பாகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


இல்லை
(கோப்பு)

.

பொருள்

பாகு, (பெ)

  1. பகுதி. (W.)
  2. பிச்சை
    • பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கி (தேவா. 54, 4)
  3. கரை. (அக. நி.)
  4. சத்தி. (அக. நி.)
  5. குழம்பான உணவு. (திவா.)
    • பொரிக்கறி பளி தம்பாகு புளிங்கறி (பிரபுலிங். ஆரோ கண. 34).
  6. இளகக் காய்ச்சிய வெல்லம்
    • ஞானக் கரும்பின் றெளி வைப். பாகை (திருவாச. 9, 15).
  7. சர்க்கரை. (பிங்.)
  8. பால். (சூடாமணி நிகண்டு)
  9. பரணி என்னும் விண்மீன். (அக. நி.)
  10. பாக்கு
    • குற்றபாகு கொழிப் பவர் (கம்பரா. நாட்டுப். 29)
  11. பாகன்
    • பாகுகழிந்தி யாங்கணும் பறைபட வரூஉம் வேகயானை (சிலப். 15, 46).
  12. நிர்வகிக்கும் திறன்.
    • போர்ப்பாகு தான் செய்து (திவ். திருவாய். 4, 6, 3)
  13. கை
  14. தலைப்பாகை
  15. அழகு
    • பாகா ரிஞ்சிப் பொன்மதில் (கம்பரா. ஊர்தே. 82).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. share, portion, lot, division
  2. alms
  3. bank
  4. šiva's consort
  5. Any liquid food
  6. treacle, molasses, sugar syrup
  7. Coarse sugar, palm sugar
  8. milk
  9. The second nạkṣatra
  10. areca-nut
  11. mahout
  12. art, ability
  13. arm
  14. turban
  15. beauty, charm


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாகு&oldid=1971146" இலிருந்து மீள்விக்கப்பட்டது