வெள்ளாவி
Appearance
பொருள்
வெள்ளாவி, .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வெள்ளாவி கட்டு, வெள்ளாவி போடு - put clothes in or over a pot for steaming or boiling
- தோப்புத் தெருவில் சலவைக்கடை (laundry) கிடையாது. பையில் துணியை எல்லாம் திணித்து, கில்மோர் தெரு வளைந்து திரும்பிய ஓரத்தில் பாட்டியம்மா சலவையகம் வாவாவென்று வரவேற்றது. அங்கே வழக்கம்போல் துணி வெளுக்கப் போட்டானது. சாயந்திரம் அதையெல்லாம் திருப்பி வாங்கிவர இன்னொரு முறை மலையேறினால், பாட்டியம்மா தப்பு நடந்து போச்சு தம்பி என்றாள் அவள் அழமாட்டாக் குறையாக. வெளுக்கப் போட்ட வேட்டியை வெள்ளாவி வைத்து நார்நாராகக் கிழித்து விட்டார்களா கடை சிப்பந்திகள் ? சட்டை சாயம் போய் லுங்கியிலிருந்து பஞ்ச வர்ணத்தைக் கடன் வாங்கிக் கொண்டதா? (எடின்பரோ குறிப்புகள், திண்ணை)
- அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா? உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா? - (ஆடுகளம் திரைப்படப் பாடல்)
- வண்ணாக்குடிக்கு கடைக்குட்டிப் பயலை அனுப்பிப்பார்த்தாலும் பிரயோசனம் இருக்காது. அழுக்கு எடுத்துப் போய் ஆறேழு நாட்கள் தான் இருக்கும். இருபத்தைந்து நாளைக்குள் வெள்ளை வந்தாலே பெரிசு! எடுத்துக் கொண்டு போன அழுக்கு இன்னும் மூட்டையாக இருக்குமோ இல்லை வெள்ளாவிப் பானையில் அவிந்துகொண்டிருக்குமோ? (கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம், நாஞ்சில்நாடன்)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெள்ளாவி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற