புன்செய்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புன்செய் (பெ)
- மழையால் கிடைக்கும் நீரைக் கொண்டு சாகுபடி செய்யும் நிலம்
- கம்பு, கேழ்வரகு, சோளம் முதலிய புன்செய்ப் பயிர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நன்செய் வயல்களில் இரண்டாம் போகத்து வேளாண்மை அப்போதுதான் ஆரம்பமாகியிருந்தது. புன்செய்க் காடுகளில் கம்பும் கேழ்வரகும் செழித்து வளர்ந்திருந்தன (சிவகாமியின் சபதம், கல்கி)
- செம்மையாதல் என்பதும் நேராதல், சீராதல் என்பவற்றைத்தான் குறிக்கிறது. நன்செய், புன்செய் என்பதில் உள்ள செய் என்பது மட்டப் படுத்தப் பட்ட, ஏற்ற இறக்கம் இல்லாத சம தளத்தையே (வயலையே) குறிக்கிறது. செய்>செய்ம்>செம் என்றுதான் சொல்லாய்வின் படி வளரமுடியும். (செம்புலப் பெயல் நீர், இராம. கி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புன்செய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +