விசயம்
Appearance
பொருள்
விசயம், (பெ)
- பொருள்
- கற்றோர் கருதும் விசயங்கட் கெல்லாம் பற்றாம் (திருவாய். நூற். 65)
- பரிவேடம். (பிங். )
- சூரியமண்டலம். (பிங். )
- கருப்பஞ்சாறு
- விசயமடூஉம் புகைசூ ழாலை தொறும் (பெரும்பாண். 261).
- கருப்புக்கட்டி, கருப்பட்டி
- விசயங் கொழித்த பூழி யன்ன (மலைபடு. 444)
- பாகு
- அயிருருப் புற்ற வாடமை விசயம் (மதுரைக். 625)
- வெற்றி
- வேண்டுபுலங் கவர்ந்த . . . விசயவெல்கொடி யுயரி (முல்லைப். 91)
- வருகை
- அவர்களுடைய விசயம் சபைக்குப் பெருஞ்சிறப் பளித்தது
- வீற்றிருப்பு
- குதிரையின் மார்பிற் காணப்படும் இரட்டைச்சுழி. (சுக்கிரநீதி, 314.)
- சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று. விசயமுத லைந்தும் (சைவச. பொது. 333)
- 135 சிகரங்களையும் 17 மேனிலைக் கட்டுக்களையுமுடைய கோயில். (சுக்கிரநீதி, 230.)
- தேவவிமானம். (W.)
- ஐயம். (யாழ். அக. )
- ஆராய்வு. (யாழ். அக. )
- தருமபுத்திரனுடைய சங்கு.
- தருமன் . . . விசயம் . . . என்றிடு மிவற்றி னுருமனைய குரலெதிர்ந்தார் (பகவற். 1, 11)
- அடைக்கலம். (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
விசயம், n.
- Subject-matter
- Halo round the sun
- solar disc
- Juice of the sugarcane
- jaggery
- treacle
- victory, triumph
- advent
- presence
- Double mark or curl on the chest of a horse
- An ancient Šaiva scripture in Sanskrit, one of 28 civākamam
- Temple with 135 towers and 17 floors
- Celestial car
- doubt
- research
- conch of Dharmaputra
விளக்கம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---விசயம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி