஒரு சிறிய மேம்பாட்டை உங்கள் பதிவில் மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே இங்குள்ள சொற்களுடன், ஒரு சொல்லிலாவது, அக இணைப்பை (internal link) ஏற்படுத்துங்கள்.(எ. கா.) ஆங்க --03:17, 29 சூலை 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

கையோடு -சொல்வகை ?

[தொகு]

கையோடு என்பதில் இரண்டாவதாக வரும் கையோடு கூட்டிவா என்பதில் வரும் கையோடு என்பது உரிச்சொல்லா? அல்லது இடைச்சொல்லா?--16:24, 1 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

திருக்குறள் சொற்கள் விரிவாக்கம்

[தொகு]

இப்பகுப்பில் உள்ள சொற்களை விரிவாக்க எண்ணுகிறேன். நான் அவ்வப்பொழுது செய்கிறேன். ஒரேயெரு குறளை மட்டுமே முழுமையாகப் பதிவேற்றினேன்.அது யாதெனில்,

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

உங்களது மேற்பார்வையில், அனைத்து குறள்களுக்கும் உருவாக்க எண்ணம். என் எண்ணம், வண்ணமாக மாற, உங்கள் ஆலோசனைத் தேவை. ஏதேனும், விரிவான புத்தகங்கள் உள்ளனவா?என்னால் பிரித்தறிய இயலவில்லை.உதவுக!திருக்குறளில் சொற்தேடல் போன்ற சில இணையங்கள் முழுப்பொருளையேத் தருகின்றன. சொற்களுக்குத் தருவதில்லை. இத்திட்டத்தால், விக்சனரிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. நவம்பர் அன்று நடக்க உள்ள இந்திய விக்கி மாநாட்டிற்காக தமிழ்-ஆங்கிலம் சொற்களை அதிகரிக்க எண்ணுகிறேன். அதன் ஒரு பகுதியே இந்த முன்மொழிவு. தற்பொழுது ஆங்கிலம்-தமிழ் சொற்களே அதிகம். தமிழ் விக்சனரியில், தமிழ் சொற்கள் குறைவாக இருப்பது எனக்கு நெருடலாக உள்ளது. எதிர்நோக்கும்.--06:32, 10 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

அன்புள்ள தகவலுழவன் அவர்களுக்கு வணக்கம். நல்ல முயற்சி. கவலை வேண்டா. சாமி.வேலாயுதம் பிள்ளை என்பவர் தொகுத்தளித்த 'திருக்குறட்சொல்லடைவு' (1952) என்னும் நூல் உள்ளது. அதில் 4300 சொற்கள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் இடைச்சொற்களும் உரிச்சொறகளும் உள்ளன. ஒரு சொல்லின் பல்வேறு வகைப்பாடுகள் தனித்தனியாக எண்ணிக்கையில் வந்துள்ளன. சரியாக வகைப்படுத்தி எண்ணினால் 1000 முதல் 2000 வரை வரலாம். அவற்றை வகைப்படுத்திப் பேச்சுப்பகுதியில் வேண்டிய குறிப்புகளுடனும், குறள் எண்களுடனும் தங்களுக்குத் தந்துவிடுகிறேன். உரியவாறு, உரிய இடத்தில் பதிவேற்றம் செய்யவேண்டிய பணியைத் தங்களிடம் ஒப்படைக்கிறேன். தங்களின் தொண்டு சிறக்கட்டும். அன்புள்ள --Sengai Podhuvan 20:53, 10 ஆகத்து 2011 (UTC)Reply

மிக்க மகிழ்ச்சி. ஒரு வேண்டுகோள்.என்னை , த*உழவன் என்று மட்டும் அழைக்க வேண்டுகிறேன். ஏனெனில்,உங்களின் முன்னே எனது வயது, படிப்பு, அனுபவம் மிகக் குறைவு.திருக்குறட்சொல்லடைவு' என்ற தலைப்பில், கூகுளில் தேடிப் பார்த்தேன். பலபயனுள்ள தகவல்கள் கிடைத்தது.( விலை தெரியவில்லை?). இந்த இழைமிகவும் பயனுள்ளதாக இருந்தது.ஔவைக்குறள் பற்றி அறிய எண்ணம். இரண்டுக்கும் என்ன வேறுபாடு?அப்புத்தகத்தையும்,கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் குறள் புத்தகத்தையும் வாங்குவேன். சாமி.வேலாயுதம் பிள்ளை புத்தகத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா? நீங்கள் கொடுத்துள்ள சொற்கோவை அப்படியே அதில் உள்ளதா? ஏன் கேட்கிறேன் என்றால் உங்களுக்கு என்னால் எந்த வேலைப்பளுவும் இருக்கக் கூடாது என்றே எண்ணுகிறேன்.

இப்பொழுது தமிழ் சொற்களை அதிகரிக்கும் பணியில் முனைப்பாக உள்ளேன்.முக்கால்வாசி வேலை முடிந்து விட்டது.அதனால், திருக்குறள் பணியில் கவனம் செலுத்த இயலவில்லை.இருப்பினும் அதற்குரிய சொற்கள், பதிவேறவிருக்கும் சொற்களிலும் இருக்கும்.எனவே, நீங்கள் ஒரு அதிகாரச் சொற்களையாவது, அசைகளைப் பிரித்து, அதிலுள்ள சொற்களை உருவாக்கினால் சிறப்பாகும். நான் அதனை முன்மாதிரியாக வைத்து செயல்படுவேன். நன்றி. வணக்கம்.--05:23, 11 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

அன்புள்ள தகவலுழவன்! பூவில் தேன் உண்பது தேனீக்கு வேலைப் பளுவா? திருக்குறட் சொல்லடைவு எப்படி இருக்கும் என்பதைப் படத்தில் பாருங்கள். அகம், அகன் அகிய இரண்டு சொற்கள் அதில் காட்டப்பட்டிருக்கும். "அகன் அமர்ந்து" என உயிர் வரும்போது வரும். "அகம் குன்றி" (277) என உயிர்மெய் வரும்போது வரும். வை அகம் (வையகம்) வான் அகம் (வானகம்)(101) என வரும்போது இடத்தைக் குறிக்கும் ஒட்டு எனக் காட்டப்பட்டிருக்கும். அகப்பட்டி (1077) எனபது அகம் பட்டி எனக் காட்டப்பட்டிருக்கும். சிறுபட்டி (கலித்தொகை 51-4, 84-20) என்னும் சொல் நெஞ்சில் வஞ்சகமில்லாது குறும்பு செய்பவனைக் குறிக்கும். அகப்பட்டி என்னும் சொல் நெஞ்சில் வஞ்சகத்தோடு செயலாற்றுபவனைக் குறிக்கும. இப்படிப்பட்ட ஒப்புநோக்க ஆழத்தை அந்த நூலில் காண இயலாது. சாமி வேலாயுதம் பிள்ளை காலத்தில் ஒப்புநோக்க வசதி ஒல்லை. எனவே புதிதாக ஒப்புநோக்கிச் சொற்களைத் தொகுப்பதே நல்லது. திருக்குறள்-சொல்லடைவு என வரும்போது ஒவ்வொரு பாலாக அணுக இயலாது. சாமி வேலாயுதம் பிள்ளையை அடியொற்றிச் சொற்களைத் தொகுத்துத் தங்களுக்கு உதவுவது என் திட்டம். பயன்படுமேல் நலம். --117.193.199.120 21:10, 13 ஆகத்து 2011 (UTC)Reply
அன்புள்ள தகவலுழவன்! பூவில் தேன் உண்பது தேனீக்கு வேலைப் பளுவா? படிமம்:திருக்குறட் சொல்லடைவு
எப்படி இருக்கும் என்பதைப் படத்தில் பாருங்கள். அகம், அகன் அகிய இரண்டு சொற்கள் அதில் காட்டப்பட்டிருக்கும். "அகன் அமர்ந்து" என உயிர் வரும்போது வரும். "அகம் குன்றி" (277) என உயிர்மெய் வரும்போது வரும். வை அகம் (வையகம்) வான் அகம் (வானகம்)(101) என வரும்போது இடத்தைக் குறிக்கும் ஒட்டு எனக் காட்டப்பட்டிருக்கும். அகப்பட்டி (1077) எனபது அகம் பட்டி எனக் காட்டப்பட்டிருக்கும். சிறுபட்டி (கலித்தொகை 51-4, 84-20) என்னும் சொல் நெஞ்சில் வஞ்சகமில்லாது குறும்பு செய்பவனைக் குறிக்கும். அகப்பட்டி என்னும் சொல் நெஞ்சில் வஞ்சகத்தோடு செயலாற்றுபவனைக் குறிக்கும. இப்படிப்பட்ட ஒப்புநோக்க ஆழத்தை அந்த நூலில் காண இயலாது. சாமி வேலாயுதம் பிள்ளை காலத்தில் ஒப்புநோக்க வசதி ஒல்லை. எனவே புதிதாக ஒப்புநோக்கிச் சொற்களைத் தொகுப்பதே நல்லது. திருக்குறள்-சொல்லடைவு என வரும்போது ஒவ்வொரு பாலாக அணுக இயலாது. சாமி வேலாயுதம் பிள்ளையை அடியொற்றிச் சொற்களைத் தொகுத்துத் தங்களுக்கு உதவுவது என் திட்டம். பயன்படுமேல் நலம். --117.193.199.120 21:10, 13 ஆகத்து 2011 (UTC)Reply

திருக்குறட்சொல்லடைவு

[தொகு]
  1. அஃகாமை அஃகு ஆ மை 178 \ அஃகி அஃகு இ 175 \ சுருங்கு
  2. அகடு = வயிறு 936
  3. அகம் = மனம் 702, 745, 93, 3, 9, 824, மேலும் பல
  4. அகரம் 1 எழுத்து
  5. அகல் = விரிவு 25, 478, 1226, 691 அகலம் 743 தன்வினை \ அகறல் - பெயர் 1325
  6. அகழ் அகழ்வார் 151
  7. அகன் - நெஞ்சம் 84, 92 உயிர் வரும்போது \ அகனமருந்து \ அகம் உயிருமெய் வரும்போது
  8. அங்கணம் - அங்கநம் வடசொல் 720
  9. அசை = துவள் 1098 \ அசாவாமை அசாவு ஆ மை = தளராமை 611 \ அசைஇ 1040
  10. அச்சம் 504 --- \ அஞ்சுமவன் 727 பெயராக்க முறைமை \ அஞ்சான் 647, 686
  11. அச்சு 475, 667
  12. அஞர் = கொடுந்துன்பம் 1086, 1179
  13. அடக்கம் 126 --Sengai Podhuvan 20:53, 10 ஆகத்து 2011 (UTC)Reply

Invite to WikiConference India 2011

[தொகு]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Sengai Podhuvan,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

தமிழ் அமுது

[தொகு]

ஒவ்வொரு தமிழ் சொல்லிலும், தமிழ் அமுதாகிய இலக்கிய மேற்கோள்களைச் சேர்ப்பது கண்டு, மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.மிக்கநன்றி. --19:18, 17 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

சொல்லின் கறபனைப் பொருளை விடுத்து உண்மையான பொருளை உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பாராட்டுக்கு நன்றி. --Sengai Podhuvan 19:29, 17 ஆகத்து 2011 (UTC)Reply
  • பொதுவன் ஐயா, 'அருஞ்சொற்பொருள்'களை விக்சனரியில் சேர்த்துவருவது கண்டு பேருவகை கொள்கிறோம். பொதுவன் பூக்களைக் கோக்கும் நாராக விக்சனரி நறுமணம் கமழட்டும். நன்றி. பழ.கந்தசாமி 21:38, 17 ஆகத்து 2011 (UTC)Reply
அன்புள்ள கந்தசாமி, தங்கள் அன்பின் அடிப்பொடியாகச் செயல்படுவேன். --Sengai Podhuvan 18:13, 18 ஆகத்து 2011 (UTC)Reply

புதிய தமிழ் படிவம்

[தொகு]

புதிய தமிழ் சொற்களைச் சேர்க்கும் போது, {{மொழிப்பெயர்ப்பு}}என்ற வார்ப்புருவிற்கு மாற்றாக,=====மொழிப்பெயர்ப்புகள்===== என்பதனைப் பயன்படுத்தக் கேட்டுக்கொள்கிறேன்.வணக்கம்.--06:57, 20 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

நன்றி. இப்படி ஆற்றுப்படுத்தினால்தான் செம்மை பெறலாம். --Sengai Podhuvan 07:34, 20 ஆகத்து 2011 (UTC)Reply

சேர் வடிவத்தை, ஒன்றிற்கும் மேற்பட்ட பொருள்வரும், அனைத்து தமிழ் சொற்களுக்கும் மாதிரியாக கொள்ளலாமா?--04:42, 22 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

சேர் என்னும் உரிச்சொல் விளக்கத்தைச் செம்மைப்படுத்தியுள்ளீர்கள். நன்றி. ஏனைய சொல் விளக்கங்களும் சரியே.--Sengai Podhuvan 01:28, 23 ஆகத்து 2011 (UTC)Reply
இதன் வடிவமைப்பு சிறப்பாக உள்ளது. தொடர்ந்து பின்பற்றுவது சாலச் சிறந்தது. --Sengai Podhuvan 01:31, 23 ஆகத்து 2011 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sengai_Podhuvan&oldid=998625" இலிருந்து மீள்விக்கப்பட்டது