முகம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) முகம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- 1)face, 2)countenance, 3)mouth of a river, 4)entrance to a harbor, 5)honor, 6)pride, 7) `face'
விளக்கம்
- முகத்தல், முகர்தல் என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த தமிழ்ச் சொல் ஆகும்.
- உணவை முகக்கும் வாய், உயிர்க்காற்றை முகக்கக் கூடிய மூக்கு, பார்வையை முகக்கக்கூடிய கண்கள், கேட்டல் சக்தியைப் பெறும் காதுகள் ஆகிய மனிதன் உயிர்வாழ்வதற்கு வேண்டிய அனைத்துத் தேவைகளையும் முகக்கக்கூடிய - முகரக்கூடிய உறுப்பே முகம். ஆகவே, முகத்தல் - முகர்தல் என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த (காரணப்பெயர்) "முகம்' தமிழ்ச் சொல்லே! (முகம் தமிழ்ச் சொல்லே!, தமிழ்மணி, 20 பிப் 2011)
சொல்வளம்
[தொகு]- முகம் - முகவர் - முகன்மை
- முகமன், முகவரி, முகவுரை
- முகமலர்ச்சி, முகப்பொலிவு
- ஏறுமுகம், இறங்குமுகம், துறைமுகம், கழிமுகம், அறிமுகம்
- நேர்முகம் - interview
- முகபாவனை - facial expression
- முகக்கவசம் - mask
- பாராமுகம்
- முகக்கோணல், முகம்சுழி, முகச்சுழிவு
- முகராசி
- முகத்துவாரம்
- முகத்துதி
- முகச்சாடை, முகச்சாயல்
- முகத்திரை, முக்காடு, முகமூடி